‘இளைய சூப்பர் ஸ்டார்’ தனுஷ் — ‘தொடரி’ photo gallery and news

Thodari Audio & Trailer Launch Stills (37)

Picture 1 of 72

சத்யஜோதி  பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்க,

தனுஷ் , கீர்த்தி சுரேஷ் , தம்பி ராமையா நடிப்பில்

பிரபு சாலமன் இயக்கி இருக்கும் தொடரி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்

பல  சுவாரஸ்யமான விஷயங்கள் . 

முதலில் ரயிலுக்கு  புகை வண்டி என்று புகை படிந்த தமிழ் வார்த்தைக்குப் பதிலாக,
 தொடரி என்ற சரியான சொல்லை பயன்படுத்தி இருக்கும் பிரபு சாலமனுக்கு வாழ்த்துகள் . 
படத்தின் பாடல்களும் முன்னோட்டமும் நிகழ்வில் திரையிடப்பட்டன . 
தொடரியில்  வரும் தீவிரவாதிகள் , அவர்களை பிடிக்க வரும் தீவிரவாத தடுப்புப் படை ,  
அந்த தொடரியில் உள்ள உணவகத்தில் வேலை செய்யும் பூச்சியப்பன் என்ற இளைஞன் ,
 தமிழும் மலையாளமும் தெரிந்த ஓர் இளம்பெண்  இவர்களை சுற்றி நிகழும் கதை என்பது,
 முன்னோட்டத்தில் தெரிந்தது .
தொடரியின்  உணவாக மேலாளராக தம்பி ராமையா .
பயணச்சீட்டு  பரிசோதகராக இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் 
இமான் இசையில் அமைந்த  பாடல்கள் பிரபு சாலமனுக்கான சிறப்பு  இனிமையோடு இருந்தன .
வெற்றியின் ஒளிப்பதிவில் காட்சிப் பதிவுகள் அருமை
(இன்னொரு  சுகுமாரை உருவாக்குகிறாரா பிரபு  சாலமன் ?)
“எவ்வளவு வேலை இருந்தாலும் தனி ஆளாக  செய்வார் பிரபு சாலமன் .
அந்த வகையில் அவர்  பிரபு solo man “என்றார் படவா கோபி 
தனுஷுக்கு இளைய  சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தார் தம்பி ராமையா . 
“நடிப்பில் கமல் ஹீரோயிசத்தில் ரஜினி இரண்டும் சேர்ந்து அமைந்த கலவை தனுஷ் ” என்று,
 பாராட்டினார்கள் , ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் 
“நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு எல்லா கதாபாத்திரங்களையும் ஏற்று ,
சிறப்பாக நடிக்கும் திறமை கொண்டவர் தனுஷ் ” என்றார் கலைப்புலி எஸ் தாணு (ம்ம்ம்ம்.. புரியுது .. புரியுது )
“காட்சிகளைப் பார்க்கும்போதே இது வெற்றி பெறும் என்பது புரிகிறது ” என்றார் வசந்த பாலன் 
“தனுஷுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பது அனைவருக்கும் தெரிஞ்ச விஷயம் .
ஆனா அவங்க தேதி கேட்டபோது வெற்றி மாறன் படத்தை முடிச்சுட்டுதான் வருவேன் .
வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டார் . 
அந்த அளவுக்கு அவர் தமிழ் சினிமாவுக்கு முக்கியத்துவம் தருகிறார் ” என்றார் பார்த்திபன் 
இயக்குனர் செல்வராகவன் பேசும்போது ”  பிரபு சாலமன் மட்டும் ,
எப்போ கால்ஷீட் கேட்டு வந்தாலும் யோசிக்காம கொடுத்துடுன்னு தனுஷ் கிட்ட சொல்லி இருந்தேன் ” என்றார்  
பிரபு சாலமன் தன் பேச்சில் ” தனுஷ் சாரை நான் பார்த்த உடன்,
 எப்போ தேதி வேணும்னு மட்டும் சொல்லுங்க’ என்றார் . 
கும்கியில் சில யானைகளை கட்டி மேய்ச்சோம்.  
ஆனா  ரயிலை வச்சு  படம் எடுப்பது ஆயிரம் யானைகளை கட்டி மேய்க்கிற மாதிரி .
ஆக, எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பால்தான்  இந்த படம் சாத்தியப்பட்டது . 
அதுவும் தனுஷ் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது ஒரு இடததில் ,
சரியாக தங்க வசதி இல்லாத சூழ்நிலையில் நான்கு நாட்கள் கேரவானிலேயே தங்கி,
 நடித்துக் கொடுத்தார் . “என்றார் .
தனுஷ்  தன் பேச்சில் ” இங்கு என்னை பலர் பலவாறாக புகழ்ந்தார்கள்.
அதில் உண்மையும் உண்டு . அதீத அன்பு காரணமான சில  வார்த்தைகளும் உண்டு .
எனவே அனைவருக்கும்  நன்றி 
எனக்கு நடந்த ஒரு விபத்துக்குப் பிறகு எனக்கு உயரத்தில் நிற்பது என்றால் பயம் . 
இந்தப் படத்தில் ரயில் மீது நிற்கிற மாதிரியான பல காட்சிகள் .
எனக்கு பயமாகத்தான் இருந்தது .
ஆனால் எனக்கு முன்பாக பிரபு சாலமன் ரயிலில் ஏறி நின்று,
 என்ன செய்யவேண்டுமோ  அதை செய்து காட்டுவார் . 
அப்படி எனக்கு தைரியம் கொடுத்ததோடு மிகுந்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்தே நடிக்க வைத்தார் . 
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் என்னை விட சிறப்பாக நடித்துள்ளார் . அவருக்கு விருது நிச்சயம் ” என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →