பயத்தில் கைபேசியை அணைத்து வைத்த , தீரன் பட வில்லன் !

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பன்னே சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்த ரோஹித் பதக் படம் பற்றிய  தன் அனுபவங்களை இங்கே கூறுகிறார்… 

“கார்த்தி போன்ற தலைசிறந்த நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. . நானும் கார்த்தியும் அவரவர் திரைத் துறையை பற்றி அதிகம் விவாதிப்பது உண்டு.

அவர் மிகவும் அமைதியானவர் , என்னோடு நட்பாக பழகுவார். முக்கியமான காட்சிகளில் எனக்கு உதவுவார்.

சில நேரங்களில் நான் மிகவும் பயங்கரமான சண்டை மற்றும் சேசிங் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும்.

பஸ் மேல் படமாக்கப்பட்ட பரபரப்பான ஆக்சன் காட்சியை படம்பிடிக்க 9 முதல் 10 நாள் ஆகியது.

தினமும் அந்த காட்சியை படமாக்கும் போது நானும் கார்த்தியும் பஸ் மேல் ஏறி அமர்ந்திருப்போம்.

இந்த காட்சியை படமாக்க ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் எங்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு தந்தார். இப்போது நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன்.

சண்டை காட்சியை படமாக்கும் போது தன்னுடைய உதவியாளர்களை என்னோடு இருக்குமாறு கூறி பாதுகாப்பாக அக்காட்சிகளை படம்பிடித்தார் தினேஷ்.

நான் எப்போதும் படபிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னேரே படப்பிடிப்புத் தளத்துக்கு சென்று விடுவேன்.

இயக்குநர் வினோத் தான் எப்போதும் படபிடிப்பு தளத்துக்கு முதல் ஆளாக வருபவர். நான் சீக்கிரம் வருவதை பார்த்து.

அவருடைய உதவி இயக்குநர்களிடம் கூறி என்னை படப்பிடிப்புத் தளத்துக்கு கடைசியாக அழைத்து வருமாறு கூறினார் வினோத்.

படம் ரிலீஸ் ஆகும் நாள் அன்று என்னுடைய கைபேசியை அணைத்து  வைத்திருந்தேன். படத்துக்கு என்ன ரிசல்ட் வருமோ….

எல்லோரும் படத்தைப் பற்றி என்ன எழுதப் போகிறார்களோ என்றோ பயந்துகொண்டு இருந்தேன்….

நல்ல விமர்சனம் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது .இங்கே தென்னிந்திய சினிமாவில் எல்லாம் சரியாக உள்ளது என்றும்.

தயாரிப்பு நிர்வாகம் மிகச்சிறப்பாக உள்ளது”  என்றார் ரோஹித் பதக்.

சிறப்பு ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன்

புனைப் பெயர் : ராஜ திருமகன்

கல்வித் தகுதி : B.E. Mechanical

பிரசுரமான முதல் படைப்பு : கவிதை —

பெங்களூரில் நடந்த ‘பெரிய’ மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை…..
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )

பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்

மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது

விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)

விளம்பர முகவர் —ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)

கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் –மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)

சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)

நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)

பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)

சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )

தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )

நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )

நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )

திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் –ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)

நடிகர் — முழு நீள கதாபாத்திரம் — அஜந்தா (தமிழ் , தெலுங்கு )

— நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)

— கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்

பாடலாசிரியர் — அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),

முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )

அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து

தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *