ஒரு காதல் ஜோடி நிம்மதியைத் தேடி மலைவாசஸ்தலம் ஒன்றில் தஞ்சம் புகுகிறது. ஆனால் அங்கே வரும் சில மனித மிருகங்கள் அந்தப் பெண்ணை சீரழித்து அவளையும் கொன்று அவளது காதலனையும் கொடூரமாகக் கொன்று விடுகின்றன. மறைந்த இருவரும் ஆவேசமான சக்திகளாக உருவெடுக்கினறனர்.
அதன் பின்னர் அங்கு வரும் நான்கு காதல் ஜோடிகள் இயற்கையை ரசித்து பொழுதை கழிக்கும் வேளையில், பல எதிர்பாராத திகிலான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்த நான்கு காதல் ஜோடிகளும் உயிரோடு அங்கிருந்து தப்பா முடிந்ததா?
— ரிஷ்வின் வெஞ்சர்ஸ் சார்பில் ஜி.கிருஷ்ண குமார் மற்றும் எம்.கமலக் கண்ணன் இருவரும் தயாரிக்க, காசேதான் கடவுளடா படத்தில் நடித்த சரணுக்கு ஜோடியாக சுனிதா கோகை என்ற தோகை நடிக்க , இவர்களுடன் இன்னும் நான்கு ஜோடிகள் நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஜோடியாக எம்.திருமலை இயக்கி இருக்கும் படம் மான்வேட்டை
விறுவிறுப்பாக சொன்னால் இந்த கதை ஏமாற்றாதுதான் .
ஆனால் அண்மையில் ஆடியோ லாஞ்ச் வரை வந்துவிட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாட்கள்தான் பெரிய விஷயம்.
முற்றிலும் மலைப்பாங்கான ஏரியாக்களில் கதை நகரும் இந்தப் படத்தை கோனே பால்ஸ், கொடைக்கானல் , பெரம்பலூர் மொட்டைமலை ஆகிய மலைகளில் மொத்தம் பதினாலே நாட்களில் , மொத்தப் படத்தையும் முடித்து இருக்கிறார் இயக்குனர் திருமலை .
எப்படி சாத்தியம் என்றால் “கேமராக்களை சரியான கோணங்களில் அமைத்து லைவ் கேமராக்கள் போல பொருத்தி பல காட்சிகளை எடுத்தோம் . படம் பாருங்க . ஆச்சர்யப்படுவீங்க. ” என்றவர் தொடர்ந்து “வெட்டிச் செலவுகளால்தான் பல படங்களோட பட்ஜெட் அதிகமாகுது . செலவைக் குறைக்க என்னிடம் எவ்வளவோ யோசனைகள் இருக்கு ” என்கிறார் .
படம் நல்லா வந்துட்டா எல்லாமே பட்டயமா ஆயிடுமே…!


