சென்னையின்உலக சினிமா அடையாளமாக விளங்கும் ஐ சி ஏ எஃப் அமைப்பு கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் சென்னை உலகப் பட விழா, 13 ஆவது ஆண்டாக வரும் ஜனவரி ஆறாம்தேதி முதல் பதி மூன்றாம் தேதி வரை நடக்கிறது . வழக்கமாக டிசம்பர் மாதத்தில் நடக்கும் இந்த விழா சென்னை வெள்ளச் சேதம் காரணமாக ஒரு மாதம் தாமதமாக நடக்கிறது.
சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கம், ஐநாக்ஸ் (இரண்டு திரைகள்),கேசினோ, ரஷ்யன் கல்சுரல் அகாடமி, சத்யம் சினிமாஸ் , வட பழனி ஆர் கே வி ஸ்டுடியோ அரங்கம் ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்பட உள்ளன,
செபாஸ்டியன ஷிப்பர் இயக்கிய விக்டோரியா என்ற ஜெர்மானியப் படத்துடன் விழா துவங்குகிறது.
உலக சினிமா பிரிவில் 123 படங்கள் திரையிடப்பட உள்ளன . உலக அளவில் பாரட்டுகளையும் பரிசுகளையும் வென்ற ஈரானியப் படமான டாக்சி, ரோமேனியப் படமான அஃபெரிம், ஸ்வீடன் படமான ஃபிளாக்கிங், குரோஷியப் படமான தி ஹை சன் . கொலம்பியப் படமான எம்ப்ரேஸ் ஆஃப் தி சர்பன்ட்,, இத்தாலியப் படமான மை மதர், ஜப்பானியப் படமான ஜர்னி டு தி ஷோர் , ஐஸ்லாந்துப் படமான ரேம்ஸ், மெக்சிகோ படமான குரானிக், ஆகியவை இதில் அடக்கம் .
இவற்றோடு உலக அளவில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்ட இந்தியப் படமான கோர்ட், பங்களாதேஷ் படமான ஜ்லால்ஸ் ஸ்டோரி, எஸ்டோனியப் படமான 1944, ஃபிலிப்பைன் படமான ஹெனரல் லூனா, , ஜெர்மன் படமான டூ லைவ்ஸ் , மான்ட்நெக்ரின் படமான யூ கேரி மீ , எதியோப்பியப் படமான லேம்ப், ஆஸ்திரியப் படமான குட் நைட் மாம்மி, லிதுவேனியப் படமான தி சம்மர் ஆஃப் சங்கைல்,
செர்பியப் படமான என்க்லேவ், தாய்லாந்து படமான ஹவ் டு வின் அட் செக்கர்ஸ் , நெதர்லாந்துப் படமான தி பாரடைஸ் சூட், செர்பியப் படமான சி யூ இன் மாண்டேவீடியோ, பின்லாந்துப் படமான தி ஃபென்சர், அல்பேனியப் படமான திரீ விண்டோஸ் அண்ட் எ ஹேங்கிங், பாகிஸ்தான் படமான மூர் ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
நாடுகள் பார்வை பிரிவில் சீனப் படங்கள் நான்கு, வெனிசுலா படங்கள் ஆறு, நினைவு கூறல் பிரிவில் ஜெர்மானிய சினிமாவில் புதிய அலையை உருவாக்கிய இயக்குனர் ரெய்னர் வெர்னர் ஃபாஸ்பிண்டர் உருவாக்கிய ஏழு படங்கள் , டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நில்ஸ் மல்மோராஸ் உருவாக்கிய ஆறு படங்கள் திரையிடப்பட உள்ளன .
உட்லண்ட்ஸ் திரையரங்கில் தினமும் சினிமா குறித்த விவாதங்கள் நடக்கின்றன. ஐநாக்ஸ் திரையரங்கில் தினமும் ஏழாம் தேதி முதல் 12 அம தேதி வரை சிவப்புக் கம்பள வரவேற்புத் திரையிடல் நடக்கிறது .
வழக்கம்போல தமிழ் சினிமா விருதுக்கு என்று 36 வயதினிலே, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, சாரல்ஸ் ஷபீக் கார்த்திகா, கிருமி, கதிரவனின் கோடை மழை, மாயா , ஆரஞ்சு மிட்டாய், ஓட்டத் தூதுவன் 1854, பிசாசு , ரேடியோ பெட்டி, தாக்க தாக்க, தனி ஒருவன் ஆகிய படங்கள் திரையிடப்பட்டு இவற்றில் இருந்து சிறந்த படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
தவிர , ஆச்சி மனோரமா, இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக , அச்சமில்லை அச்சமில்லை, அக்னி சாட்சி, ஒரு வீடு இரு வாசல், உன்னால் முடியும் தம்பி, சிந்து பைரவி, மேஜர் சந்திரகாந்த், அவள் ஒரு தொடர்கதை ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன .
(இப்படி பாலச் சந்தருக்கும் மனோரமாவுக்கும் பொதுவான படங்களாகப் பார்த்து எடுத்ததற்குப் பதில் இருவருக்கும் தனித்தனியாக தலைக்கு நான்கு அல்லது மூன்று சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம்.)
மேற்கண்ட விவரங்களை ஐ சி ஏ எஃப் செயலாளர் தங்கராஜ், இயக்குனர் மனோபாலா, பூர்ணிமா ஜெயராம் , மோகன் , லிஸி ஆகியோர் தெரிவித்தனர் .
இந்த முறை தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த விழாவில் இணைகிறது . நடிகர் சங்கம் சார்பில் முக்கியப் பிரமுகர்கள் வந்து படங்களின் திரையிடலை துவக்கி வைக்கிறார்கள்.
இந்தத் தகவலை நடிகர் சங்கம் சார்பில் நடிகர் ரமணா, சோனியா , ஹேமந்த் ஆகியோர் தெரிவித்தனர்.