அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்லும் ‘உளிரி ‘

ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன்,  சுந்தரி,  எஸ்.யோகேஷ்  தயாரிக்கும் படம் “ உளிரி “

இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி நடிக்கிறார். 

மற்றும்  பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.     

ஒளிப்பதிவு           –        வெங்கட்                                                                                                        

எடிட்டிங்               –        சுரேஷ் அர்ஸ்                                                                                                      கலை                    –        சாமி கலைக்குமார்                                                                                                      

ஸ்டன்ட்                –        மெட்ரோ மகேஷ்

நடனம்                  –        மது மாலிக்

தயாரிப்பு மேற்பார்வை :    A நாகராஜ்

தயாரிப்பு  –  எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ்

எழுத்து, இயக்கம், பாடல்கள், இசை  – R.ஜெயகாந்தன். படம் பற்றி  பேசும் இயக்குனர் R.ஜெயகாந்தன், ”சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி ஆற்றுப் படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த “உளிரி  “ எனும் மீன்  இனமே இன்று அழிக்கப் பட்டு விட்டது.

அதுமட்டுமல்லாமல் நமது வாழ்வியல் பண்பாட்டின், பல கூறுகள் அழிக்கப்  பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவற்று, இயல்பை தொலைத்து பொய்யான முகப் பூச்சோடு உண்மை பொலிவை இழந்து காணப்படுகிறது.

நமது பண்பாட்டின் கூறாய் இருந்த இந்த காதல் இன்று அழிக்கப் பட்டிருக்கிறது. இப்படி தன் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வியல் திரைப்படமாக இந்த உளிரியை  உருவாக்கி இருக்கிறேன் .

படப்பிடிப்பு கும்பகோணம், ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” என்கிறார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *