படம் பற்றிய செய்தி புகைப்படத்துக்கு கீழே
காதலித்து கல்யாணம் செய்தவர்கள் கூட தங்களது அடுத்த தலைமுறை காதலிக்கிறது என்று தெரிய வந்தால் எதிர்க்கின்றனர் . காரணம் ஒரு காலத்தில் இதயபூர்வமாக நேசிக்கப்பட்ட காதல் இப்போது என்பது காமக் கூத்தாக போய் விட்டதுதான்
இந்த சூழ்நிலையில் அன்பை மட்டுமே பரிமாறிக் கொள்ளும் புழுதி காட்டு அழுக்கு முகங்களின் தூய்மையான காதலையும், சமூகத்தை கொடூரமான முறையில் சீரழித்துக் கொண்டு இருக்கும் ஒரு முக்கிய பிரச்னையையும் சேர்த்து, கிராமத்து மண் வாசனையுடன் சொல்ல வரும் படம்தான் டான் பிக்சர்ஸ் சார்பில் கணேஷ் மற்றும் சுரேஷ் தயாரிக்க, பாலு மகேந்திராவின் சினிமாப் பட்டறையில் பயிற்சி பெற்ற சங்கர் கதாநாயகனாகவும் கொக்கர குளம், தேனி பசங்க படங்களில் நடித்த சசி நாயகியாகவும் நடிக்க சத்ய சரவணா இயக்கும் மஞ்சள் குங்குமம் .