ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க, சந்தானம், ராதிகா பிரீத்தி, கே எஸ் ரவிகுமார், ஆர் . சுந்தர்ராஜன், மன்சூர் அலிகான்,சங்கீதா, கலைராணி நடிப்பில் கல்யான் எழுதி இயக்கி இருக்கும் படம்.
கமல் ரசிகரான இளைஞன ஒருவனின் ( சந்தானம்) தாத்தா ( ஆர் சுந்தர்ராஜன் ) ரஜினி ரசிகர் . அப்பா (ஆடுகளம் நரேன்) குடிகாரர் . தங்கைக்கு ( சங்கீதா) அண்ணனைப் பிடிக்காது
ஒரு காலத்தில் ராஜ குடும்பமாக இருந்த அவர்கள் வீட்டில் உள்ள ஒரு பழைய கத்தியின் கைப்பிடிக்குள் , ஒரு பெரிய புதையல் இருக்கும் இடம் பற்றிய மேப் இருக்க, அதைப் பற்றி அறிந்த ஒரு குழு ( மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன்) அதைக் கைப்பற்ற அவர்கள் வீட்டுக்கு வருகிறது . பேச்சு வாக்கில் குழு கொடுத்த வைரங்களை கல்கண்டுய் என்று எண்ணி தாத்தா முழுங்கி விட, அதே நேரம் , ஷாக் அடித்து அவர் இறந்து போக, எப்படியாவது பாடியை கைப்பற்றி , உடலை அறுத்து வைரத்தைக் கைப்பற்ற , போஸ்ட் மார்ட்டம் அறையில் வேலை செய்யும் நபருக்கு பெண் வேடம் போட்டு ( ஆனந்தராஜ்) , செத்துப் போன தாத்தாவின் இன்னொரு மனைவி/ காதலியான மஞ்சக் கிளி என்ற பெயரில் கொண்டு வர,
சகலகலாவல்லவன் படம் ரிலீஸ் நேரத்தில் படம் பார்க்க விடாமல் செத்துட்டாரே என்று பேரன் வருந்த,
சாவுக்கு வரும் அத்தை மகள் அண்ணனைக் காதலித்து விடக் கூடாது என்று தங்கை நினைக்க,
எதையும் வெட்டி பில்டப் மூலமே சாதிக்க முயலும் பேரன் என்ன செய்தான் என்பதே படம்.
கமல் ரசிகராக வழக்கமான சந்தானம். கமல் கெட்டப்பில் ஓகே
ராதிகா பிரீத்தி அழகு
தங்கையாக நடித்துள்ள சங்கீதா நடிப்பில் அசத்தி இருக்கிறார் .
பெரிய காமெடி, எமோஷனல், நட்சத்திரக் கூட்டம் இருக்கிறது. காமெடி நடிகர்கள் என்ன பேசினாலும் அது காமடியாகாது . செட்டியார் முறுக்கு சரக்கிலும் இருந்திருக்கலாம் . சும்மா கதை விடுவதை விட நல்ல கதை திரைக்கதை எழுதி அதை படத்தில் விடுவது முக்கியம்.
ஒரு நடிகரின் கண்மூடித்தனமான ரசிகராக இருப்பது எவ்வளவு பெரிய இழப்பில் கொண்டு போய் விடும் என்று சொல்லும் அந்த கிளைமாக்ஸ் பாராட்டுக்குரியது .