அமேசான் பிரைமில் அசத்தும் ‘வி’

மோகனா கிருஷ்ணா இந்திர காந்தி இயக்கத்தில் தெலுங்கு திரில்லர் நாயகர்களான நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க,

நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இணைந்து நடித்துள்ள படம் ‘வி’.

க்ரைம் எழுத்தாளர் மேல் காதல் கொள்ளும் காவலரின் வாழ்க்கை இது.  சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த அவனுடைய வாழ்க்கையில், கொலையாளி புதிர்களை கொண்டு வந்து அதை தீர்க்க சொல்லும் போது,

அவன் வாழ்க்கையையே அது புரட்டிப்போடுவது மாதிரியான கதைக் களத்தைக்  கொண்ட  படம் இது.

நானியின் 25 -வது படமாகவும், வில்லனாக நடிக்கும் முதல் படமாகவும் அமைந்த இதில்  இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள்

செப்டம்பர் 5, 2020 முதல் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் தெலுங்கு திரைப்படம் V- ஐ ஸ்ட்ரீம் செய்யலாம்.

தனது 25- வது படமான ‘வி’ படத்தில் நானி போலிஸ் கதாபாத்திரத்தில் சுதீர் பாபுவுடன் இணைந்து அதிரடியான சேஸிங்க் காட்சிகளில் மிரட்டியுள்ளதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

இதனால் , அமேசான் பிரைம் வீடியோ இப்போது இந்தப் படத்தை தெலுங்கு மட்டுமல்லாது  தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி மாற்று வசனங்களோடும்  படத்தை வெளியிட்டுள்ளது. 

”எங்கள் படத்தை தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்வதன் மூலம்  ரசிகர்களை வசதியாக தங்கள் வீடுகளில் இருந்தே சொந்த மொழிகளில் படத்தை அனுபவிக்க வைப்பதில் மிகுந்த சந்தோஷமடைகிறேன் .

இது ரசிகர்களுக்கு நாங்கள் அளிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி. இந்த படத்தை நாங்கள் ரசித்து உருவாக்கியது போலவே ரசிகர்களும் இதை அனுபவித்து பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்கிறார் நானி

 ” எப்போதுமே V என் மனதிற்கு நெருக்கமான புராஜெக்டாக இருக்கும் மற்றும் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அதிகமாக இருக்கிறது.  தெலுங்கு பார்வையாளர்கள் எங்களை தங்களது அன்பினால் திக்குமுக்காட வைத்துவிட்டனர்.

மேலும் இந்த ரசிகர் வட்டத்தை அதிகமாக்க  படத்தை தமிழ், கன்னடா மற்றும் மலையாள மொழிகளில் டப் செய்து வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.  

முடிந்தவரை நிறைய மக்களை இந்த அதிரடி திரைப்படம் அவர்களின் வீட்டிற்கே சென்று  மகிழ்விக்கும் என நம்புகிறேன்” என்கிறார் இயக்குனர்   மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி .

அமேசான் ப்ரைமின் சமீபத்திய  பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை,

இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.  

ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் V-ம் சேருகிறது. அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு த ஷேடோஸ், பாட்டல் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமிலி மேன், இன்சைட் எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன்,

மற்றும் விருது பெற்ற மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான ,

டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், பிளேபாக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ் மைசெல் போன்ற போன்றவற்றுடன் இந்திய படங்களான குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, பிரஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாவும் மற்றும் பென்குயின் ஆகியவையும் அடங்கும்.

அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்பில் ப்ரைம் உறுப்பினர்கள் V -ஐ எங்கும், எந்த நேரத்திலும் பார்க்க முடியும்.

ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து  கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

ப்ரைம் வீடியோ இந்தியாவில் ப்ரைம் உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.129-க்கு கிடைக்கிறது.

புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-ல் மேலும் தெரிந்துகொண்டு 30 நாள் இலவச சேவைக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *