“உள்குத்து” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

“உள்குத்து” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்  படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர்  PK FILM Factory G. விட்டல் குமார்  ,

இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர் 

நடிகர் தினேஷ் தன் பேச்சில் “நீண்ட  நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுத் தந்துள்ளது .

எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாக உள்ளனர். கபாலி படத்துக்கு பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி” என்றார்.

தயாரிப்பாளர் விட்டல்குமார் பேசும்போது, “உள்குத்து திரைப்படம் வெளியாவதற்கு முக்கியமான காரணம் கடவுளும் , விஷால் சாரும்தான். கடவுளுக்கு நன்றி விஷால் சாருக்கு நன்றி.

படம் வெளியாகுமா என்ற நிலை இருந்த போது விஷால் சார் தலையிட்டு தன்னுடைய படத்தை போல் நினைத்து இப்படத்தை வெளியிட்டு தந்துள்ளார்.

நான் இந்த படத்தை வெளியிடுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்னுடைய மனைவிதான். அவர்தான் எனக்கு ஊக்கம் தந்து இப்படத்தை வெளியிட எனக்கு உதவியுள்ளார்.

படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி நான் வெளியிடுகிறேன். அவருடைய சூழ்நிலையால் அவரால் இப்படத்தை வெளியிட முடியவில்லை.

 இந்த படத்தை ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கிய கார்த்திக்ராஜு இயக்கியுள்ளார்.   படத்தில் அட்டகத்தியில்நடித்த தினேஷ் கதாநாயகனாகவும்,  நந்திதா கதாநாயகியாகவும்,

 காமெடியனாக பாலசரவணனும்  சூப்பர் சுப்புராயன் அவர்களின் மகன் திலீப் சுப்புராயன்    முக்கிய வில்லனாகவும்ஜான்விஜய்சாயாசிங் ஆகியோரும்  நடித்துள்ளார்கள்

ஜஸ்டின் இசை அமைத்துவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்

                                                               தயாரிப்பாளர் விட்டல்

உள்குத்து படமானது தற்போதைய நாட்டின் நிலைமையை எடுத்துக்கூறும் படமாக    இருக்கும்.  ஐம்பதாயிரம் சம்பாதிப்பவர்களில் இருந்து ஒரு லட்சம் 

சம்பாதிப்பவர்கள்வரை தன் செலவுக்கு  பணம் போதவில்லை  என்று வெளியில்  

கடன் வாங்குவார்கள்.

வட்டி கட்டுவார்கள். இது எல்லா இடத்திலும் காணப்படும் உண்மை.அப்படி கடன்     வாங்குபவர்கள் எப்படி அதை சமாளிப்பார்கள் அதில் முக்கியமாக இந்த வட்டி கட்டும்   பிரச்சனையில் மீனவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை.

 நாகர்கோவில்முட்டம்கம்பம் ஆகிய இடங்களில் உள்குத்துவின் படப் பிடிப்பானது 

நடைபெற்றதுஒரு நாளுக்கு ஒரு குடும்பம்கந்து வட்டியால் பாதிப்பு அடைகிறது

அதில் ஒரு   குடும்பம் எப்படி கடனால் பாதிக்கப்பட்டு அதை எப்படி சமாளித்து 

அதிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்பது படத்தின் கரு

இது கந்து வட்டி பற்றி அழுத்தமான கருத்து சொல்லும் படம்உள்குத்து படத்தை 

இயக்குநர் சொன்ன நேரத்தில் அழகாக முடித்துகொடுத்துவிட்டார்.  

பாலசரவணன் படத்தில் மீன்  பிடித்து அதை சந்தையில் விற்பனை செய்பவராகவும்,    அவருக்கு உதவியாளராக   தினேஷும்  நடித்துள்ளனர்

                                                                                    இயக்குனர் கார்த்திக் ராஜு

பாலசரவணனின் தங்கையாக நந்திதா நடித்துள்ளார் இவர்களை சுற்றிதான் படம்   பயணமாகிறதுநான் தயாரிக்கும் முதல் படம் உள்குத்து.  

இயக்குநர்இப்படத்தின் கதையை   சொன்னதும் பிடித்து விட்டது

சமீபத்தில் வெளிவந்த ஜோக்கர்அருவி போன்ற சிறிய படங்கள் பெரிய படங்களைத்    தாண்டி நின்றதற்குகாரணம் படம் பார்க்கும் மக்களை ஈர்ப்பதுதான் 

 அந்த வரிசையில் உள்குத்து படம் கண்டிப்பாக இருக்கும்இது வரைக்கும் நடித்த     படங்களில் இருந்து தன்னைமாறுபடுத்தி காட்டியுள்ளார் தினேஷ்படத்தின் முக்கிய   வில்லனாக நடித்துள்ள திலீப் சுப்புராயன் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

 படத்தில் மொத்தம் எட்டு சண்டைகள் உள்ளதுஅனைத்துமே பார்ப்பவர்களுக்கு   நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வை தரும்எந்த ஒரு நல்ல விஷயத்தையும்,     தீய சக்தியால்கட்டுப்படுத்த முடியாது

சில சூழ்நிலையால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது கடவுளின் அருளால் வரும்   டிசம்பர் 29ல்  வெளியாகிறது “ என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *