திட்டிவாசல் @ விமர்சனம்

நாசர், மகேந்திரன், தனு ஷெட்டி, வினோத் கின்னி, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் சீனிவாசப்பா ராவ் என்பவர் தயாரிப்பில், 

பிரதாப் முரளி என்பவர் இயக்கி இருக்கும் படம் திட்டிவாசல் .  திட்டிவாசல் என்றால் சிறை வாயில் என்று பொருளாம் . சரி திட்டாமல் பார்க்க முடியுமா? பேசுவோம் 

தமிழ்நாடு கேரளா எல்லையில் குமுளி பகுதியில் உள்ள  மலை கிராமம் முள்ளங்காடு . பழங்குடி மக்கள் வாழும் அந்த ஊரின் தலைவர் மூப்பன் (நாசர் )
 

முத்து (மகேந்திரன்) — செம்பருத்தி (தனு ஷெட்டி),  குமரன்( வினோத் கின்னி) – மானசா (ஐஸ்வர்யா) என்று இரண்டு காதல் ஜோடிகள் . இதில் மானசா மலையாளப் பெண் . 

 அந்தப் பகுதியைச் சேர்ந்த – வனத்துறை  அமைச்சரான கரியப்பா (சீனிவாசப்ப ராவ்)  அந்த மக்கள் வாழும் பகுதியை, 
 
மல்டிநேஷனல் கம்பெனி ஒன்றுக்கு விற்க முடிவு செய்து விலை பேசி விட்டு அந்த பகுதி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயல்கிறார் 
 அதற்காக , கலெக்டர் , வன அதிகாரி (சேரன் ராஜ்),  போலீஸ்காரர் இவர்களை வைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் . 
 
மூப்பன் அடித்துக் கொல்லப்படுகிறார் . இளைஞர்கள் ஆயுதம் கடத்துபவர்கள் மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு, 
 
தேசிய பாதுகாப்பு சட்டப்படி ஜெயிலில் அடைக்கப் படுகிறார்கள் . 
 
எஞ்சிய மக்களுக்கு அமைச்சரே உதவுவது போல நடித்து ஆந்திரா கல்குவாரிக்கு வேலைக்கு அனுப்புகிறார் . மலைக் கிராமம் காலி ஆகிறது . 
 
முத்து, குமரன் மற்றும்  சில , ஜெயிலில் அடைக்கப்பட்ட நண்பர்களுக்கு அங்கு இருக்கும் போராளி ஒருவர் ( அஜய் ரத்னம் ) உதவுகிறார் . 
 
நண்பர்கள் போராடுகிறர்கள் . 
 
கோபம் அடையும் அதிகார வர்க்கம் நண்பர்களில் ஒருவரை திட்டமிட்டு கொலை செய்கிறது . 
 
உள்ளே நடக்கும் கொடுமைகளை குமரன் எழுதி  செம்பருத்திக்கு கொடுத்து அனுப்புகிறான் . 
அதை அவள் கலெக்டர் அலுவலகம்  பத்திரிகைகள் அலுவலகங்களின் கவனத்துக்கு கொண்டு  போயும் பலனில்லாமல் போகிறது . 
ஒரு நிலையில் அவள் தீக்குளித்து , பிரச்னையின் மீது சமூக கவனத்தைக் குவிக்கிறாள் . 
இறந்தும் போகிறாள் 
 
விசாரணையின் போது கோர்ட்டில் போராளியின் உதவியோடு நண்பர்கள் அந்த கொலையை நாடகமாக நடித்துக் காட்ட , போலீஸ் அராஜகம் வெளிப்படுகிறது . 
 
அதிகார வர்க்க குற்றவாளிகளை கோர்ட் அடையாளம் காட்டுகிறது . நண்பர்கள் விடுவிக்கப் படுகிறார்கள் . 
 
அதே நேரம் சட்டத்தின் சந்து பொந்துகள் மூலம் அமைச்சர் , கலெக்டர் , மற்றும் வனத்துறை, காவல்துறை , சிறைத்துறை அதிகாரிகளும்  விடுதலையாக…..
 
அப்புறம் என்ன நடந்தது என்பதே திட்டி வாசல் . 
 
காடு வனம் பின்னணியில் ஒரு படம் . 
 
மூப்பனாக வாழ்கிறார் நாசர் . 
 

செம்பருத்தி காவலர்களால் சீரழிக்கப்பட்ட நிலையில் வரும் காதல் சோகப் பாடலும் எடுக்கப்பட்ட விதமும் அருமை . பாராட்டுகள் இயக்குனருக்கு ! 

 கோர்ட்டில் நாடகம போட்டு போலீஸ் அராஜகத்தை குற்றம் சாட்டப்பட்டவர்களே சொல்வது லாஜிக்கை லக லக செய்தாலும்,  வித்தியாசமான சிந்தனை! 
 
மரணச் சடங்குகள் உட்பட சிலவற்றில் பழங்குடியினரின் பழக்க வழக்கங்களை காட்டுவது பாராட்டுக்குரியது . 
 
செம்பருத்தியாக வரும் தனு ஷெட்டி பரிதாபத்தை சம்பாதிக்கிறார் .  மானசா ஒகே .   சிறு சிறு கதாபாத்திரத்துக்கும், 
 
பொருத்தமான நடிகர்களை போட்டு இயல்பு காக்கிறார் இயக்குனர் . 
 
மகேந்திரன் , வினோத் இருவரும் செயற்கையான நடிப்பு . என்றாலும் நடிப்பில் ரொம்ப சோதிப்பவர் அமைச்சராக வரும் தயாரிப்பாளர் சீனிவாசப்ப ராவ் தான் . 
 
தாங்க முடியல . தெரிஞ்சதை மட்டும் பண்ணலாமே சார். 
 

வனம் என்பது காட்சியின் பின்னணியில் இருக்கிறதே தவிர அழுத்தமாக அந்த உணர்வுக்கு ரசிகன்  ஆட்படும்படி ஒரு காட்சி கூட இல்லை . 

 எல்லா காட்சிகளும் எக்ஸ்ட்ரா நீளம் . 
 
பலபடங்களில் பார்த்து சலித்த விஷயங்கள் ! 
 
இன்னும் நல்ல திரைக்கதை, படமாக்கல் , நடிப்பு படத் தொகுப்பு , ஒளிப்பதிவு எல்லாம் இருந்திருந்தால் ரசிகன்  திட்டி வாசலை தட்டி இருப்பான் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *