யானும் தீயவன் @ விமர்சனம்

yaan 4

பெப்பி சினிமாஸ் சார்பில் சோபியா ஜெரோம், பெப்பிடாஜெரோம் இருவரும் தயாரிக்க, 

அஷ்வின் ஜெரோம், வர்ஷா பொள்ளம்மா , ராஜு சுந்தரம் ,பொன்வண்ணன்  நடிப்பில் பிரசாந்த் ஜி சேகர் இயக்கி இருக்கும் படம் யானும் தீயவன் . ரசிகனுக்கு யாரிவன் ? பார்ப்போம் .
சின்ன வயதிலேயே கொடூர குணம் படைத்து பல கொலைகளை செய்த பசுபதி என்ற தாதாவை (ராஜு சுந்தரம் !) என்கவுண்டரில்  போட்டுத் தள்ள,
 போலீஸ் குறிப்பாக சேலையூர்வி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் (பொன்வண்ணன்) துடிக்க,  , தாதாவுக்கு  இருக்கும் அரசியல்வாதிகள் ஆதரவு காரணமாக,  அது முடியவில்லை. 
மைக்கேல் என்ற  கிறிஸ்தவ இளைஞனுக்கும்(அஸ்வின் ஜெரோம்)   சவுமியா என்ற பிராமணப் பெண்ணுக்கும் (வர்ஷா பொள்ளம்மா) காதல் . இருவரின் குடும்பமும் அதிகார பலம் கொண்ட குடும்பங்கள்.  
yaan 1
ஒரு முறை பசுபதியின் ஆட்கள் கடற்கரையில்  சவும்யாவிடம் தவறாக நடக்க முயல, அவர்களை மைக்கேல் அடிக்க, பசுபதி தன் ஆட்களுக்கு ஆதரவாக வர அவனையும் அடிக்கிறான் மைக்கேல் . 
எனவே அவனை பழிவாங்க நினைக்கிறான் பசுபதி . 
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் கல்யாணம் செய்து கொள்ளும் மைக்கேல் – சவும்யா ஜோடி ஒரு ஊரோரமான வீட்டில் குடி இருக்க, அங்கு வரும் பசுபதி ஆட்களிடம் சிக்கிக் கொள்கின்றனர் . 
அவர்களை அணுஅணுவாக கொல்ல பசுபதி முயல, இந்த விசயத்துக்கும் அப்பாற்பட்டு பசுபதியை போட்டுத் தள்ள போலீஸ் களம் இறங்க அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த யானும் தீயவன் . 
ஒரு சின்ன கதையை எடுத்துக் கொண்டு இயல்பாக சொல்லி இருக்கிறார்கள் . பெரிதாக குறை சொல்ல ஒன்றும் இல்லை . பெரிதாக பாராட்டவும் ஒன்றும் இல்லை . 
yaan 5
ஜெரோம் கம்பீரமாக இருக்கிறார் . அழகு அங்கம்மாவாக இருக்கிறார் வர்ஷா பொள்ளம்மா . இருவரின் நடிப்பும் கூட நன்று, குறிப்பாக பசுபதியிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் ! 
எப்படி பெரிதாக குறை சொல்ல ஒன்றும் இல்லையோ , அப்படி  பெரிதாக பாராட்டவும் ஒன்றும் இல்லை . 
கல்லூரியில் மைக் பாடுவதை கும்பலில் உட்கார்ந்து சவும்யா கேட்டு வியக்கும் டி. ராஜேந்தர் காலத்து காட்சிகளை தவிர்த்து புதுமையாக யோசித்து இருக்கலாம் . 
நண்பர்கள் எல்லாம் அப்படி ஒரு வீட்டிலா காதல் ஜோடியை குடி வைப்பார்கள்?
பசுபதியின் சொந்த ஊர் ஸ்ரீலங்கா என்று ஒரு தகவல் . என்ன சொல்ல வர்றீங்க ஏன் டைரக்டக்டர்.. ஏன்?   . விட்ருங்க . உதவி பண்ண முடியாட்டியும் உபத்திரவம் பண்ணாம இருப்போம் . 
தென்னை மரத்தைப் பற்றி எழுத சொன்னால் , ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒரு மாதிரி எழுதுவான் 
yaan 2
பனிரெண்டாம்  வகுப்பு மாணவன் ஒரு மாதிரி எழுதுவான் .
கல்லூரி மாணவன்  ஒரு மாதிரி எழுதுவான் .
பத்திரிகையாளன் கவிஞன் , எழுத்தாளன், இப்படி எல்லோரும் ஒவ்வொரு மாதிரி எழுதுவார்கள் .
பத்திரிகையாளன் கவிஞன் , எழுத்தாளன் எழுதுவது மற்றவர்கள் படிக்க . 
ஐந்தாம் வகுப்பு மாணவன் எழுதுவதும் சரியாகத்தான் இருக்கும் . தப்பாக எதுவும் இருக்காது . 
ஆனால் மாணவன் எழுதுவது மற்றவர்கள் படிக்க அல்ல . அவன் படித்துக் கொள்ள!
யானும் தீயவன் … தென்னை மரம் பற்றி ஐந்தாம் வகுப்பு மாணவன் எழுதிய கட்டுரை (மாதிரி) 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *