உறைய வைக்கும் குளிரில் உருவான ‘உரு’

uru 7
வையம் மீடியாஸ் சார்பில்  வி பி விஜி தயாரிக்க , கலையரசன்,  தன்ஷிகா,  மைம் கோபி நடிப்பில் விக்கி ஆனந்த் இயக்கி இருக்கும் சைக்கோ திரில்லர் படம் உரு

 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னோட்டத்தையும் பாடல்களையும் திரையிட்டனர் .

கொடைக்கானலின் அடர்ந்த இரவில்  பொழியும் பனியில்  இறுகிய  காற்றைப் போல கனத்து விரிந்தது  படத்தின் முன்னோட்டம் . 

uru 1
பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவில் ஜோகன்  இசையில் அருமையாக இருந்தது முன்னோட்டம் .

கடும்பனியில் கொட்டும் மழையில் கலையரசனும் தன்ஷிகாவும்  மலை மண் சேறு சகதி என்று  கஷ்டப் பட்டு நடித்து இருப்பது புரிந்தது .

நிகழ்சசியில் பேசிய தயாரிப்பாளர் வி பி விஜி ”  நிறைய கதைகளைக்  கேட்ட நிலையில் விக்கி ஆனந்த் சொன்ன இந்தக் கதை பிடித்து ஆரம்பித்தோம் .

uru 3
கொடைக்கானலில் கடந்த டிசம்பர் பனிக்  காலத்தில் சுமார்  மூணு டிகிரி குளிரில் பல நாள் படப்பிடிப்பு நடந்தது . கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கலையரசனும் தன்ஷிகாவும்  கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது .  
அதுவும் ஒரு நாள் விடிகாலை மூணு மணிக்கு ஓடும் அருவியில் சில்லிட்டு ஓடும் நீரில் கலையரசனை இறக்கி  விட்டு நடிக்க வைத்தோம் .
uru 99
வேறு யாராக இருந்தாலும் இந்த அளவுக்கு  ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்பது சந்தேகமே .  என் மனமார்ந்த நன்றிகள் . விக்கி ஆனந்த் படத்தை சிறப்பாக கொடுத்துள்ளார் ”  என்றார் .

மைம் கோபி பேசும்போது ”  மிக சிறப்பான படம் இது. பலரும் திறமையோடு உழைப்பையம் கொட்டி நடித்த படம் இது விக்கி ஆனந்த் சிறப்பாக படமாக்கி உள்ளார் .

uru 88
தயாரிப்பாளர் விஜி முழு ஒத்துழைப்புக் கொடுத்தார் . டீ மானிடைசேஷன் உசத்தில் இருந்த போதும் சிறப்பாக படப்பிடிப்பு நடத்தினார் . படம் நன்றாக வந்துள்ளது ” என்றார்

இசையமைப்பாளர் ஜோகன் தன்  பேச்சில் “மிகுந்த கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட படம் இது . கலையரசன் தன்ஷிகா எல்லாம் கொடுத்துள்ள ஒத்துழைப்பையும் நடிப்பையும் பார்த்து அசந்து விட்டேன் .

uru 8
இது நிச்சயம்  ரசிகர்களுக்கு வித்தியாச அனுபவமாக இருக்கும் ” என்றார் .

தன்ஷிகா பேசும்போது ”  நாங்கள் கஷ்டப் பட்டோம் என்றார்கள் . எதில்தான்  கஷ்டம் இல்லை . படம் நன்றாக வந்தால் கஷ்டமும் சந்தோசம் ஆகி விடும் . இயக்குனர் விக்கி ஆனந்த் கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது .

எடுத்த விதமும் நம்பிக்கையாக இருந்தது . கலையரசனின் ஒத்துழைப்புக்கு நன்றி .
uru 5
தயாரிப்பாளர் விஜி கொடுத்த ஒத்துழைப்பு சிறப்பானது . எல்லோருக்கும் நன்றி ” என்கிறார் .

கலையரசன் தன பேச்சில் “இயக்குனர் விக்கி ஆனந்தை  எனக்கு பல வருடமாக தெரியும் . அவர் என்னிடம் இரண்டு மூன்று கதைகள் சொல்லி இருக்கிறார் . எல்லாமே சிறப்பானவை .

எனவே அவருக்கு படம் செய்வோம் என்பது நான்  எப்போதோ எடுத்த முடிவு . அவர் வி பி விஜி என்ற மிக சிறப்பான தயாரிப்பாளரோடு வந்தார் . அவரை மாதிரி சிறந்த தயாரிப்பாளரை பார்க்க முடியாது .
uru 4
ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கடைசிவரை இருப்பார் . டிசம்பர் மாதம் கொடைக்கானல், இரவு மூன்று டிகிரி குளிர் .
அதில் மழை , சண்டை ஆக்ஷன் என்று திரில்லான அனுபவம் இந்தப் படம் . ஜோகனின் பின்னணி அருமையாக உள்ளது  ” என்றார்

uru 3

இயக்குனர் விக்கி ஆனந்த் பேசும்போது ” உருவம் என்பதன் சுருக்கமே உரு . இன்னொரு பக்கம் உரு என்ற சொல்லுக்கு பயம் என்றும் பொருள் உள்ளது. ஆகா இரண்டு வகையிலும் கதைக்கு பொருத்தமான பெயர் இது .
வாய்ப்புக்கு கொடுத்ததோடு படம் சிறப்பாக வர உதவிய தயாரிப்பாளர் வி பி விஜி சாருக்கு நன்றி . எல்லோரையும் மிக் இந்தப் படத்தில் நிறைய கஷ்டப்படுத்தினேன் . காரணம் கதை அப்படி . இது ஒரு சைக்கோ திரில்லர் .
uru 9
ஒரு எழுத்தாளன் மிக பரபரப்பான கதை ஒன்றை  எழுத வித்தியாசமான அனுபவங்களை தேடித் போகிறான். அதை வைத்து அவன் கதை எழுத, 
ஒரு நிலையில் கதை அவனை எழுத ஆரம்பிக்கிறது . ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக  இருக்கும் ” என்கிறார்

வரும் ஜூன் 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது இந்த உரு .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *