அறிவுத் தீவிரவாதம் பற்றிப் பேசும் ‘ஆகம் ‘

agam 6

ஜ்யோ ஸ்டார் என்டர்பிரைசஸ் சார்பில் எம் .கோட்டீஸ்வர ராஜூ , எம். ஹேமா ராஜு இருவரும் தயாரிக்க இர்ஃபான் , ஜெயப்பிரகாஷ், தீக்ஷிதா , ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோர் நடிக்க டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கருக்கொண்டு ஆராய்ச்சி செய்து எழுதி இயக்கி இருக்கும் படம் ஆகம் . 

ஆகம்?
”ஆகமம் என்பதன் தமிழ் வடிவமே ஆகம் . ஆகம் என்ற சொல்லுக்கு வந்து சேர்தல் ”என்று பொருள் என்கிறார்  டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம். இவர் மனித வள மேம்பாட்டுத்துறை வல்லுநர் .
தயாரிப்பாளரும் இயக்குனரும்
தயாரிப்பாளரும் இயக்குனரும்

தனது சிறப்பான பயிற்சிப் பட்டறைகள் மூலம் பல லட்ச்ம் இளைஞர்களுக்கு தன்னபிக்கைப் பயிற்சி கொடுத்து மனச் சோர்வை நீக்கிய சாதனைக்குச்  சொந்தக்காரர் .

இவர் எழுதிய ‘ஒரு சிறகு போதும்’ என்ற தன்னம்பிக்கை நூல்,  விகடன் பிரசுரத்தின் பெஸ்ட் செல்லர்களில் ஒன்று என்கிறார்  டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.
தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜூ என் ஐ டி யில் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ) எம் டெக் படித்து லண்டனில் வாழும் தொழில் அதிபர் . ஆந்திராவில் பல கல்வி நிறுவனங்கள் நடத்துபவர் .
ஆகம் என்ன கதை ?
Aagam Movie Stills
”இந்தியாவுக்கு எதிராக எத்தனையோ விதமான தீவிரவாத செயல்பாடுகள் நடக்கின்றன. இதில் பலரும் அறியாத ஒரு தீவிரவாதம்தான், திறமைக் குறைபாட்டை உருவாக்குகிற — நாலெட்ஜ் டெர்ரரிசம் எனப்படும் அறிவு அழிப்புத் தீவிரவாதம்.
அது பற்றி இந்தப் படத்தில்  பேசுகிறேன் ” என்று ஆரம்பிக்கும்  டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்,  அது பற்றி கம்பீரமாக சொல்கிறார் . 
”  இன்று உலகின் மிக முக்கியமான நாடுகளில் முக்கியமான தொழில் நுட்ப நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் எல்லோரும் இந்தியர்கள்தான் . 
agam 4
இந்தியாவில் இந்திய மக்களின் வரிப்பணத்தில் இந்தியக் கல்வி நிறுவனங்களில் படித்த அறிவாளிகளை அயல்நாட்டு நிறுவனங்கள் கொத்திக் கொண்டு செல்கின்றன.
பின்னர் அவர்களை வைத்தே மேலும் மேலும் இந்தியாவில் இருந்து அறிவாளிகளைக் கொண்டு செல்கின்றன. அதனால் இந்தியாவின் முன்னேற்றம் தடை படுகிறது . நம்மவர்களால் அந்த அந்நிய  தேசங்கள் முன்னேறுகின்றன . 
இதுதான் இந்தியாவின் முன்னேற்றத்தைக் கெடுக்கிற– இந்தியாவுக்கு எதிரான மிகப் பெரிய தீவிரவாதம் .
Aagam Movie Stills
இதைதான் நான் படமாக ஆக்கி இருக்கிறேன் .” என்று சொல்லும்  டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராமிடம் கதை என்ன என்று கேட்ட போது ….
” அண்ணன் தம்பிகள் இருவர் . அண்ணன் அந்நிய நாட்டு வாழ்வை விரும்புபவர் . அந்த வாழ்க்கை முறைக்கு ஆசைப்படுபவர்  ஆற்றோரம் காலைக் கடன் கழிக்கப் போனாலும் டிஷ்யூ பேப்பரோடு போகும் குணம் உள்ளவர் .
 தம்பி நேர் மாறானவன் . இந்தியர்களின் உழைப்பு அறிவு திறமை எல்லாம் இந்தியாவுக்கே பயன்படவேண்டும் என்று ஆசைப்படுபவன் .
Aagam Movie Stills
இவர்கள் வாழ்க்கை முறை நமது சமூகத்தோடு இழையும்போது நடக்கும் சம்பவங்களே இந்தக் கதை ” என்கிறார் . 
“நாட்டில் நடைபெறும் லஞ்ச லாவண்யம் , ஊழல் , திறமைக்கு மதிப்பின்மை , அரசியல் குறுக்கீடு இவற்றால்தானே பலரும் மனம் வெறுத்து வெளிநாட்டுக்கு போக நினைக்கிறார்கள் . அப்படி இருக்க , இது ஏதோ அந்நிய நாட்டு சதி என்பது போல நீங்கள் சொல்வது எப்படி சரியாகும்?” என்றேன் .
வெகுஜனம் அப்படிதான் நினைத்துக் கொண்டு இருக்கிறது . ஆனால் உண்மை அப்படி இல்லை . நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் இல்லை என்று சொல்லவில்லை . ஆனால் இப்போது அது குறைவுதான் .
agam 7
இன்று  இந்தியாவில் திறமைக்கும் உழைப்புக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன .. இது பற்றி நான் ஒரு சர்வே எடுத்து அதன் முடிவுகளை வைத்துதான் கதையே அமைத்தேன் . 
உண்மையில்  டாலர் சம்பள ஆசை காட்டி அந்நிய நிறுவனங்கள் இழுப்பதுதான் நம்மவர்கள் வெளிநாடு போகக் காரணம் . இந்த விசயத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது . 
உதாரணமாக  ஒருவர் அமெரிக்காவில் நாலாயிரம் டாலர் சம்பளம் வாங்குகிறார் என்றால் அமெரிக்காவை ஒப்பிடும்போது அது ஒன்றும் பெரிய சம்பளமே இல்லை .
agam 8
ஆனால் ஒரு டாலரின் மதிப்பு அறுபது ரூபாய் என்பதால் இந்திய மதிப்பில் அந்த சம்பளம் சுமார் இரண்டரை லட்சம் என்று ஆகிறது . இதை வைத்துதான் நம்மவர்களை அவர்கள் இழுத்து நாலெட்ஜ் டெர்ரரிசம் எனப்படும் அறிவழிப்புத் தீவிரவாதத்தை செய்கின்றனர் ” என்கிறார் .
இதை ஒட்டியே  பேசும் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜூ ” அமெரிக்கா ஏர்போர்ட்டில் நான் சந்தித்த ஒரு இந்தியர் எம் பி ஏ படித்தவர் . அவர் அங்கே விமான நிலையத்தின் தரையை துடைக்கும் வேலை செய்து கொண்டு இருந்தார் . அவரிடம் பேசியபோது அவர் சொன்னதும் டாலர் மதிப்பால் கிடைக்கும் பணம் பற்றித்தான் .
அது மட்டுமல்ல ‘நான் இங்கே இப்படி தரை துடைக்கும் வேலை செய்வது இந்தியாவில் உள்ள என் அம்மாவுக்கு தெரிந்தால் , என் அம்மா செத்தே போய் விடுவார் ‘என்று சொன்னார் 
agam 9
பல கல்வி நிறுவனங்களில் படித்து முடித்த பின்பு அமெரிக்க போக ஆசை உள்ளவர்கள் கை தூக்குங்கள் என்று சொன்னால் தொண்ணூறு சதவீதம் பேர் உடனே கை தூக்குகிறார்கள் . அவர்களில் பலர் இங்கும் நன்றாக சம்பாதிக்க வாய்ப்பு உள்ளவர்கள்தான் . 
இந்த மோகத்தை மாற்றவே இந்தப் படம் எடுத்து இருக்கிறோம் ” என்கிறார் கோட்டீஸ்வர ராஜு.
 தொடரும் இயக்குனர்  விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ” இப்படி எல்லாம் சீரியசாக இருப்பதால் , இது என்னவோ  டாக்குமெண்டரி மாதிரி இருக்கும் என நினைத்து விடாதீர்கள் . காமெடி,  காதல் , குத்தாட்டம் , சண்டை கிளாமர் எல்லாம் இருக்கிற பக்காவான கமர்ஷியல் சினிமா ” என்கிறார் . 
 சக தயாரிப்பாளரான  ஹேமா ராஜூ
தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர்கள்

” முக்கியமாக இது ஒரு பரபரப்பான இன்டரஸ்டிங்கான சோஷியல் திரில்லர் . படம் அவ்வளவு சுவாரஸ்யமாக ரசிக்கும்படி இருக்கும் .

படம் முடியும் போது பார்த்த ஒவ்வொருவர் மனதிலும் நம் அறிவை அந்நியநாட்டுக்கு அடிமைப்படுத்தக் கூடாது என்று தோன்றும் .” என்கிறார் உறுதியான நம்பிக்கையோடு. 
ஆகம்…. வெற்றி…. ஆக.. வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →