துப்பாக்கி முனை @ விமர்சனம்

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு, ஹன்சிகா, எம் எஸ் பாஸ்கர் , வேல ராம மூர்த்தி நடிப்பில் ,

பிரபல கதாசிரியர் அன்னக்கிளி செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் துப்பாக்கி முனை .நேர் முனையா ? மழுங்கலா ? பேசலாம் 

 என்கவுண்டர் போலீஸ் அதிகாரி ஒருவரின் (விக்ரம் பிரபு|) அம்மாவுக்கு (கல்யாணி) மகனின் கொலைப் பணி பிடிக்காமல் விலகிப் போய் விடுகிறார் .

காதலியின் அப்பா ( ஆடுகளம் நரேன்) வேறு வேலைக்குப் போனால்தான் மகளைக் கொடுப்பேன் என்று கூற , காதலியும் ( ஹன்சிகா) விலகிப் போகிறார் ..

என்கவுண்டர் பெயரில் கொடூரமாக நடந்து கொள்வதாக மேல் அதிகாரிகள் குற்றம் சாட்ட வேலையும் போகிறது . 

ஆனாலும்,  கோர்ட்டில் தப்பி விடுவார்கள் என்று தெரியும் குற்றவாளிகளை என்கவுண்டர் பெயரில் போட்டுத்  தள்ள
 
இவரை , மற்ற போலீஸ் அதிகாரிகளே பயன்படுத்த , என்கவுண்டர்கள் தொடர்கின்றன . 
 
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் ஒரு பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட
 
ஒரு மாவோயிஸ்டு தீவிரவாதியை என்கவுண்டர் செய்யும்  வேலை வருகிறது . 
 
அதற்காக ராமேஸ்வரம் வந்து சம்மந்தப்பட்ட நபரை போட்டுத் தள்ள நினைக்கையில் , மேற்படி பெண்ணை கொன்றது அந்த தீவிரவாதி அல்ல..
 
உள்ளூர் தாதா ( வேல ராம மூர்த்தி) ஒருவரின் மகன் மற்றும் அவனது நண்பர்கள் என்பது, கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ( எம் எஸ் பாஸ்கர்) ,மூலமே  தெரிகிறது . 
 
நிஜமான குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் அதிகாரி  முயல , அப்புறம் என்ன நடந்தது .. பிரிந்த உறவுகள் என்ன ஆயின என்பதே இந்த துப்பாக்கி முனை சட்டம் தரும் வசதியில் எதற்கெடுத்தாலும் குற்றவாளிகளை போட்டுத் தள்ளுவதும் கொலைதான் என்பதையும் ,
 
தீவிரவாதிகள் என்று அறியப் படுபவர்கள் பலர் நல்லவர்கள் , நிஜமான தீவிரவாதிகள் பலம் பொருந்திய மனிதர்களாக  பொது உலகில் இருக்கிறார்கள் என்பதையும்  சொல்ல வந்திருக்கும் படம் . 
 
அதில் வெற்றி பெறுகிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் . 
 
எல் வி கணேஷின் பின்னணி இசை , ராசாமதியின் ஒளிப்பதிவு இரண்டும் மிக சிறப்பு . கதைக்கு பொருத்தமான பணி !
 
ராமேஸ்வரம் லொக்கேஷன்கள் அருமை . 
 
ஹீரோதான் எல்லா காட்சிகளிலும் இருக்க வேண்டும் என்று இல்லாமல் , எம் எஸ் பாஸ்கருக்கு திரைக்கதையில் கொடுக்கப்பட்டு இருக்கும் முக்கியத்துவம் சிறப்பு . 
 
கிளைமாக்ஸ் பகுதியில் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன . 
 
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக முறுக்கு காட்டுகிறார் விக்ரம் பிரபு . 
 
பிரதமர் அலுவலகத்தில் அதிகாரம் மிக்க பதவியில் உள்ள பெண்ணாக ஹன்சிகா கெத்து . 
 
எம் எஸ் பாஸ்கர் நடிக்கிறார் . வேல ராம மூர்த்தி இருக்கிறார் . 
 
மாவோயிஸ்டாக நடித்துள்ளவர் , பெண்ணைக் கற்பழிக்கும் பையன்களாக நடித்து உள்ளவர்கள் கவனிக்க வைக்கிறார்கள் . 
 
பெண்ணைக் கெடுத்தவர்கள் யார் என்பதை சொல்லி விட்டு பின்னர்  அந்த தெரிந்த கதையை விலாவாரியாக சொல்வதும் ,
 
இரண்டாம் பகுதியில் யூகிக்க முடிகிற காட்சிகளும் போலீஸ் கதையில் வருகிற லாஜிக் மீறல்களும் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும் . 
 
 என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் மன உணர்வுகளுக்கு ,
 
 இன்னும் அழுத்தம் கொடுத்து இருந்தால் சொல்ல வரும் கதை அதிகம் உணரப்பட்டிருக்கும் . 
 
ஆனாலும் பெண் பாலியல் பலாத்கார பின்னணியில் என்கவுன்டர போலீஸ் அதிகாரிகளின் அராஜகத்தை பிணைத்து செய்யப்பட்டு இருக்கும் கதையால்  கவனிக்க வைக்கிறது படம் 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *