“உங்கள் மொபைல் கேமரா யாருடைய கட்டுப்பாட்டில்? ” – அதிர வைக்கும் எக்ஸ் வீடியோஸ்

ஆபாச இணைய தளமான எக்ஸ் வீடியோஸ் பெயரில் ஒரு படம் வர வேண்டும் என்றால் அது எவ்வளவு ஆபாசமான படமாக இருக்க வேண்டும்  ?
 
ஆனால் , “அதுதான் இல்லை . இது முழுக்க சமூக அக்கறை உள்ள — குறிப்பாக நமது தமிழக – இந்திய தாம்பத்யத்தின் புனிதத் தன்மையைக் காக்கவும், 
 
அதற்கு எதிராக தொழில் நுட்பத்தின் பெயரால் விளையாடும் சமூக விரோதிகளின் முக மூடியைக் கிழித்து அவர்களை கைது செய்யும் கருத்தியலை பலப் படுத்தவும், 
 
வரும் படம் இது” என்கிறார் ,  கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில்  படத்தை இயக்கிக் கொண்டு இருக்கும் சஜோ சுந்தர் . 
 
எப்படி ? 
 
“தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து, 
 
சமூக விழிப்புணர்வு நோக்கத்தில்  இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும்.
 
நம்மை வைத்து   எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது .
 
என் நண்பர் ஒருவர் எனக்கு  , தான் பார்த்த பல விதமான வீடியோக்களைப் பகிர்வார். அப்படி ஒரு முறை  அவர் அனுப்பிய வீடியோவைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
 
 ஏனென்றால் அது எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவியின் அந்தரங்க வீடியோ .அது என்னை அதிர வைத்தது மட்டுமல்ல அது பற்றித் தீவிரமாகச்  சிந்திக்கவும் வைத்தது.
 
அப்படிப்பட்டவை பற்றிய விவரம் சேகரிக்க இறங்கிய போது பல அதிர்ச்சி தரும் விஷயங்கள் தெரிய வந்தன.
 
இப்படி சிலர் வேடிக்கையாக எடுத்துக் கொள்கிற வீடியோக்கள் உலகம் முழுக்க செல்கின்றன .
 
அது தொடர்பாகப் பல கோடி வியாபாரம் நட க்கிறது. அதன் பின்னணியில் பெரிய மாபியா கும்பலே இயங்கி வருகிறது. 
 

இவை எனக்குப் புரிந்ததும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கும் சமூகத்தில் தான் நாமும் இருக்கிறோம்.

இது பற்றிய விழிப்புணர்வு ஊட்ட வேண்டியது என் கடமையாகத் தோன்றியது.

ஆபாச இணையதளங்கள் வேண்டுமா வேண்டாமா என்னது வேறு விவாதம் . 

ஒரு பெண்ணை நம்ப வைத்து அவளோடு அந்தரங்கமாக இருப்பதை அவள் அறியவோ அறியாமலோ படம் பிடித்து அவளுக்கு தெரியாமல் அதை இணைய தளங்களில் ஏற்றும் அயோக்கியர்களை  மட்டுமே நாம் அறிவோம் 

சஜோ சுந்தர்

ஆனால் ஒரு ஜோடியின் அந்தரங்கத்தை அவர் அறியாமல் படம் பிடித்து அதை பொது வெளியில் பதிந்து அவர்களை அவமானப்படுத்தும்  வேலையை தொழில் நுட்பத்துடன் உதவியோடு சிலர் செய்கிறார்கள் . 

எப்படி என்றால், சம்மந்தப்பட்ட மொபைல் போன்கள் பழுது காரணமாக சர்வீசுக்கு போகும்போது ,

அங்கே டேட்டா ரெக்கவரி முறையில் போனுக்கு சொந்தக்காரர் டெலிட் செய்த வீடியோக்களைக் கூட மீட்டெடுக்கும்  முறை என்பீர்கள் . 

இதுவும் கூட இல்லை . 

அமிதாப் பச்சன் பேத்தியும் ஷாருக்கான் மகனும் நெருக்கமாக இருக்கும் ஒரு வீடியோ வெளிவந்து பெரும் அதிர்வை உருவாக்கியதே.

அவர்கள் என்ன ? செல்போனை சர்வீசுக்கா கொடுத்து இருப்பார்கள் . 

டெல்லியும் ஆம் ஆத்மி பிரமுகர் ஒருவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருந்த வீடியோ ஒன்று வந்ததே ,

அதை என்ன அவரோ அல்லது அந்தப் பெண்ணோவா இணைய தளத்தில் ஏற்றி இருப்பார்கள் ?

பின்னே எப்படி ? அங்கே இருக்கிறது விபரீதம்!

சில சமயம் ஒரு லிங்க் அனுப்பி இதை கிளிக் செய்தால் , இலவச பரிசு உண்டு , இல்லை என்றால் சுவாரஸ்யமான விசயம் உண்டு என்று ஆர்வப்படுத்தும் செய்திகள் வருகிறது அல்லவா?

அதை ஒரு முறை கிளிக் செய்தால் போதும் . உடனே உங்கள் போனில் உள்ள எல்லா தகவல்கள் படங்கள் தானாக அவர்கள் கைக்குப் போய் விடும் . 

அதை அவர்கள் ஆபாச இணைய தளங்களில் ஏற்றி சம்மந்தப்பட்டவர்களை குலைத்து விடுகிறார்கள். 

அது மட்டுமல்ல .. அப்படி ஒருமுறை கிளிக் செய்து உள்ளே போய்விட்டால் கூடப் போதும்….

அதன் பின்னர் சம்மந்தப்பட்ட செல்போன், லாப் டாப் , கம்பியூட்டரில் உள்ள கேமரா முழுக்க முழுக்க அவர்கள் கண்ட்ரோலுக்குப் போய் விடும் .

அவர்கள் நினைக்கும் போது கேமராவை ஆன் செய்து படம் எடுக்க முடியும் .

கவர் போட்டு மறைக்கப் படாத எல்லா எல்லா மொபைல்கள் , லேப்டாப் , எல்லாவற்றிலும் இந்த ஆபத்து உண்டு 

அவற்றுக்கு உரிய நபர்  அந்தரங்கமாக இருக்கும்போது பதிவாகும் படங்களை  வீடியோக்களை அவர்கள் சூட்டு சூடாக ஆபாச இணையதளத்தில் பதிவேற்றுகிறார்கள் . 

இதனால் பாதிக்கப்படுபவர்கள்  பலர் . அப்படித்தான் அமிதாப் பச்சன் பேத்தி வீடியோவும் ஆம் ஆத்மி பிரமுகர் வீடியோவும் வெளிவந்தது . 

இது பற்றி சுப்ரீம கோர்ட்டில் வழக்கு போன போது சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதை மட்டும் தடை செய்தது . 

ஆனால் வயது வந்தோரின் வீடியோக்கள் பதிவாவதை தடுக்கும்  நடவடிக்கை வரவில்லை 

உடல் உறவுக் காட்சி இப்படி வெளியிடப்படுவதை சமூக அவமானமாக கருதாத நாடுகளில் இது பெரிய விசயமாக இல்லாமல் இருக்கலாம் . ஆனால் நமக்கு ?

ஒருவரின் அந்தரங்கத்தை இப்படி அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து பதிவேற்றுவது எப்படிப்பட்ட குற்றம்? மேற்படி சமூக விரோதிகளுக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது?

ஒரு வணிக வளாகத்தில் உள்ள கழிவறையில்  பெண்கள் வரிசையாக வந்து சிறுநீர் கழித்து விட்டுப் போகும் ஒரு வீடியோ வெளிவருகிறது .

அந்தப் பெண்களுக்கு  தெரிந்தவர்கள் பார்த்தால் அந்த பெண்களுக்கு எவ்வளவு அவமானம் . !

சம்மந்தப்பட்ட அந்த இணையதளத்தில் நமது நாட்டு மக்களின் வீடியோக்கள் இப்படி பதிவேற்றாமல் தடுக்க வேண்டும் என்பதற்கான குரலாகவும் ,

இது பற்றி வயது வந்தோருக்கு அறிவுறுத்தும் படமாகவும் இது வர இருக்கிறது . 

மற்றவர்கள் போல நீங்களும் வியாபார சினிமா எடுத்து விட்டுப் போகலாமே என்று இப்போதும் எல்லாரும் கேட்கிறார்கள். 

ஆனால் இப்போது நான்  சொல்கிறேன். எங்கள் படம் ஏ சான்றிதழ் பெரும் படம்தான் . நான் அப்படித்தான் விண்ணப்பித்தேன் . 

ஆனால் இது ஆபாசமான படமல்ல.  ஆபாசமான உலகம் பற்றி நாகரிகமாகச் சொல்லியிருக்கிறோம்.

இன்று வரும் எத்தனையோ படங்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை .

ஏதாவது கூச்சப்படுகிற மாதிரி சங்கோஜப் படுகிற மாதிரி காட்சிகள் இருக்கும். அதை விட எங்கள் படம் முகம்  சுளிக்கச் செய்யாது. 

இதைத்  தமிழிலும் இந்தியிலும் எடுத்திருக்கிறோம். “என்கிறார் 

நாயகர்கள் அபிநவ், நிஜாய், ஷான், அஜய் ராஜ் ஆகியோர், ” இந்தப் படம் சமுதாயத்துக்கு  அவசியமான படம்.சவாலான விஷயத்தை  துணிச்சலாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். 

இந்தப் படத்தை எடுக்க , நடிக்க திரையுலகம் , நண்பர்கள்  ,குடும்பம்  என எல்லாவற்றையும் தாண்டி  யோசிக்க வேண்டியிருந்தது. சமூகக் குற்றம்  பற்றி துணிச்சலாக  இப்படம் சொல்கிறது. ” என்கிறார்கள். 

நல்லதை செய்யட்டும் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *