உஷா சினி கிரியேஷன்ஸ், ரக்ஷாந்த் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விவேக் ராஜ், மோனிஷா சின்னகொட்லா நடிப்பில் நாகேஸ்வரன் இயக்கி இருக்கும் படம் .
மருத்துவ பிரதிநிதியாக இருக்கும் கிராமத்து இளைஞன் ஒருவனை ( விவேக் ராஜ்) , அவனது அத்தை மகள் நேசிக்கிறாள் . ஆனால் அவனுக்கும் , அந்த ஊருக்கு நாட்டு நலப் பணித் திட்டத்தின் குழுவோடு வரும் ஓர் பணக்கார இளம் பெண்ணுக்கும் ( மோனிஷா) காதல் வருகிறது .
அப்பாவிடம் சொல்லி கம்பெனியில் வேலை வாங்கித் தருகிறேன் வா என்று சொல்லி விட்டு காதலி கிளம்ப, சில நாட்களுக்குப் பிறகு செல்லும் நாயகன் அவளது திருமண விளம்பர பேனரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவளைப் பார்க்கப் போகாமல் , ஒரு நண்பன் மூலம் தானே ஒரு கம்பெனியில் வேளையில் சேர்கிறான் .
அப்புறம் என்ன ஆச்சு என்பதே படம் .
எண்பதுகளின் பாணியில் எடுககப் பட்ட படம் .
நாயகன் நாயகியின் நடிப்பு ஒகே ரகம் . நாயகனின் அம்மாவாக சீதா சிறப்பு .
சத்தில்லாத வில்லத்தனம் .
காமெடி என்ற பெயரில் கொன்னு குடலை உருவுகிறார் சிங்கம் புலி .
அறிமுக இசை அமைப்பாளர் நோவா இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன .
காதல் உருவாகும் காரணம் செயற்கை . அதன் பின் வரும் காட்சிகளில் லாஜிக் படுகொலை
ஒரு நிலையில் அத்தை மகள் அம்போ என்று அவுட் ஆப போகஸில் நிற்கிறார் .
காதலியின் திருமண வரவேற்பு பேனரைப் பார்த்த உடன் என்ன ஏது என்று தெரிந்து கொள்ள முயலாமல் திரும்புகிற — அதன் பின்னர் காதலியைப் பார்க்கும்போதும் , வர சொல்லிட்டு ஏமாத்திட்டியே என்று கேட்காத – ஒரு வார்த்தை கூட பேசாத நாயகன் எல்லாம்,
எந்த மியூசியத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னால் , என்ன செலவானாலும் சரி, டிக்கட் எடுத்து பார்த்துடலாம்
இன்னும் சிறப்பான திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம் தேவைப்படும் படம்
இரண்டாம் பாதியில் காதல் கோட்டை படம் ஞாபகம் வருகிறது . அந்தப் படம் என்று யாரும் சொல்லி விடக் கூடாது என்ற காரணத்தாலேயே கிளைமாக்சில் மாற்றி இருக்கிறார்கள்
அது சாலை விதிகள் குறித்த விழிப்புணர்ச்சியாக இருப்பதும் , அடுத்து வரும் உறுப்பு தானத்தை வலியுறுத்தும் காட்சிகளும் பாராட்டுக்குரியவை .