செவ்வந்தி மூவீஸ் சார்பில் மைக்கேல் தயாரிக்க, விதார்த், ஸ்ரிதா, சார்லி வம்சி கிருஷ்ணா நடிப்பில் கே.எல்.கண்ணன் இயக்கி இருக்கும் படம்
டிரைவர் இல்லாமல் சாலையில் செல்கிற தானியங்கிக் கார் உருவாக்கும் பணியில் இருக்கும் மகனின் ( விதார்த்) திட்டச் செலவுக்காக பத்து லட்ச ரூபாய் பைனான்சில் கடன் வாங்கும் கார் மெக்கானிக் அப்பா (சார்லி), நாடு ரோட்டில் தாக்கப்பட்டு பணத்தையும் உயிரையும் இழக்கிறார் .
உணவு டெலிவரி செய்யும் y food நிறுவன டெலிவரி பாய்கள் மூலமும் தானியங்கி பறக்கும் வண்டு வடிவ கேமரா மூலமும் பணம் நகை அதிகள் உள்ள வீடுகளை கண்டுபிடித்து , கட்டும் தாக்குதல் நடத்தியும் கொலைகள் செய்தும் கொள்ளையடிக்கிறது ரத்த வெறி பிடித்த நபரின் (வம்சி கிருஷ்ணா) தலைமையில் இயங்கும் குழு ஒன்று . அவர்களும் நாயகனும் சந்தித்துக் கொள்ளும்போது நடக்கும் நிகழ்வுகளும் விளைவுகளுமே படம்.
இப்படியும் கொலை கொள்ளை நடக்க முடியும் என்ற வகையில் விழிப்புணர்வு தரும் படம் இது .
விதார்த் , சார்லி, ஸ்ரிதா ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர் வம்சி கிருஷ்ணா வழக்கமான கேரக்டர் . வழக்கமான நடிப்பு .
தானியங்கிக் காரை மடக்கி லஞ்சம் வாங்கும் டிராபிக் இன்ஸ்பெக்டர் காட்சி கல கல . மற்றபடி காமெடி என்று ஏதோ செய்கிறார்கள். காதல் காட்சிகளும் வசனமும் இளமை ரசனை . குறிப்பாக ஜூஸ் குடிப்பது .
அஸ்வின் ஹேமந்த் இசை சுமார் ரகம் .
சரியான காட்சிகளும் சோர்வான காட்சிகளும் கலந்து நகர்கிறது படம் .
அதுவும் கடைசியில் டுவிஸ்ட் என்று நினைத்து ஒரு விஷயம் சொல்லி அதுவரை ஓடிய மொத்தப் படத்தையும் விழலுக்கு இறைத்த நீராக்குகிறார்கள்.
கதைக்கேற்ற திரைக்கதை அமையாதது பலவீனம்