144 @ விமர்சனம்

1441

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமாரும் அபி & அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவனும் இணைந்து தயாரிக்க, மிர்ச்சி சிவா , அசோக் செல்வன், ஓவியா, சுருதி ராமகிருஷ்ணன் நடிப்பில் ஜி.மணிகண்டன் என்பவர் இயக்கி இருக்கும் படம் 144.

கடமலைக் குண்டு,  பூமலைக் குண்டு என்று இரண்டு கிராமங்களுக்கு இடையே,  ஏரியில் மீன் பிடிக்கும் உரிமையை முன் வைத்து மிகப் பெரிய பிரச்னை,  பல காலமாக தொடர்கிறது .

இதில் ஒரு ஊரைச் சேர்ந்த பெரிய மனிதர் ஒருவர்,  தங்க பிஸ்கட் கருப்பு வியாபாரம் செய்பவர் . கிடைக்கும் தங்க பிஸ்கட்களை பொது இடங்களில் உள்ள சிலைகளின் பீடத்தில் மறைத்து வைப்பதும்,  தேவைப்படும்போது எடுப்பதும் அவரது ஸ்டைல்.

அவரது ஒரே மகளுக்கும்(சுருதி ராமகிருஷ்ணன்) அவருக்கு உதவும் கார் டிரைவருக்கும் (அசோக் செல்வன்) காதல்.

கம்பி வளைத்துப் போட்டு, பூட்டைத் திறந்து திருடும் திருடன் (சிவா)!. அவனது காதலியான ஒரு விலைமாது (ஓவியா) திருட்டில் அவனுக்கு உதவுகிறாள்.

பிள்ளையார் சதுர்த்தி முடிந்த உடன் பிள்ளையார் சிலையை ஏரியில் கரைப்பது அந்தப் பகுதி வழக்கம் . மீன் பிடி உரிமை கிடைக்காத ஊர்க்காரர்கள் , கண்ணாடிச் சில்லுகளை கலந்து பிள்ளையார் உருவம் செய்து வைக்கின்றனர் .

அந்த ‘பிள்ளையாரை கரைக்கும்போது கண்ணாடி சில்லுகள் மீன்களைக் கொல்லும். மீன்பிடி உரிமை பெற்ற ஊருக்கு நஷ்டம் வரும்’ என்பது அவர்கள் திட்டம் .

பிள்ளையார் சிலை கரைப்பில் பிரச்னை வரும் என்பதை அறிந்த தங்க பிஸ்கட் கடத்தல் புள்ளி , அங்கே பாதுக்காப்பாக வைத்து பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து,  பிள்ளையாரின் உருவத்துக்குள் நிறைய தங்க பிஸ்கட்களை பதுக்கி வைக்கிறார்.

அவற்றுக்கு உரிமையான ஒரு மலையாள கடத்தல்காரன் ஒரு தாதாவை (உதயபானு மகேஸ்வரன்) அனுப்பி,  தங்கத்தை  மீட்டு வரச் சொல்கிறான் .

அந்த தாதா கடத்தல் புள்ளியைக் குறிவைக்க, திருடனும் கார் டிரைவரும் சேர்ந்து தங்க பிஸ்கட்களை முன்கூட்டியே திருடி விடுகிறார்கள். 

அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த 144.

1443

சுஜாதாவின் வசந்தகாலக் குற்றங்கள் நாவலின் சில பகுதிகள்,  உரிமம் பெற்று இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளன .

பழைய கதையை எடுத்துக் கொண்டு சட்டையராக , வித்தியாசமாக பிளாக் காமெடி வரலாம் என்ற எண்ணத்தில் கதை சொல்ல முயன்று இருக்கிறாகள்

வேறுமாதிரி திரைக்கதையில் முயன்று இருக்கலாம் . உதாரணமாக, இரண்டு ஊருக்கு இடையே பிரச்னை. இதனால் 144 போடப்படுகிறது. இந்த 144 ஏரியாவில் சம்மந்தமே இல்லாத வேறு ஒரு ஊரும் சிக்கிக் கொண்டது.

இரு ஊரும் மேலும் மேலும் மோதிக் கொள்ள, சம்மந்தமில்லாத ஊரில் 144 காரணமாக வரும் தடைகள்…மக்களின் இயல்பு வாழ்வில் அங்கு வரும் பிரச்னைகள், பிரச்னை செய்யும் ஊராரை  இந்த ஊர் மக்கள் கெஞ்சுவது…

முடியாத நிலையில் 144 தடையை இந்த அப்பாவி ஊர் மக்கள்,  எப்படி மீறி இயல்பு வாழ்க்கையை வென்றெடுத்தார்கள் என்பதை,  காமெடியாக சொல்லி இருக்கலாம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →