மெயின் ஸ்ட்ரீம் புரடக்ஷன்ஸ் சார்பில் ஜி வி கண்ணன் தயாரிக்க, ஷபீர் அரவிந்த், பவித்ரா ஆகியோர் நடிக்க ,
ராகவேந்திர பிரசாத் இயக்கி இருக்கும் படம் 54321 . படம் 0 வா? இல்லை 100 ஆ ? பார்க்கலாம் .
ஒரே பள்ளியில் படிக்கிற , பக்கத்துப் பக்கத்து வீட்டு நண்பர்கள் வினோத்தும் விக்ரமும்.
படிப்பு உள்ளிட்ட எல்லா விசயத்திலும் சிறந்து விளங்கும் வினோத் மீது விக்ரமுக்குப் பொறாமை வருகிறது .
ஒரு நிலையில் விக்ரமின் பெற்றோரே வினோத்தை உயர்வாகப் பேச அது வினோத் மீதான வன்மமாக மாறுகிறது .
அந்த வன்மத்தில் வினோத்தின் அம்மாவின் மரணத்துக்கே காரணமாகிறான்.
வினோத்துக்கு விக்ரமின் பெற்றோர் அடைக்கலம் கொடுக்க, வினோத்தையே கொல்ல முயல்கிறான் .
அதை கண்டுபிடிக்கும் தனது அம்மாவின் மரணத்துக்கும் காரனமாகிறான் .
குற்றவாளியாகி , சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குப் போய் , யோகா கற்று பலம் பெற்று வெளியே வருகிறான் விக்ரம் .
அதற்குள் வினோத் படித்து வேலைக்குப் போய் கல்யாணம் செய்து ஒரு பிள்ளை பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வர ,
வினோத் வீட்டுக்குள் நுழையும் விக்ரம் , வினோத்தின் மனைவியை கட்டிப் போட்டு விட்டு வினோத்தை அடித்துக் கட்டிப் போடுகிறான்.
‘வினோத் ஒரு கொலை செய்ய வேண்டும் . இல்லாவிட்டால் வினோத்தின் மனைவியை கொன்று விடுவேன்’ என்று மிரட்டுகிறான் .
காரணம் ?
“வினோத் .. நீ ரொம்ப நல்லவன்’னு நினைச்சுகிட்டே எங்கம்மா செத்துட்டாங்க . நீ கெட்டவன் ஆகணும் ”
இந்த களேபரத்தில் அந்த வீட்டுக்குள் திருட வந்த ஒருவனும் அவனுக்கு துணையாக வந்த ஒருவன் , இவர்களோடு விக்ரமின் அப்பாவும் சிக்க ,
வினோத் மனைவியை இழந்தானா ? அல்லது கெட்டவன் ஆனானா ? இரண்டும் நடந்ததா ? இல்லை எல்லாருமே சுகமா ? என்பதே இந்த 54321.
ஒரு பங்களாவுக்குள் , இரண்டு மூன்று அறைகளுக்குள் பெரும்பாலான நேரம் நிகழும் கதை .
சிறுவயது வாழ்க்கை , ஜெயில் வாழ்க்கை , திருடனுக்கான ஒரு பிளாஷ் பேக் இப்படி சில சமயங்களில் மட்டும் லொக்கேஷன் சேஞ்ச் !
நடித்தயுர்போரின் நடிப்பு ஒகே ராகம் .
சில சைலன்ட் ஷாட்களில் பயம், திரில் , நகைச்சுவை எல்லாவற்றையும் கொண்டு வரும் வகையில் கவனம் கவர்கிறார் இயக்குனர்
பானு முருகனின் ஒளிப்பதிவும் ஜோசுவா ஸ்ரீதரின் இசையும் சிறப்பாக இருக்கின்றன .
எடுத்துக் கொண்ட விசயத்தை நல்ல பிள்ளையாக படம் எடுத்து இருக்கிறார் இயக்குனர் .
ஆனால் ஒரு வெற்றிப் படத்துக்கு இந்த விஷயம் போதுமா என்ன ?
54321… கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் .!