திரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY

ஜேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் உதயா வழங்க, உதயா, பிரபு, நாசர், ஸ்ரீமான், கோவை சரளா நடிப்பில் ஆசிப் குரைஷி எழுதி இயக்கி இருக்கும் படம் உத்தரவு மகாராஜா . 

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஏராளமான நடிக நடிகையர் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள், 
 
மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டு உதயாவை உற்சாகப் படுத்தி வாழ்த்தி பாராட்டிப் பேசினார்கள் . 
 
பேசிய எல்லோரும் தவறாமல் , உதயாவின் இனிய குணம் , நட்பான சுபாவம், , எளிமை ,பிறருக்கு  உதவும் பண்பு, உழைப்பு  ஆகியவற்றோடு, 
 
இந்தப் படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பதையும் குறிப்பிட்டு மனதாரப் பாராட்டிப் பேசினார்கள். “உதயா கதாநாயகனாக நடித்த திருநெல்வேலி படத்தின் மூலம் தான் நான் சமூக கருத்துகளை நகைச்சுவை மூலம் சொல்லும் பாணியையே ஆரம்பித்தேன்.
 
அதன்  பிறகே என் மார்க்கெட் ஸ்திரமானது ” என்று கூறிய விவேக் தொடர்ந்து , ” இந்தப் படத்தின் மூலம், 
 
அவர் மிகப் பெரிய கதாநாயகனாக உயர்வார் “என்றது உதயாவுக்கு கிடைத்த நிஜமான பாராட்டுகளுக்கு  ஒரு சாம்பிள் . 
 
கலந்து கொண்ட அனைவருமே உதயா மாபெரும் கதாநாயகனாக வர வேண்டும் என்று வாழ்த்தினார்கள் 
 
அப்படி உதயாவை பாராட்டி உற்சாகப்படுத்தி வாழ்த்தியது யார் யார் என்பதை கீழே வரும் புகைப்படத் தொகுப்பில் காணவும் .
 

Pics (94)

Picture 94 of 94

(படத்தின் பாடல்களும் முன்னோட்டமும் அசத்தலாக இருந்தது . குறிப்பாக முன்னோட்டத்தில் பல கெட்டப்களில், 

 
 ஜெயிக்க வேண்டும் என்ற வெறியோடு உதயா நடித்து இருப்பது புரிந்தது. வாழ்த்துகள் உதயா ) . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *