தி லயன் கிங் @ விமர்சனம்

காட்டை ஆளும் சிங்க அரசன் மொசாபா . தனக்குப் பிறந்த குட்டி சிங்கம் சிம்பாவை  தனக்குப் பின் ஆட்சிக்கு வரவிருக்கும் அரசனாக அறிவிக்கிறான் . அண்ணனுக்கு அடுத்து பதவிக்கு வர விரும்பும் தம்பி சிங்கமான ஸ்கார் ,  கழுதைப் புலிகளோடு சேர்ந்து சதி செய்து அரசனைக் கொன்று பழியை சிம்பா மீது போட்டு அவனை காட்டை விட்டே ஓட வைக்கிறான் . 

வெகு தூரம் பயணிக்கும் சிம்பா அங்கே ஒரு பன்றி மற்றும் அணிலால் வல்லூறுகளிடம் இருந்து காக்கப் பட்டு அவர்களுடனே வண்டு புழுக்களை தின்று வளர்கிறான் . 
 
இறந்த அரசனின் விசுவாசிகளான ஒரு பூசாரிக் குரங்கு, ஒரு பறவை , மற்றும் சிம்பாவின் சிறுவயது தோழியான நாளா மூவரும் சிம்பாவை கண்டு பிடித்த் மனதாலும் சிங்கமாக்கி கொண்டு வந்து சித்தப்பன் மற்றும் கழுதைப்புலி படைகளோடு மோத விட நடந்தது என்ன என்பதே இந்த  லயன் கிங் . 
 
சிம்பிள் அடிமைப் பெண் படத்தில் மிருகங்கள் நடித்தால் அதுவே லயன் கிங் . 
 
முன்பு 2D அனிமேஷனில் தான் எடுத்த படத்தை அதே பெயரில் இப்போது  அட்டகாசமான 3D அனிமேஷனில் Jonathan Favreau இயக்கத்தில் Hans Zimmer இசையில் Caleb Deschanel ஒளிப்பதிவில் வழங்கி இருக்கிறது டிஸ்னி . 
 
சிறப்பான பிரேமிங், ஷாட்ஸ் கம்போசிஷன் , வண்ணம் எல்லாம் அருமை . 
 
சிம்பாவுக்கு நடிகர் சித்தார்த், வில்லன் சிங்கத்துக்கு அரவிந்த் சாமி,  நாளா பெண் குட்டி சிங்கத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் , ராணி சிங்கத்துக்கு ரோகினி , பறவைக்கு மனோபாலா , பன்றிக்கு  ரோபோ ஷங்கர், அணிலுக்கு சிங்கம் புலி குரல் கொடுத்து இருக்கிறார்கள் . 
 
மனோ பாலா, ரோபோ சங்கர் , சிங்கம் புலி சிரிக்க வைக்கிறார்கள் . ஸ்காருக்கு அரவிந்தசாமியின் குரல் ஆகா ஓகோ பொருத்தம்
 
டோரா புஜ்ஜி பாணியில் வரும் பாடல்கள் குழந்தைகளைக் கவரலாம் . ஆனால் கடமைக்கு தமிழ்ப்படுத்தி  இருக்கிறார்கள் . 
 
இடையில் கொஞ்சம் கொட்டாவி விட வைத்து அப்புறம் தம் கட்டி ஏறுகிறது Jeff Nathanson அமைத்திருக்கும் திரைக்கதை . 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *