உலகிலேயே பெரிய கெட்டவார்த்தை ‘ராஜபக்சே’ என்பதுதான் — தமிழக சென்சார் போர்டு ஒப்புதல்

rajapakseஉலகிலேயே பெரிய கெட்டவார்த்தை ‘ராஜபக்சே’ என்பதுதான் — தமிழக சென்சார் போர்டு ஒப்புதல்
———————————————————————————————————————————————
திரிஷா அல்லது நயன்தாரா படத்தில்….

 பள்ளிக்கால செக்ஸ், பள்ளி மாணவியே மாணவனை குடிக்க வைப்பது , உதட்டு முத்தம் , பொம்மையுடன் காமம், மேட்டர் என்ற வார்த்தை …. ”மாசக் கணக்கா லவ் பண்ணியும் நீ என்னை மேட்டர் எதுவும் பண்ணல. அதனால உன்னை பிடிக்கல ” என்று ஒரு பெண்ணே சொல்வது போன்ற வார்த்தை , அவன் ஒரு டேவிட்புள்ள , bastttttt…, “என் ரெண்டாவது காதலனோடு ஒரு தடவை செக்ஸ் பண்ணிட்டேன் ” என்று ஓர் இளம்பெண் சாதரணமாக கூறுவது ..

 pub பில் குடித்து விட்டு ஆடும் பெண் தன் போன் நம்பரை பெரிய கூட்டத்தில் சொல்லி ”ராத்திரி யார் வேண்ணா எனக்கு பொன் பண்ணலாம்” என்று சொல்வது போன்ற காட்சி, ‘வண்டி ஓட்டுவது’ என்பது உட்பட பலப் பல இரட்டை அர்த்த  வார்த்தைகள்… என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது. 

இவற்றை அனுமதித்து படத்தில் இடம் பெற வைத்து இருக்கிறது தமிழக சென்சார் போர்டு .

அதே படத்தில் இன்னொரு காட்சி

பாரில் ஒரு நபர் (படத்தின் இயக்குனர் ஆதிக்  ரவிச்சந்திரன் ) ஜி.வி.பிரகாஷ்குமாரிடம் ” என் லவ்வரோட அப்பன் என்னை ரொம்ப கேவலப்படுத்திட்டான். அவனைத் திட்ட உலகத்துலேயே கேவலமான ஒரு கெட்ட வார்த்தை சொல்லுங்க ” என்று கேட்பார் . உடனே ஜி வி பிரகாஷ் “ராஜபக்சே ன்னு திட்டுங்க பாஸ் . உலகத்துலேயே அதுதான் மிகப் பெரிய கெட்ட படுகேவலமான வார்த்தை” என்பார் . உடனே காதலியின் அப்பாவுக்கு போன் செய்யும் அந்த நபர் “போய்யா ராஜ பக்சே” என்பார்.

இதில் ராஜபக்சே என்ற வார்த்தையின் ஒலியை நீக்கி  வாயசைப்பை மட்டும் கொடுத்துள்ளது தமிழக சென்சார் போர்டு . இதுவரை தே.. புள்ள , கண்டார.. போன்ற வார்த்தைகள் வரும்போதுதான் அப்படி ஒலியை நீக்குவது நமது சென்சார் போர்டின் வழக்கம் . இப்போது அந்த வார்த்தைகளுக்கு இணையாக ராஜ பக்சே என்ற வார்த்தையையும் கருதி,  ஒலி நீக்கம்  செய்துள்ளது சென்சார் போர்டு .

இதன் மூலம் படத்தில் எந்த ஒலி நீக்கம் மற்றும் காட்சி நீக்கமும் இல்லாமல் படத்தில் இடம்பெறும் ……

பள்ளிக்கால செக்ஸ், பள்ளி மாணவியே மாணவனை குடிக்க வைப்பது , உதட்டு முத்தம் , பொம்மையுடன் காமம், மேட்டர் என்ற வார்த்தை …. ”மாசக் கணக்கா லவ் பண்ணியும் நீ என்னை மேட்டர் எதுவும் பண்ணல. அதனால உன்னை பிடிக்கல ” என்று ஒரு பெண்ணே சொல்வது போன்ற வார்த்தை , அவன் ஒரு டேவிட்புள்ள , bastttttt…, “என் ரெண்டாவது காதலனோடு ஒரு தடவை செக்ஸ் பண்ணிட்டேன் ” என்று ஓர் இளம்பெண் சாதரணமாக கூறுவது ..

pub பில் குடித்து விட்டு ஆடும் பெண் தன் போன் நம்பரை பெரிய கூட்டத்தில் சொல்லி ”ராத்திரி யார் வேண்ணா எனக்கு பொன் பண்ணலாம்” என்று சொல்வது போன்ற காட்சி, ‘வண்டி ஓட்டுவது’ என்பது உட்பட பலப் பல இரட்டை அர்த்த  வார்த்தைகள்…

இவற்றை அனுமதித்து இருக்கும் தமிழக சென்சார் போர்டு ராஜ பக்சே என்ற வார்த்தையை மட்டும் ஒலி நீக்கி இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் ?

மேற்சொன்ன விசயங்களை விட ராஜ பக்சே என்ற வார்த்தைதான் உலகிலேயே மிகப் பெரிய படு கேவலமான கெட்ட வார்த்தை என்று தமிழக சென்சார் போர்டே அறிவித்து இருப்பதாகத்தானே அர்த்தம் !

இப்படி ஒரு படுகேவலமான ஆனால் வெகு நியாயமான அவமானத்தை ராஜபக்சேவுக்குக் கொடுத்து இருக்கும் தமிழக சென்சார் போர்டுக்கு அதன் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.  . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →