நிரஞ்சனா புரடக்ஷன் சார்பில் ஜி. அனில்குமார் தயாரிக்க, புதுமுக ஜோடி ராஜா – ஜோதிஷா நடிக்க, சுல்தான்ஸ் என்பவர் எழுதி இயக்கும் ‘தப்பா யோசிக்காதீங்க’ என்ற படம் காலை ஏழு மணிக்கு படப்பிடிப்பு துவங்கி , மாலை ஆறு மணிக்கு படப்பிடிப்பை மொத்தமாக முடித்து…
ஆமாங்கோ !
மொத்தம் பதினோரு மணி நேரத்தில் மொத்தப் படமும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் எடுக்கப்படும் முதல் இந்தியப் படமும் இதுதான் என்கிறது இந்த யூனிட் .
இன்றைய நிலையில் ஒரு மனிதன் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டால் அவனுக்கு ஏற்படும் அவலங்கள் , பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும்போது அவனுக்கு வரும் பிரச்னைகள் அதை அவன் எதிர்கொண்டு கையாளும் விதம் என்று கதை போகும் இந்தப் படத்தில் மொத்தம் 46 கதாபாத்திரங்கள்.
ஸ்டீபன் சதீஷ் இசையில் இரண்டு பாடல்களும் படத்தில் உண்டு .
புதிய முயற்சி !
Comments are closed.