எஸ்.எல். பிரபு-வின் “எல்.பி.எஸ். பிலிம்ஸ்” தயாரிப்பில்,
விஜய் டிவியின் “கனா காணும் காலங்கள்” மற்றும் “ஆபீஸ்” தொடர்களின் மூலம் அறியப்பட்ட கார்த்திக் ராஜ் பெரிய திரையில் கதாநாயகனாக அறிமுகம் ஆக,
மூன்று தமிழ்ப் படங்களிலும் பல மலையாளப் படங்களிலும் நாயகியாக நடித்த நிரஞ்சனா கதாநாயகியாக நடிக்க
சாய் சத்யம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில்,உருவாகும் படம் 465 (நாலு ஆறு அஞ்சு)
டூ மற்றும் மாப்பிள்ளை விநாயகர் படங்களின் இயக்குனர் ஸ்ரீராம் பத்மநாபன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதி இருக்கிறார்
ராட்டிணம் மற்றும் கோ2 படங்களில் பணியாற்றிய பிலிப் R சுந்தர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கல்லூரியில் பயின்ற சஷாங்க் ரவிச்சந்திரன் மற்றும் ஜெஃப் பேட்டர்சன் இசையமைத்துள்ளனர்.
“பிச்சைக்காரன்” மற்றும் “சைத்தான்” படங்களில் கலரிஸ்ட் ஆகப் பணியாற்றிய ஜி.ராஜராஜன் எடிட்டிங் மற்றும் கலரிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார்.
மேக் ரியல் மீடியா பாலமுருகன் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்துள்ளார்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, படத்தின் தயாரிப்பு நிர்வாகி அபிலாஷ் ” முற்றிலும் புதியவர்கள் அடங்கிய குழு இது .
தயாரிப்பாளர் , இயக்குனர், எடிட்டர் , என்று பலருக்கும் முதல் படம் . கதாநாயகன் கார்த்திக்குக்கு இதுவே முதல் திரைப்படம் .
ஒரு நல்ல கதையை எடுத்துக் கொண்டு சிறப்பாக படத்தை உருவாக்கி இருக்கிறோம் . முக்கியமான சி ஜி காட்சிகள் இந்தப் படத்தின் பெரிய பலம் .
இயக்குனர் மிக சிறப்பாக படத்தை உருவாக்க, கார்த்திக் நிரஞ்சனா எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். . இது கிரைம் திரில்லர் படம் . ஆனால் மிக வித்தியாசமான கதை” என்றார்
தயாரிப்பாளர் எஸ் எல் பிரபு என்கிற எஸ் லக்ஷ்மி பிரபு பேசும்போது ” எத்தனையோ கதைகள் கேட்டு திருப்தி வராத நிலையில் இந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்ததால் தயாரித்து முடித்து விட்டேன் .
படத்தில் எல்லாரும மிக சிறப்பாக தனது பங்களிப்பை தந்தது எனக்கு நிறைவாக இருந்தது . படம் எல்லோரையும் கவரும் ” என்றார் .
படத்துக்கு விஷுவல் எபெக்ட்ஸ் செய்த பால முருகன் பேசும்போது “மனிதன் மேல் நெருப்பு பற்றி எரியும் காட்சியை அசைவுகளோடு கேமராவுக்கு நெருக்கமாக குளோசப்பில்
விஷுவல் எபெக்டில் கொண்டு வருவது மிகவும் கஷ்டம் . அதை இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு சிறப்பாக செய்து இருக்கிறோம் .
இது போல பல காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும் ” என்றார் .
இயக்குனர் சாய் சத்யம் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் நிகழ்ச்சிக்கு வராமல் போக, அவர் சார்பாகவும் பேசிய நாயகன் கார்த்திக் , ” டி வி சீரியல்கள் மூலம் மக்களுக்கு அறிமுகமான நான் நடிக்கும் முதல் படம் இது .
மிக சிறப்பாக வந்திருக்கிறது இந்தப் படம் .
படத்துக்கு 465 என்று பெயர் வைக்கக் காரணம் , அது இபிகோ செக்ஷன் 465 ஐக் குறிக்கும் . அந்த செக்ஷேன் அடிப்படையில் கதை போகிறது . அது என்ன என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் .
( நான் பார்த்துட்டேன் கார்த்திக் . சொத்து ஆவணங்கள் , உடல் அடையாளக் குறிகள் தொடர்பான ஜாமீனில் விடுவிக்கக் கூடிய குற்றத்தின் செக்ஷன் அது .
ஆக, இறந்து போன ஒருவரின் அங்க அடையாளங்களை குறிப்பிட்டு, தனக்கு உரிய நபரைக்கானது என்று சொல்லிக் கொண்டு ஒருவர் சொத்துகளை அபகரிக்கிறார் .
குற்றம் கண்டு பிடிக்கப்பட்டு மாட்டிக் கொள்ளும் அவர் ஜாமீனில் வந்து பேயிடம் மாட்டிக் கொள்வதுதான் கதையா கார்த்திக் ?)
இன்னொரு கருத்துப்படி 465 என்பது ஏஞ்சல்களைக் குறிக்கும் எண்.
அதற்கேற்ப படம் சிறப்பாக வந்துள்ளது . இனி நான் தொலைக் காட்சித் தொடர்களில் நடிப்பதாக இல்லை . முழுக்க சினிமாதான். அதற்கான சூழலை இந்த 465 ஏற்படுத்தித் தரும் ” என்றார் கார்த்திக்
465 படத்தின் மொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள் !