மேடையில் பெயர் மாறிய ஆங்கிலப் படம்

aangila-1

ஆர் ஜே மீடியா கிரியேசன்ஸ் சார்பில் எம் ஐ ஆர் வாசுகி தயாரிக்க, ராம்கி ,சஞ்சீவ் , நாயகியாக புதுமுகம்  ஸ்ரீஜா இவர்களுடன்  

மீனாட்சி,சிங்கம்புலி, சிங்கமுத்து, மதுமிதா நடிப்பில் குமரேஷ் குமார் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆங்கிலப்படம் . 

இங்கிலீஷ் படம் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்த இந்தப் படம் , பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவின் போது 
aangila-2
இயக்குநர் ஆர் வி உதயகுமாரின் அறிவுரைப்படி ஆங்கிலப் படம் என்று பெயர் மாற்றபட்டது. 
படத்தின் முன்னோட்டத்தில் காதல், ஆக்ஷன், மசாலா , பேய்கள் என்று எல்லா சமாச்சாரங்களும் இருந்தன . 
 எம் சி ரிகோ என்ற புது இசையமைப்பாளரின் இசையில் உருவான பாடல்களை  மிக அருமையாக ஒளிப்பதிவு செய்து இருந்தார் ஒளிப்பதிவாளர் சாய் சதீஷ். 
குறிப்பாக கடல் புறத்தில் எடுக்கப்பட்ட அந்த டூயட் பாடல் ! இன்னொரு பாடலில் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் எனர்ஜியோடு ஆடி இருந்தார் ராம்கி . 
aangila-99
நிகழ்ச்சியில் பேசிய ராதாரவி “வயசாக வயசாக வெள்ளை முடி என்பது அழகில்லாத விசயமாக படுவதால்தான் எல்லரும் டை அடிக்கிறோம் . 
என் முகத்தில எல்லாம்  வெள்ளை முடியை பார்த்தா ரொம்ப கேவலமா இருக்கும். 
ஆனா எனக்கு தெரிஞ்சு ரஜினி சாருக்கு அது ரொம்ப அழகா இருக்கும் . அடுத்து அந்த சால்ட் அண்ட் பேப்பர் லுக் அஜித்துக்கு சூப்பரா இருக்கும் . 
aangila-8
இப்ப மூணாவதா அந்த லுக் என் மாப்பிள்ளை ராம்கிக்கு சூப்பரா இருக்கறத பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு ” என்றார் . 
ஒளிப்பதிவாளர் சாய் சதீஷ் பேசும்போது ” என் தாய் மொழி  தெலுங்கு . ஆனால்  நான் சென்னையில்தான் தொழில் கற்றுக் கொண்டேன் . 
வங்காளம் வரை எத்தனையோ மொழிகளில் ஒளிப்பதிவு செய்து விட்டேன் . ஆனால் தமிழில்– தாய் வீடு போல  நான் உணரும் சென்னையில்,   தமிழ் படத்தில் பணியாற்றவே பெரிதும் விரும்பினேன்.
aangila-7
அப்போது எனக்கு கிடைத்ததுதான்  இந்தப் படம். இனி தமிழில்தான் எல்லாம் . சாகும் வரை இனி இங்கேதான் ” என்றார்  உணர்ச்சிவசப்பட்டு ! 
நடிகர் ராம்கி தனது பேச்சில் ” படத்தில் எனக்கு நரை முடி கலந்த கெட்டப் என்று டைரக்டர் சொன்னார்  . என் மனைவி நிரோஷா ஒத்துக் கொள்ளவில்லை . நானும்  கூடத்தான் . 
ஆனால்  கேரக்டரை அழகாக விளக்கி என்னை நரை முடி கெட்டப்பில் நடிக்க வைத்தார். 
aangila-6
இந்த கெட்டப்பால் கவரப்பட்ட ஒரு தெலுங்கு டைரக்டர் இதே கெட்டப் வேண்டும் என்று என்னை, 
 ஒரு பெரிய தெலுங்குப்  படத்தில் ஒப்பந்தம் செய்து இருக்கிறார் ” என்றார் . 
பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது ” இந்தப் படத்தின் டெக்னீசியன்களை பார்க்கும்போது நமக்கு எல்லாம் இவர்கள் அமையவில்லையே என்று பொறாமையா இருக்கிறது .
aangila-4
டைரக்டர கேமராமேன் என்ற பெயரில்  என்னை எல்லாம் பல பேர் ஏமாற்றி இருகிறார்கள் ” என்றார் 
நட்டி தனது பேச்சில் “திரைப்படக் கல்லூரியில்  நான் ஒளிப்பதிவு மாணவனாக இருந்த போது, அங்கே நடிப்புப் படித்துக் கொண்டு இருந்த  ராம்கி சார் 
பல உலகப் படங்களில் கேசட்டுகளை எல்லாம் வரவைத்து , எப்படி எல்லாம்   ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள் பாருங்கள் ‘ என்று பார்க்கச் சொல்லிக் கொடுப்பார் ..
 aangila-5
கேமராவை மிக சிறப்பாக ஆப்பரேட் செய்யத் தெரிந்த நடிகர் அவர் ” என்றார்  
இயக்குனர் பேரரசு பேசும்போது ” இப்போது எல்லா இயக்குனர்களும்  நகர்ப் புறத் தன்மை வாய்ந்த  அசிஸ்டன்ட்களையே வைத்துக் கொள்கிறார்கள்.
 முன்பு யாரும் அப்படி யோசித்து இருந்தால், ஒரு பாரதிராஜா, பாக்யராஜ் , ஆர்.வி.உதயகுமார் , சேரன் போன்றவர்கள் வந்து இருக்க முடியாது . 
pera
அவர்கள் கொடுத்த அற்புதமான படங்கள்  வராமேல் போயிருக்கும் . 
எனவே இனி வரும் இயக்குனர்கள் லேப் டாப் தெரிந்த  நான்கு  அசிஸ்டன்ட்களை வைத்துக் கொண்டால் , 
வாழ்க்கை தெரிந்த ஒரு கிராமப்புற இளைஞரையாவது உடன் வைத்துக் கொள்ளுங்கள் ” என்றார் . 
இயக்குனர்  ஆர் வி உதயகுமார் தனது பேச்சில் ”  இங்கிலீஷ் படம் என்ற பெயரை தமிழில் ஆங்கிலப் படம் என்று மாற்றுங்கள் . 
aangila-3
நவீனமாக படைப்பை தருவது என்றால் அதற்காக மொழியை  மற்றத் தேவை இல்லை . 
அதுபோல இப்போது ராப் பாடல் என்ற பெயரில் என்னென்னவோ எழுதுகிறார்கள் . மற்ற பாடல்களும் அப்படியே . 
இது ரொம்ப வருத்தமான விஷயம் . தமிழில் இல்லாத வார்த்தைகளா?
இப்போது பாடல் எழுதும் எல்லோரும் கண்ணதாசன் பாடல்களை கேளுங்கள் . அவரைப் போல ஜீனியஸ் இல்லை . 
aangila-9
அவர் அவ்வளவு தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார் . அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உங்கள் கருத்துகளை  சொல்லுங்கள் ” என்றார் மிக அழகாக ! 
அவர் சொன்னபடியே  இங்கிலீஷ்   பட,ம் என்ற பெயர் ஆங்கிலப் படம் என்று மாற்றப்பட்டது . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *