அரசியல் மாற்றத்துக்கு இளைஞர் கூட்டமைப்பு

koot 3

234 தொகுதிகளிலும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான “விதை” தமிழகஇளைஞர்கள் மூலம் விதைக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு இளைஞர்அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மாற்றத்தை எதிர்நோக்கும் நேர்மையான திறமையுள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொதுவான கொள்கைகள், தேர்தல்வாக்குறுதிகள் மற்றும் வாக்காளர் தேர்வு முறைகள் மூலம்இளைஞர் கூட்டமைப்பாக தேர்தல் களம் காணுகின்றனர்.

இதற்கான முயற்சி கடந்த 2 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கபட்டது.

இதுபற்றிக் கூறும் இந்த அமைப்பினர் “நம்மை காப்பாற்ற வானிலிருந்து யாராவது ஒரு தலைவர் வருவார் எனஎண்ணாமல், மாற்றத்தை உருவாக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞனும் தலைவராக உருவாக வேண்டும் என்பதே நமது எண்ணம்.

ஒரு தனி நபரையும் முன்னிறுத்தாமல், நேர்மையான இளைஞர்களையும் மற்றும் தெளிவான கொள்கைளையும் முன்னிறுத்தி கூட்டுத்தலைமை மூலம்  மக்களை சந்திக்கஉள்ளோம்.

koot 1

வேட்பாளருக்காக பல்வேறு முதல்கட்ட கேள்விகளை இணைய தளங்கள் (வாட்ஸ்அப்,பேஸ்புக்) மூலமும் பரவவிட்டு அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

அதிலிருந்து சுமார் 300 பேருக்கு நேர்முக தேர்விற்கு அழைப்புவிடுத்து உள்ளோம்.

நேர்முக தேர்வு செய்ய 20 பேர் கொண்ட இளைஞர் குழு உருவாக்கப்பட்டு,தெளிவான கேள்விகளை வேட்பாளரிடம் தொடுக்க சிறப்பான பயிற்சிகள்அளிக்கப்பட்டன.

இளைஞர் வேட்பாளர் தேர்வு பற்றிய செய்தி பலரையும் சென்றுசேரும் போது, நேர்மையான பலரும் வர வாய்ப்புள்ளது. கூடிய விரைவில் 234 தொகுதிகளில்  போட்டியிடும் அரசியல் ஆர்வம் உள்ள நேர்மையான, திறமையான,அர்ப்பணிப்பு கொண்ட இளைஞர்களை முன்னிறுத்துவோம்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்களுக்கு 234 சட்டமன்ற தொகுதிகள்மட்டுமே தெரிகின்றது. வார்டு கவுன்சிலர், மேயர், நகராட்சி தலைவர் என 1.25லட்சம் அரசியல் சார்ந்த பதவிகள் உள்ளன. அனைத்து இடங்களிலும் அக்டோபர் மாதம் வரும் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் போட்டியிடுவர்.

koot 2

“நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என இளைஞர்கள் பல்வேறுதுறைகளில் சிறந்து விளங்குகின்றனர். தற்போது அரசியலிலும் சிறந்து விளங்கி,தமிழகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்கும் முயற்சியில், நாளையதலைமுறையை காக்க நேர்மையான இளைஞர்கள் களம் காணுகின்றனர்.

எந்தெந்த தொகுதியில் அதிகமாக செயல்வீரர்கள் கிடைக்கின்றனரோ, அங்குமுழுமையாக பிரச்சாரம் செய்வோம். சமீபத்திய வெள்ளத்தில் இளைஞர்கள் இறங்கிவேலை செய்தது போல,

ஒவ்வொருவராலும் தன்னால் இயன்ற நிதியை வைத்து,இளைஞர்கள் மற்றும் மக்களே பிரச்சாரம் செய்து வேட்பாளரை தேர்வு செய்வர்.

தமிழக இளைஞர்களுக்கு தங்களின் ஆதரவு தர, செயல்வீரராக செயல்பட,வேட்பாளராக நிற்க, கொள்கைகள் மற்றும் மேலும் பல விவரங்களுக்கு www.youthpolitics.in என்ற இணைய தளத்திலும் காணலாம்.

தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்: 7871866096, 9788304668, 9962265231″ என்கின்றனர் 

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →