
வித்தியாசமான முயற்சிகள் வெற்றி அடையும்போது அதில் ஏற்படும் சந்தோஷமே தனி. அந்த சந்தோஷத்தை படைத்தவர்களுக்கும் ரசிப்பவர்களுக்கும் கொடுத்து இருக்கிறது, ‘ஆ’ திரைப்படம் .

அந்த வெற்றிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் லோகநாதன் , சீனிவாஸ் .. இவர்களோடு அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்களைஞர்களையும் சந்தோஷமாக பார்க்க முடிந்தது.

“படம் வெளியாவதற்கு முந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது, ‘படத்தில் ஒரு காட்சியில் கடலில் தத்தளித்தபடி ஹெல்ப் மீ ஹெல்ப் மீ என்று கத்துவேனே அந்த மன நிலையில் இருக்கிறேன் ‘ என்று கூறி இருந்தேன். ஆனால் இப்போது என்னை காப்பாற்றி கரை சேர்க்கும் விதமாக படம் அமைந்தது சந்தோசம் ” என்றார் நாயகனாக நடித்த கோகுல்நாத் .

படத்தின் நாயகியான மேக்னா, நடன இயக்குனர் மட்டுமல்லாது ஜப்பானில் துபாயில் படப்பிடிப்பு நடக்க ஜப்பானை சேர்ந்த தமிழ்ச் சங்கத் தலைவரான ஹரி என்பவர் மூலம் ஏற்பாடு செய்ததும் கோகுல்தானாம்.

“ஹரி ஹரீஷின் திறமையில் நம்பிக்கை வைத்து அம்புலி படத்தை தயாரித்தோம் . அவர்கள் அதை வெற்றிப் படம் ஆக்கிக் கொடுத்தார்கள். அதோடு இந்த ஆ படத்தை அதை விட வெற்றிப் படமாக ஆக்கிக் கொடுத்துள்ளார்கள் ” என்று தயாரிப்பாளர் லோகநாதன் பேச, ” இந்த வெற்றியை ரசிகர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம் ” என்றார் ஸ்ரீனிவாஸ்.

“நடிகர்கள் , தொழில் நுட்பக் கலைஞர்கள் , தயாரிப்பாளர் எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பால் இந்த வெற்றி சாத்தியப்பட்டு இருக்கிறது. ” என்று இயக்குனர் ஹரி கூற ,