அபி அண்ட் அபி குழும நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களின் அதிபர் இளங்கோவன் – குழநதைகள் மருத்துவர் ராதிகா ராணி தம்பதியின் மகனும்,
அபி அண்ட் அபி பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனத்தின் அதிபருமான அபினேஷ் இளங்கோவனுக்கும் 
ராஜ் தொலைக்காட்சிக் குழுமத்தின் இயக்குனர் ரவீந்திரன் – விஜய லக்ஷ்மி தம்பதியின் மகளான நந்தினிக்கும்
வரும் 27 – 10 – 2017 வெள்ளிக் கிழமை அன்று காலை சென்னை திருவான்மியூரில் திருமணமும்,
அன்று மாலையே திருமண வரவேற்பும் நடக்கிறது .
திருமணத் தகவலை இரு வீட்டாரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்தனர்.
பத்திரிக்கையாளர்களுக்கு அபினேஷ் இளங்கோவன் நேரடியாக பத்திரிக்கை கொடுத்து திருமணத்துக்கு அழைத்தார் .