டாக்டர் எடுக்கும் ‘சக்தி’ மிக்க படம் ‘ஆறாம் அறிவு ‘

aaraam arivu

சிக்ஸ்த் சென்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் மருத்துவரான டாக்டர் பரத் விஜய் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்க , தாரை தப்பட்டை படத்தில் நடித்த சஹானா கதாநாயகியாக நடித்து இருக்கும் படம் ஆறாம் அறிவு . 

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொள்கிறது ஒரு காதல் ஜோடி. சந்தோஷமாக மண வாழக்கை போய்க் கொண்டிருந்த சூழலில் திருமணத்துக்கு உதவிய நண்பர்களில் ஒருவன் இறக்கிறான் . அதில் இருந்து பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது .
அவளுக்குள் ஏதோ ஒரு சக்தி புகுந்தது போல நடந்து கொள்கிறாள் . எதிர்ப்படும் எல்லோரையும் மூர்க்கத்தனமாகத்  தாக்குகிறாள் . 
அவளை ஆட்டிப் படைக்கும் சக்தி என்ன என்று ஆராயும்போது நடக்கும் சம்பவங்களே இந்தப் படமாம் . 
பெரும் மருத்துவக் குடும்பத்தில் பிறந்த பரத் விஜய்க்குள் இருந்த சினிமா ஆர்வம் அவரை முதலில் மாடலிங் துறைக்குள் கொண்டு போய் , விளம்பரம் மற்றும் கார்ப்பரேட் படங்களில் முகம் காட்ட  வைத்து,  இப்போது நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் ஆக்கி இருக்கிறது. 
aaraam arivu 3
“டைரக்ஷன் கோர்ஸ் படித்த பிறகே படம் இயக்கினேன். சென்னை,  மகாபலிபுரம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.” என்கிறார் அவர் .
படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட விழாவில் இரண்டு முன்னோட்டங்களையும் இரண்டு பாடல்களையும் போட்டுக் காட்டினார்கள். அகிலா என்ற புதுப் பாடகி ஒரு பாடலை மிக அழகாகப் பாடியிருக்கிறார் . 
”உனக்காக வாழ்வது சுய அறிவு ”என்று துவங்கும் ஒரு பாடலை மலேசியாவில் உள்ள அவுட் லா  என்ற ட்ரூப் பாடகர்களுடன் மரண கானா விஜி , பிரின்ஸ் ஆகியோர் இணைந்து வெஸ்டர்ன், ராப் , கிளாசிகல் ஆகிய மூன்று வகை இசையையும் கலந்து பாடி இருக்கிறார்கள் .
பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகை தொடர்பாளர் சங்கத் தலைவர் விஜயமுரளி ” பரத் , விஜய் ஆகிய இரண்டு ஹீரோக்களின் பெயரை , இந்தப் படத்தை உருவாக்கி உள்ள டாக்டர் பரத் விஜய் வைத்துக் கொண்டிருக்கிறார் . அதற்கேற்ப பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ” என்றார் . 
aaraa, arivu 2
கலைப்புலி ஜி சேகரன் பேசும்போது “புதிதாகப் படம் எடுக்க வருபவர்கள் முன் அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு விஷயம் அறிந்து படம் எடுத்தால் வீண் செலவுகளைக் குறைக்கலாம் ” என்று கூறினார் .
அடுத்த பெப்சி தலைவராக மீண்டும் வர இருப்பவர் என்று நம்பப்படும்,  பழம்பெரும் சினிமா எழுத்தாளர் , இயக்குனர் , தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் பேசும்போது ” ஜி சேகரன் சொல்வது மிக நல்ல விஷயம் . ஆனால் பரத் விஜய் ஒரு மருத்துவர் . திட்டமிட்டு முறைப்படி சினிமாவுக்கு வந்திருக்கிறார் .
ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கவே பல மாதங்கள் எடுத்துக் கொண்டு பணியாற்றி இருக்கிறார் . இந்த தெளிவு எல்லோருக்கும் வேண்டும் ” என்றார் .
வாழ்த்துகள்  டாக்டர் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →