நவம்பர் 30 இல் திரைக்கு வரும் , விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’

ஆர் ஸ்டுடியோஸ் சார்பில்  ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  சார்பில் ஃ பாத்திமா  விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க, 
 
விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு,
 
படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி.
 
நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். 
 
‘அண்ணாதுரை’ படத்தின் பாடல்கள் வெளியான நிமிடமே விஜய் ஆண்டனியின் வலைத்தளமான ‘www.vijayantony.com ‘ – ல், 
 
இப்பட பாடல்களை மக்கள்  இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
 
ஒரே கிளிக்கில் ஒரிஜினல் தரத்தோடு டவுன்லோட் செய்து கொண்டு ரசிகர்கள் இப்பாடல்களை ரசிக்கலாம்.
 
இந்த யுக்தியை தமிழ் சினிமா வரவேற்று உள்ளது. இது பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதன்படி  படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த போதே  பாடல்களை  இணையதளத்தில் வெளியிட்டார்கள்.
 
விழாவில் படத்தின் முன்னோட்டத்தையும் பாடல்கள் இரண்டையும் திரையிட்டார்கள் .
 
தவிர விஜய் ஆண்டனியின் வழக்கமான பாணியில் படத்தின் முதல் பத்து நிமிடக் காட்சிகளையும் திரையிட்டனர். 
 
ஆக்ஷன், காதல், உறவுகளின் உன்னதம் என்று சிறப்பாக இருந்தது முன்னோட்டம் . 
 
                                                                                                                        மஹிமா

நாயகனின் குணாதிசயம் விளக்கும் அறிமுகப் பாடல் அருமையாக கருத்துக்கும் காட்சிக்கும் இருந்தது .

 ஜி எஸ் டி போல நீயும் என்னை வச்சு செய்யற ” என்று துவங்கும் பாடலில் அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகள் அசத்தின .
 
வித்தியாசமான கெட்டப்பில் அசத்துகிறார் விஜய் ஆண்டனி. 
 
 நிகழ்ச்சியில் பேசிய  அபிராமி ராமநாதன்
 
                                                                                        டயானா சம்பிகா

“நான் பேரறிஞர் அண்ணாதுரையின் தீவிர ரசிகன்.

அந்த பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இந்த படத்தை நானும் வாங்கியிருக்கிறேன்.
 
இந்த படத்தில் ரசிகர்களுக்கு தேவையான நல்ல செண்டிமெண்டும் இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக அமையும்” என்றார்
 
பாடலாசிரியர் அருண் பாரதி,   ”பறவை அமர்ந்திருப்பது கிளையை நம்பி அல்ல, சிறகை நம்பி என்ற பழமொழிக்கேற்ப   வாழ்ந்து வரும் விஜய் ஆண்டனிக்கு, 
 
சிறகாக அவரது மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருக்கிறார். படத்தில் ஜிஎஸ்டி பற்றி ஒரு பாடலில் எழுதி இருந்தேன்.
 
ஆனால் சென்சாரில் அது கட் ஆகி விட்டது ”  என்றார் . இப்போது படத்தில் ஈ எம் ஐ (E.M.I)  மாற்றி உள்ளனர்  . 
 
இயக்குனர் வசந்தபாலன்,   ”ஒவ்வொரு முதல் பட இயக்குனருக்கும் முதல் பட வாய்ப்பு என்பது சாதாரணம் அல்ல.
 
இப்போது முதல் பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் குறைந்து விட்டனர்.
 
விஜய் ஆண்டனி தான் நிறைய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அறம் போல நல்ல சினிமாக்கள் வந்து தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்.
 
இந்தப் படத்தின் இயக்குனர் சீனிவாசன் என்னிடம் வெய்யில் படத்தில் பணி புரிந்தவர் . மிகப் பெரிய திறமைசாலி .
 
வெய்யில் படத்தில் பம்பரம் விடுவது போன்ற ஒரு காட்சிக்கு லொக்கேஷன் பார்த்து வர அனுப்பினேன் .
 
மற்ற அசிஸ்டன்ட் டைரக்டர்கள் என்றால் போட்டோ எடுத்து வருவார்கள் .  சிலர் லொக்கேஷனை வீடியோ எடுத்து வருவார்கள் .
 
ஆனால் சீனிவாசன் இரண்டு பேரை அந்த லோக்கேஷனில் நடிக்க வைத்து , படம் பிடித்துக் கொண்டு வந்தார் . நான் அசந்து போய் விட்டேன் .
 
அப்போது அவர் எடுத்து வந்த ஒரு பம்பரம் சுற்றும் காட்சியை படத்திலும் அப்படியே பயன்படுத்தினேன் . நிச்சயமாக அவர் பெரும் வெற்றிகள் பெறுவார் . ” என்றார். 
 
“அண்ணா துரை என்ற பெயரை  வைத்து விட்டு, தவறான படத்தை எடுக்க மாட்டார்கள். சர்ச்சைக்காக தலைப்பு வைப்பவர்கள் அல்ல.
 
சர்த்குமாரும், விஜய் ஆண்டனியும். இந்த படத்துக்கு சர்ச்சை என எதுவும் தேவையில்லை, கதையே போதும்.
 
உங்கள் சொந்த தயாரிப்பை தாண்டி வெளி தயாரிப்பாளர்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள் விஜய் ஆண்டனி ”  என்றார் தயாரிப்பாளர் சிவா. 
 
“மோடி ஒன் இந்தியா ஒன் டேக்ஸ் என்ற கொள்கையில் தான் ஜிஎஸ்டி கொண்டு வந்தார். ஆனால் தமிழ்நாட்டில் எண்டர்டெய்ன்மெண்ட் டேக்ஸ் கூடுதலாக வசூலிப்பது, 
 
சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் பாதிக்கிறது. அரசுக்கு நெருக்கமாக இருக்கும் சரத்குமார், 
 
அதை பற்றி நமது தமிழ்நாடு அரசிடம் எடுத்து சொல்லி அதை நீக்க வலியுறுத்த வேண்டும்” என்றார் காட்ரகட்டா பிரசாத்.
 
“எந்த வீட்டில் பெண்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அங்கு வெற்றி அதிகம் இருக்கும். அந்த வகையில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருப்பது, 
 
விஜய் ஆண்டனியின் வெற்றிக்கு முக்கிய காரணம். நல்ல கதைகளாக தேர்வு செய்து படத்துக்கு படம் எல்லைகளை கடந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
 
மழை உட்பட எந்த எதிர்ப்பு வந்தாலும் அண்ணாதுரை வெற்றி பெறும்” என்றார் தனஞ்செயன்.
 
இயக்குனர் கிருத்திகா உதயநிதி. “கதைத்தேர்வில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவரே தான். காளி படத்தின் கதையை சொல்லும் முன்னர், 
 
அவரிடம் நான் வேறு ஒரு கதையை சொன்னேன், அவர் மிகவும்  வெளிப்படையாக அந்த கதை பிடிக்கவில்லை என சொல்லி நிராகரித்தார்.
 
அதுதான் அவர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது ”என்றார் . 
 
“அண்ணாதுரைனு தலைப்பு வச்சிருக்கீங்க, ரிலீஸ் நேரத்தில் ஐடி ரெய்டு வரலாம், தலைப்பை மாற்ற சொல்லி சிலர் வரலாம்.
 
ஜாக்கிரதையாக இருங்கள்” என்றார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். 
 
இயக்குனர் பாக்யராஜ். தன் பேச்சில் “விஜய் ஆண்டனியை அண்ணாதுரையாக உயர்த்தியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
 
சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், மெகா ஸ்டார் எல்லாத்துக்கும் அடிப்படை ரசிகர்கள்தான்.
 
அவள், அறம் போன்ற சின்ன படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
 
தனது உதவியாளர் சீனிவாசனின் உழைப்பை இங்கே திறந்த மனதோடு சொன்ன வசந்த பாலன் பாராட்டுக்குரியவர் . 
 
எந்த சோதனையும் எளிதாக கடந்து வரும் ராதிகா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். விஜய் ஆண்டனி மிகவும் தன்னம்பிக்கையோடு இருக்கிறார்,
 
நிச்சயம் படம் வெற்றி பெறும்”  என்றார் .
 
“ஒவ்வொரு விஷயத்திலும் விஜய் ஆண்டனி தன்னை நிரூபித்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகிறார்.
 
ஆனால் இதே தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை என தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார்கள் வந்திருக்கிறது.
 
                                                                                கலை இயக்குனர் ஆனந்த மணி

ஒரு நடிகர் 29 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். எடுத்தவரை ரிலீஸ் செய்யுங்கள் என சொல்கிறார். 

அப்படிப்பட்ட சிலர் இருக்கும் இந்த இண்டஸ்ட்ரியில் விஜய் ஆண்டனி மாதிரி இரவு பகலாக உழைக்கும் நடிகர்களை பார்க்கும்போது, 
 
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மனதுக்காகவே படம் பெரிய வெற்றி பெறும்” என்றார் ஞானவேல் ராஜா. 
 
தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் பேசும்போது “வாழ்க்கையில் உழைப்பையும், உண்மையையும் மட்டும்தான் எப்போதும் நம்புவேன். எதற்கும் பயப்படவே மாட்டேன்.
 
யார் எப்போது அழைத்தாலும் இரவு, பகல் பாராமல் அங்கு போய் உதவி செய்பவர் சரத்குமார்.
 
அவர்தான் சீனிவாசனிடம் கதையை கேட்டு, என்னையும் கதை கேட்க வைத்தார். விஜய் ஆண்டனியை எனக்கு சன்டிவி காலத்திலேயே நன்றாக தெரியும்.
 
 எனது சின்னபாப்பா பெரிய பாப்பா தொடருக்கு மியூசிக் போட்டவர் அவர். 
 
ஒளிப்பதிவாளர் தில்ராஜ்

விஜய் ஆண்டனிதான் இந்த  கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்றவுடன், அவரை  போய் கேட்க சொன்னேன்.

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் மாதிரி , எனக்கு உதவி செய்ய பலர் முன் வந்திருக்கிறார்கள்.
 
ஆனால் விஜய் ஆண்டனி எனக்காகவே படத்தை ஒப்புக் கொண்டு நடிக்க முன் வந்தார். பல உண்மையான மனிதர்கள் கொட்டிய உழைப்பு தான் இந்த அண்ணாதுரை.
 
விஜய்னு பேர் வச்சாலே பூனை மாதிரி ரொம்ப அமைதியா இருப்பாங்க, அது ஜோசப் விஜயா இருந்தாலும் சரி, விஜய் ஆண்டனியா இருந்தாலும் சரி. 
 
அண்ணாதுரை  சூர்யவம்சம் மாதிரி ரொம்பவே பாஸிடிவ்வான படம் ” என்றார் 
 
 
நடிகர் சரத்குமார்,  ” சர்ச்சைகள் இருந்தால்தான் படம் ஓடும் என்றில்லை, அண்ணாதுரை சர்ச்சை இல்லாமலேயே பெரிய வெற்றியை பெறும்.
 
அப்படிப்பட்ட கதை, திரைக்கதையை எழுதி இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கிறார். இந்த மேடையில் அரசியல் பற்றி பேசக்கூடாது என முடிவெடுத்து, 
 
நான் அண்ணாதுரையை பற்றி மட்டும் தான் பேச வந்தேன். விஜய் ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று நான் அன்றே சொன்னேன்,
 
அது மாதிரி விஜய் ஆண்டனியும் ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ஆவார். கருத்துக்களை தைரியமாக களத்தில் சொல்ல வேண்டும், ட்விட்டரில் சொல்லக் கூடாது” என்றார். 
 
                                                   இயக்குனர் ஜி . சீனிவாசன்

இயக்குனர் சீனிவாசன் ” வந்திருக்கும் எல்லோருக்கும் நன்றி . நவம்பர் 30 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது .

அன்றே தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஐம்பது படங்களில் ஒன்று என்ற இடத்துக்கு அண்ணாதுரை வரும் .  இதை நம்பிக்கையோடு சொல்கிறேன் ” என்றார் . 
நாயகன் விஜய் ஆண்டனி. தன் பேச்சில் ”ஒரு மேடையில் இன்னொருவருக்காக இரண்டு மணி நேரம் செலவு செய்வது சாதாரண விஷயம் இல்லை.
 
அப்படி எனக்கு ஆதரவாக இங்கு வந்தவர்களுக்கு நன்றி. என் வெற்றி என்பது தனி மனித வெற்றி அல்ல,  கூட்டு முயற்சி “என்றார் .
 
தயாரிப்பாளர் அலெக்சாண்டர், திருப்பூர் சுப்ரமணியம்,, இயக்குனர்கள் கௌரவ், விஜய் சந்தர், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், நாயகிகள் டயானா சம்பிகா, மஹிமா,
 
ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர், ஒளிப்பதிவாளர் தில்ராஜ், கலை இயக்குனர் ஆனந்தமணி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். 
 
நம்பிக்கையூட்டுகிறது,  அண்ணாதுரை  ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *