வி ஐ பி 2 வெற்றி விழா !

IMG (47)

வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து , கலைப்புலி எஸ் தாணுவின்  வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க,

 தனுஷ், கஜோல்,அமலா பால், சமுத்திரக்கனி விவேக் ஆகியோர் நடிக்க,  சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி – 2. 

 கடந்த 11 ஆம் தேதி வெளியான இந்த  படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 படம் குறித்த பத்திரிக்கையாளர்  சந்திப்பில்  நடிகர் தனுஷ், விவேக், இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த்,  தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஆகியோர்  கலந்து கொண்டார். 

IMG (60)
தயாரிப்பாளர்  எஸ் தாணு பேசும்போது  “இந்த நாளிது, இனிய நாளிது. வி.ஐ.பி படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் இருந்து அழைத்த நண்பர் அங்கே டாப் 10 ஹீரோ லிஸ்ட்டில் வி.ஐ.பி-2 படத்தின் மூலமாக தனுஷூம் இடம் பிடித்துள்ளார் என்று கூறினார்.
வி.ஐ.பி-2 தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு,
 மிகவும் பலமாக இருந்த நடிகர் தனுஷ்,இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விவேக் அவர்களுக்கு நன்றி”  என்றார் . 
 IMG (9)
விவேக் தன் பேச்சில்  “தாணு  சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. ஏனெனில் வளர்ந்து  வருகின்ற கதாநாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர்.
இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்கு கிடைத்துள்ளது. மேலும் டாப் 10 ஹீரோக்களில் தனுஷ் அவர்கள் இருப்பது பெருமையாக உள்ளது.
வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில் சொன்னது போல் “சிங்கத்தின் பாலாக இருந்தால் அதை தங்க கிண்ணத்தில் வைத்து கொடுக்க வேண்டும்”, அதே போல் தனுஷ் சிங்கத்தின் பால், தாணு  ஒரு தங்கக் கிண்ணம்.
ஒரு முக்கியக் கோரிக்கை !  பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்கள் , தாங்கள் எடுக்கும்  படங்களில் வெற்றியடையும் படங்களின்,
 IMG (32)
வியாபரத்தின் ஒரு சிறு பகுதியை கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும்” என்றார் 
இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, படம் வெற்றியடைந்துள்ளது. தாணு  சாருக்கு நன்றி, என்னை மகள் போல் பார்த்துக்கொண்டார்.
பொதுவாகவே சீக்வல் படங்கள் எடுப்பதில் பெரிய சவால் இருக்கும் அதைத் தாண்டி நான் இயக்கிய படம் வெற்றி அடைந்திருப்பது பெரிய மகிழ்ச்சி.
தாணு  சார் பாக்ஸ் ஆபிஸ் விவரம் பற்றி சொன்னபோது எனக்கு இது நான் இயக்கிய படமா என்று ஆச்சரியமாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் வி.ஜ.பி-3 ஆம் பாக்த்தையும் இயக்குவேன். ” என்றார் 
 IMG (62)
தனுஷ் பேசிய போது, ” படத்தின் கதையை இயக்குனரிடம் கொடுக்கும் பொழுதே வி.ஐ.பி-யின் முதல் பாகம் அளவிற்கு இருக்காது என்பதை சொல்லியே தான் கொடுத்தேன்.
இருப்பினும் படத்திற்கு கிடைத்த வரவேற்பு   மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. படத்திலிருக்கும் ஸ்ட்ராங்க் ஆன கதையே படம் வெற்றி பெறக் காரணம். பாஸிட்டிவிட்டிக்கு என்றைக்குமே ஒரு எனர்ஜி இருக்கும்.
அதுதான்இ ந்தப் படத்தில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒரு தாய் இல்லாத வீட்டில் ஒரு தந்தை தாயகவும் மகனுக்கு நல்ல தோழனாகவும் இருக்க வேண்டும்,
அதே போல படத்தின் இறுதியில் வில்லியாக வரும் பெண்  தோற்பது தான் வழக்கமான கிளைமாக்ஸ், ஆனால் அப்படி இருக்கக் கூடாது ஆண், பெண் இருவருமே சமம் என்று கருத்தினை வலியுறுத்திதான் ,
IMG (14)
இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வி.ஐ.பி-2 படத்திற்கு வட இந்தியாவில் 1600 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. கண்டிப்பாக ஹிந்தியிலும் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
வி.ஐ.பி-3 ஆம் பாகமும் கண்டிப்பாக உருவாகும், கண்டிப்பாக அந்தப் படம் இதை விட நல்ல வரவேற்பை பெறும்,”என்று கூறினார்.  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *