விஜய் சேதுபதி- ஸ்டுடியோ 9 சுரேஷ் வில்லங்கத் தொடர்ச்சி

vasanthaஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவன அதிபர் சுரேஷுக்கும் விஜய சேதுபதிக்கும் வசந்த குமாரன் படம் தொடர்பாக கொடுக்கல் வாங்கல் பிரச்னை பூதாகரமாகிக் கொண்டு இருப்பதை முதன்முதலில் செய்தியாக வெளியிட்டது நாம்தான் .

அந்த செய்தியை இந்த இணைப்பில் படிக்கலாம் . http://nammatamilcinema.com/vijay-sethupathi-refuse-to-give/

படிச்சாச்சா?

இந்த நிலையில் நேற்று (13 11 2014)  காலை நாளிதழில் வசந்த குமாரன் படம் தொடர்ந்து வளரும் என்ற ரீதியில் பட விளம்பரம் ஒன்றை சுரேஷ் கொடுத்திருந்தார் . அடுத்த கொஞ்ச நேரத்தில் விஜய் சேதுபதியிடம் இருந்து அறிக்கை ஒன்று பத்திரிக்கைகளுக்கு வந்தது .

pannaiyarum_padminiyum_latest_stills_vijay_sethupathi_aishwarya_jayaprakash_92e4008அதில் “வசந்த குமாரன் படத்தில் நடிக்க நான் ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மையே . ஆனால் சுரேஷ் அவர்களின் தவறான நடவடிக்கைகள் மற்றும் தகாத வார்த்தைகள் காரணமாக ஆறு மாதங்களுக்கு முன்பே நான் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டேன்.  வாங்கிய அட்வான்ஸ் தொகையை வட்டியுடன்  திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்றும்  கூறி விட்டேன் .

ஆனால் என்னிடம் பல கோடி ரூபாய்கள் கேட்டு தொந்தரவு செய்கிறார் . மேலும் எனக்கு மர்மமான மிரட்டல்கள் வருகின்றன. அது பற்றி  தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்கம் இவற்றில் புகார் செய்தும் உள்ளேன். அதன் பிறகும் நான்  அந்தப் படத்தில் நடிப்பதாக வந்துள்ள விளம்பரம் எனக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது. இப்போது புறம்போக்கு படத்திலும் அடுத்து தனுஷ் தயாரிக்கும் நான்தான் ரவுடி படத்திலும் நான் நடிக்க உள்ள நிலையில் , சுரேஷ் கொடுத்துள்ள விளம்பரம் எனக்கு மன உளைச்சலை கொடுத்துள்ளது .

தொடர்ந்து சுரேஷ் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவாரேயானால் அவர்மீது சட்ட ரீதியாகவும் , இனியும் மிரட்டல்கள் வந்தால் காவல்துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன் ” என்று கூறப்பட்டு உள்ளது .

விஜய் சேதுபதியின் அறிக்கை வரும் முன்னரே பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது தரப்பு நியாயத்தை சொல்ல சுரேஷ் வர, அதே நேரம் விஜய் சேதுபதியின் அறிக்கையும் வந்தது.

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சுரேஷ் “நான் விஜய் சேதுபதியை மிரட்டுவதாகவும் தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் எல்லாம் அவர் சொல்லி இருப்பது அதிர்ச்சியாகவும் மன வேதனையாகவும் இருக்கிறது.

ஆயிரங்களிலேயே சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படம் பிப்ரவரி 2013 இல் வெளியான இரண்டாவது நாளில்…

அவரை சந்தித்து முதன் முதலாக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி,  பத்து லட்ச ரூபாய் பணத்தை அட்வான்சாக கொடுத்தேன். அந்தப் பணத்தையும் ஆர் டி  ஜி எஸ் முறையில் வங்கி வழியே பரிமாற்றம் செய்தேன்   அதே ஆண்டில் ஜூன் மாசம் கால்ஷீட் கொடுப்பதாக கூறினார் விஜய் சேதுபதி .

படத்தின் பெயர் வசந்தகுமாரன் . படத்தின் இயக்குனர்  ஆனந்த் குமரேசன் விஜய் சேதுபதியின் நண்பரே . எனவே வேக வேகமாக தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்தேன். இயக்குனருக்கு முழு சம்பளத்தையும் கொடுத்தேன் .. கதாநாயகிகளாக வரலட்சுமி மற்றும்  பிந்து மாதவி , இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் என்று ஆரம்பித்து,  ஆர்ட் டைரக்டர் வரை எல்லோருக்கும் அட்வான்ஸ் கொடுக்க .. இப்படியே 80 லட்ச ரூபாய் செலவானது.

 ஸ்டுடியோ 9 சுரேஷ்
ஸ்டுடியோ 9 சுரேஷ்

விஜய் சேதுபதி சொன்ன ஜூன் மாச கால்ஷீட்டை அவருக்கு ஞாபகப்படுத்த , “இப்போ நான் சூது கவ்வும் படத்துல நடிச்சுட்டு இருக்கேன் . இதுக்காக கொஞ்சம் தொந்தியும் தொப்பையுமாக இருக்க  வேண்டி இருக்கு . உங்க படத்துல காலேஜ் ஸ்டூடன்ட் கேரக்டர்(?).   அதுக்கு கொஞ்சம் உடம்பை குறைக்கணும் . அதனால ஜனவரி 2014 இல் கண்டிப்பா கால்ஷீட் தரேன்” என்றார்  விஜய் சேதுபதி .

அதன்படி காத்திருந்து விட்டு இந்த வருடம் ஜனவரி மாதம் கால்ஷீட் கேட்க ” நான் இன்னும் கொஞ்சம் ரெடியாகணும் . அதனால மே  மாசம் கண்டிப்பா தரேன் ” என்று சொன்ன விஜய் சேதுபதி …. அப்போதும் தரவில்லை

இந்நிலையில் தனுஷ் தயாரிக்கும் நான்தான் ரவுடி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் . அப்போது என்னிடம் தனுஷ் நான் அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் கேட்டபோது கூட தனுஷுக்காகவும் விஜய் சேதுபதியின் நட்புக்காகவும் கொடுத்தேன் .

அதன் பிறகு என்னையும் எனது இணை தயாரிப்பாளர் நாசரையும் சந்தித்த விஜய் சேதுபதி ” நான் அப்ஜெக்ஷன்  சர்டிபிகேட் எல்லாம் வேண்டாம் . நான் படத்தில் இருந்து விலகிக்க றேன் . உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்காக இரண்டு கோடி ரூபாய் தர்றேன் . அதையும் இரண்டே  நாளில் தர்றேன்  . இரண்டு வருடம் கழித்து வேறு படத்துக்கு கால்ஷீட் தர்றேன்னு சொன்னார் . அப்புறம் அதையும் செய்யல

அதனால நான் எனது படத்துக்கு விளம்பரம் தந்தேன் . அதுக்காக மிரட்டுறேன் என்று சொல்வது நியாயமா? என்கிறார்.

பிரச்னை தொடர்கிறது .

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →