விளையாட்டு ஆரம்பம் @ விமர்சனம்

vilai 1

மேக் 5 ஸ்டுடியோஸ் சார்பில் ஆனந்த் உதார்கர் , கார்த்திகேயன் இருவரும் தயாரிக்க, யுவன், ஸ்ராவியா , ரியாஸ்கான் , பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிக்க,

விஜய் ஆர் ஆனந்த் . ஏ.ஆர் . சூரியன் இருவரும் எழுதி இயக்கி இருக்கும் படம் விளையாட்டு  ஆரம்பம் . விளையாடலாமா ? பார்க்கலாம்

ஐ டி நிறுவனத்தில் பணியாற்றி ஜாலியாக இருந்த நிலையில் திடீர் என கம்பெனி மூடப் பட,  வேலை இழக்கும் நண்பர்கள் யுவன், அஞ்சனா,  ஷாருக்கான் மற்றும் சிலர் ( யுவன், ஸ்ராவியா, பவர் ஸ்டார் மற்றும்  சிலர் )

அஞ்சனாவுக்கும் யுவனுக்கும் காதல் .

vilai 2

நண்பர்கள் மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க முனைகிறார்கள் . பல போராட்டங்களுக்குப் பிறகு பணமும் வருகிறது .

அஞ்சனாவின் அண்ணன் அர்ஜுன் (ரியாஸ்கான்) அராஜகமான போலீஸ் அதிகாரி . அப்பா ஆளுங்கட்சி அரசியல்வாதி .

ஒரு வீக் என்ட் பார்ட்டியில் யுவனுக்கும் அர்ஜுனுக்கும் பகை வந்து அது தொடர்ந்து வளர்கிறது . இந்த நிலையில் யுவன் அஞ்சனாவை காதலிப்பதை அறிந்த அர்ஜுன் அந்தக் காதலை உடைக்கப் பார்க்கிறான் .

அதே நேரம் புதிதாக உருவாகும் ஒரு தப்பான எம் எல் எம் கம்பெனி யுவனை இழுக்கப் பார்க்கிறது . யுவன் மறுக்கிறான். தப்பான கம்பெனிக்கு ஆதரவாக இருக்கும் அரசியல்வாதி , யுவனை மிரட்டுகிறார் .

vilai 3

அப்போதும் யுவன் மறுக்க, அர்ஜுன் யுவனை கொல்ல முயல்கிறான் . அது முடியாத நிலையில்  அர்ஜுனும் அரசியல்வாதியும் ஒரு பத்திரிக்கையாளரும் சேர்ந்து ,

மக்களை ஏமாற்றும் மோசமான எம்  எல் எம் நடத்தும் நபர் என்ற அவப்பெயரை யுவனுக்கு ஏற்படுத்துகின்றனர் .
அதை நம்பும் பொது மக்களும் யுவனையும் அவன் கம்பெனியையும் அடித்து உடைக்கின்றனர் .

சட்டத்தின் முன் குற்றவாளியாகும் யுவன் அதில் இருந்து மீண்டானா இல்லையா? ஆம் எனில் எப்படி ? யுவனுக்கும் அர்ஜுனுக்கும் இடையேயான விளையாட்டு  என்ன ஆனது என்பதே இந்தப் படம்

வேலை இழந்த ஐ டி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி நெகிழ்வு .

vilai 4

வேலை இல்லாத் திண்டாட்டம் , சுய தொழில் , நம்பிக்கை , இளைஞன் , தமிழன், இந்தியன் என்று பல வார்த்தைகள் வசனங்களில் கேட்கின்றன .

யுவன் உற்சாகமாக நடிக்கிறார் . ஆனால் நன்றாக நடிப்பது என்பது வேறு . ஸ்ராவியா பழுதும் இல்லை பலமும் இல்லை .பவர் ஸ்டார் சீனிவாசன் பற்றி எல்லாம் சொல்ல ஒன்றும் இல்லை .

எம் எல் எம் என்ற களம் புதிதே தவிர கதை ஒன்றும் புதுசு இல்லை . காட்சிகளும் புதிது இல்லை

அமரன் படத்தில் இடம் பெற்ற வெத்தல போட்ட ஷோக்குல பாட்டின் மெட்டை முதல் பாடலில் பயன்படுத்தி இருப்பதைத் தவிர ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒன்றும் கவனிக்கும்படி  இல்லை .

vilai 5

பின்னணி இசையில் இரைச்சல் அதிகம் .

எம் எல் எம் என்கிற ‘மல்டி லெவல் மார்க்கெட்டிங் கெட்ட தொழில் அல்ல; மிக நல்ல தொழில்’  என்பது படம் சொல்ல வரும் கருத்து .

அதற்கு அவர்கள் சொல்லும் ஆதாரம் ‘சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எம் எல் எம் என்பது அங்கீகரிக்கப்பட்ட தொழில் .

அதனால்தான் அந்த நாடுகளில் இருந்து யாரும் வேலை கேட்டு வெளி நாட்டுக்குப் போவதில்லை ‘ என்கிறார்கள் .

அங்கெல்லாம் எம் எல் எம் நல்ல தொழிலாக இருக்கக் காரணம் அங்கு எந்த ஏமாற்றும் செய்ய முடியாது . தவிர அங்கே தரமான பொருட்களே எம் எல் எம் மில் வருகிறது .

vilai 6

ஆனால் நம்ம ஊரில் அப்படியா ? இங்கே எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் . தவிர கண்டு பிடிப்பின் போது பல்லை இளித்த பல தயாரிப்புகளை, 

மக்கள் தலையில் கட்டுவதுதனே நம்ம ஊரில் பெரும்பாலும் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கின்  வேலை .

இந்த யதார்த்த முழுப் பூசணிக்காயை இந்தப் படம் எனும் சோற்றில்  மறைக்க முயல்வது அடிப்படையிலேயே பலவீனம் ஆகி விடுகிறது அப்புறம் மற்ற விசயங்களை பேசி என்ன பயன்?

விளையாட்டு ஆரம்பம் …. சும்மா விளையாட்டுக்கு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *