‘ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் ‘சார்பில் ராம், சுபாஷ், தினேஷ், நானக் ஆகியோர் தயாரிக்க, தயாரிப்பாளர்களில் ஒருவரான ராம் நாயகனாக நடிக்க, புதுமுகங்கள் நீரஜா., ஸ்ரீஹேமா மற்றும் ஷாஜி, இளவரசு, சிங்கமுத்து ஆகியோர் நடிக்க குபேர் ஜி என்பவர் இயக்கி இருக்கும் படம் ஆரண்யம் .
படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் குபேர்ஜி.
“காடும் காடு சார்ந்த இடத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் இது. ஒரு பரபரப்பான காதல் கதை கூட. புதியதளம். நிச்சயம் இப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
நண்பர்களாக இணைந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் சொல்லும ‘ ஓஹோ புரொடக்ஷன்ஸ் நினைவாக எங்கள் கம்பெனிக்கு ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் என்று பெயர் வைத்தோம்.
சாலக்குடி காடு முதல் தாய்லாந்து காடுவரை போய் 60 நாட்களில் படத்தை முடித்து இருக்கிறோம்.. புதிய முயற்சிகளை என்றும் வரவேற்கும் ரசிகர்கள் இதையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம் ”என்றார் .
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் பா.விஜய்
” இப்போதெல்லாம் பாடலாசிரியர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்நிலையில் என்னிடம் உதவியாளராக இருந்த மீனாட்சி சுந்தரம் தனியாகப் போய் பாடலாசிரியர் ஆனார் . அந்த முயற்சி காரணமாக இந்தப் படத்தில் 4 பாடல்களை எழுதி இருக்கிறார். அவருக்கு வாய்ப்பளித்ததற்கு படக்குழுவுக்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”என்றார்.
டிரைலர் சிறப்பாக இருந்தது .