புதுமையான போலீஸ் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ – கம்பீர கார்த்தி !

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி  உற்சாகமாகக் கூறும் கார்த்தி ,

” நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கிரகத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். 

போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

போலீஸ் அதிகார்கள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம்தான், அவர்களை ஒரு வகையான போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறது.

போலீஸ் டிரைனிங்கில் அவர்கள் போலீசாக மாற மட்டும்தான் பயிற்சி அளிக்கிப்படுகிறது.அவர்கள் எப்படிபட்ட போலீசாக இருக்கிறார்கள் என்பதை  அவர்களுடைய சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது.

நான் தீரன் படத்துக்காக சந்தித்த போலீஸ் அதிகாரி ஒருவர் முதலில் கல்லூரியில் பேராசிரியராக ஆக வேண்டும் என்று தான் முயற்சி செய்தவர் . 

ஆனால் சூழ்நிலையின் காரணமாக போலீஸ் அதிகாரியாக பணியாற்றத் துவங்கி                      உ ள்ளார். 
 
முதலில் குற்றத்தை கண்டால் அவருக்கு கோபம்தான் வரும் .பதவியேற்றதும்
அவர் கண் முன் நடக்கும் குற்றங்களைத் தட்டிக் கேட்கவும் முடிந்துள்ளது.
 
இதனாலேயே போலீஸ் வேலையை அதிகமாக நேசித்து, குற்றங்கள் நடப்பதை கட்டுப்படுத்தியுள்ளார்.
 
தீரனில் முற்றிலும் உண்மையான ஒரு போலீஸ் அதிகாரியை நீங்கள் பார்க்கலாம்.
 
சாதாரணமாக போலீஸ் அதிகாரி ஒருவர், கேஸ் ஃபைலை படிக்கும் போது எப்படி ரீயாகட் செய்வாரோ அதே அளவுதான் தீரனும்  ரீயாகட் செய்வார். 
 
 நான் சிறுத்தை படத்திற்காக ஒரு போலீஸ் அதிகாரியை சந்தித்தபோது சாதாரணமாக எதையும் எதிர்க்கொள்ளும் அவருடைய தன்மை எனக்குப் பிடித்திருந்தது . 
 
 அதை தான் பல காட்சிகளில் தீரனில் நான் கடைபிடித்துள்ளேன். இயக்குநருக்கு அது மிகவும் பிடித்திருந்தது.
 
தீரனில்  நீங்கள் வேறு ஒரு கோணத்தில் போலீஸ் அதிகாரிகளை பார்ப்பீர்கள். போலீஸ் அதிகாரிகளுக்கு தடங்கல் என்பது கிரிமினல் பக்கத்தில் இருந்து மட்டும் வராது.
 
அதிகாரிகளிடமிருந்து , சமூகத்திடமிருந்து கூட வரும். இதையெல்லாம் தாண்டிதான் ஒவ்வொரு கேஸையும் அதிகாரிகள் கையாள வேண்டியுள்ளது.
 
இதைச்  சொல்லும் போது சாதரணமாக இருக்கும். திரையில் பார்க்கும் போது உங்களை வியக்க வைக்கும்.
 
இது 1995-2005 வரைக்கும் நடந்த  சில உண்மை சம்பவங்களை  மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்.அதை ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையின் மூலம் கூறியுள்ளோம்.
 
நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும்தான் மொத்தக்  காவல் துறை நினைக்கிறோம். அது தவறு.
 
நாம் அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறோம். ஆனால் போலீஸ் அதிகாரிகள் ஒரு நாளைக்கு 22மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
 
அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு மொத்த காவல்துறையும் இப்படி தான் என்று கூறுவது தவறு.
 
மற்ற மாநில போலீஸ் அதிகாரிகளை விட தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகள் மேல் அனைவருக்கும் பயம் உண்டு.
 
ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையாகத்தான்  தீரன் படத்தை எடுத்து இருக்கிறோம். தீரனின்  வாழ்க்கையை மாற்றிய ஒரு கேஸ்தான் இந்த படத்தின் கதை.
 
நான் நடித்த கதாபத்திரங்களிலேயே எனக்கு “ நான் மகான் அல்ல “ படத்தில் நான் செய்த கதாபாத்திரம்தான் மிகவும் பிடிக்கும்.
 
என்னென்றால் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அப்படியே அந்த படத்தில் இருப்பேன்.
 
தீரன் வீட்டில் இருக்கும் போது “ நான் மகான் அல்ல “ படத்தில் வருவது போல ஒரு பையனாக இருப்பான். போலீசாக ஸ்டேஷனில் இருக்கும் போது வேறு ஒரு விதமாக இருப்பான்.
 
மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்.
 
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக என்னை காண்பித்துக்கொள்ள ஃபிட்னசையும் , நான் பார்த்த போலீஸ் அதிகாரிகளின் குணாதிசயங்களையும்  , உடல்மொழியையும் பயன்படுத்தியுள்ளோம்.
 
இப்போதுள்ள இளம் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் மீசை இல்லாமல்தான் இருக்கிறார்கள். விட்டால் அவர்கள் எல்லாம் சினிமாவில் டூயட்யே பாடலாம்.
 
நிஜமாக இன்றைய போலீஸ் அதிகாரிகளின் தோற்றம் எப்படி இருக்குமோ அப்படி தான் என்னுடைய தூரமும் இந்த படத்தில் இருக்கும்.
 
ராஜஸ்தான் மாதிரியான ஒரு flat land-ல் நாம் ஒளிந்திருந்து எதிரிகளை பிடிக்க முடியாது. மண்னுக்குள் மறைந்து தான் பிடிக்க முடியும்.
 
அதனால் தான் ட்ரைலரில் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றது. அது கிராபிக்ஸ் அல்ல நிஜம் தான்.
 
நம் சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை காணும் போது எனக்கு கோபம் வரத்தான் செய்கிறது.
 
சமீபத்தில் கந்து வட்டி பிரச்சனையால் தீக்குளித்து பெண் குழந்தையோடு இறந்த அந்த சம்பவத்தை பார்த்த போது கோபம் வந்தது.
 
இதை போன்ற சம்பவத்தை பார்க்கும் போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று தோணும்”  என்றார் கார்த்தி.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன்

புனைப் பெயர் : ராஜ திருமகன்

கல்வித் தகுதி : B.E. Mechanical

பிரசுரமான முதல் படைப்பு : கவிதை —

பெங்களூரில் நடந்த ‘பெரிய’ மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை…..
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )

பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்

மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது

விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)

விளம்பர முகவர் —ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)

கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் –மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)

சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)

நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)

பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)

சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )

தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )

நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )

நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )

திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் –ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)

நடிகர் — முழு நீள கதாபாத்திரம் — அஜந்தா (தமிழ் , தெலுங்கு )

— நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)

— கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்

பாடலாசிரியர் — அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),

முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )

அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து

தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *