ரத்தங் பிக்சர்ஸ் சார்பில் டி.ரஞ்சித் குமார் தயாரிக்க, அபிமன்யூ நல்லமுத்து கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சாக்ஷி அகர்வால் நடிக்க, ராம் மனோஜ்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆத்யன் .
ஆத்யன் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு அனைத்தும் அறிந்தவன் ; அடக்கி ஆள்பவன் என்று பொருள் .
சத்யராஜ், பிரபல தயாரிப்பாளர் திருப்பூர் மணி , இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் ஆகியோருடன் இணைந்து பல படங்களின் தயாரிப்பில் பங்காற்றிய நல்லமுத்துவின் மகன்தான் இந்த அபிமன்யூ நல்லமுத்து . முறைப்படி நடனம் சண்டை எல்லாம் கற்றவர் அபிமன்யூ
சிபிராஜ் கதாநாயகனாக நடித்த நாய்கள் ஜாக்கிரதை படத்தில் இயக்குனர் சக்தியிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ராம் மனோஜ்குமார் .
கதை வித்தியாசமான ஒன்றுதான்.
அமெரிக்காவுக்கும் நமக்கும் பத்து மணி நேர வித்தியாசம் உண்டு . அமெரிக்காவில் இருந்து சென்னை வருவோருக்கு இந்த கால வித்தியாசம் காரணாமாக ஜெட்லாக் வரும் . ஜெட்லாக் என்றால் உடல் களைப்பு என்றுதான் பலரும் நினைகிறோம். அதுதான் இல்லை .
நடந்து கொண்டு இருக்கும்போதே சட்டென்று சாலையிலேயே விழுந்து உறங்கி விடும் அளவுக்கு தூக்கம் வரும்.
அமெரிக்காவில் இருந்து தன் காதலியைத் தேடி சென்னை வரும் நாயகன், இந்த ஜெட்லாக் சமயத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு போதை மற்றும் கடத்தல் கும்பலிடம் சிக்கி விடுகிறான். அதில் இருந்து அவன் தப்பினானா? காதலியை கண்டு பிடித்தானா என்பதுதான் இந்தப் படமாம் . பாதிப்படம் இரவில் நிகழும் காட்சிகளைக் கொண்டதாம்.
சத்யராஜ், திருப்பூர் மணி, ஆர். சுந்தர்ராஜன் , சிபிராஜ் ஆகியோர் கலந்து கொண்ட , படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு பாடலையும் இரண்டு முன்னோட்டங்களையும் திரையிட்டார்கள்.
முன்னோட்டம் மிக அருமையாக இருந்தது. இயக்குனரின் ஷாட்களும் எம் சீனிவாசனின் ஒளிப்பதிவும் ஹரி ஜி ராஜ சேகரின் பின்னணி இசையும் மிக சிறப்பாக இருந்தன .
பாடலும் இனிமை . முக நூலை தூது விட்டு ஒரு காதல் பாடக் எழுதி இருக்கிறார் பாடலாசிரியர் உமா தேவி.
நிகழ்ச்சியில் சிபிராஜ் பேசும்போது “இப்போ உள்ள நடிகர்களிலேயே அபிமன்யூ அளவுக்கு சண்டைக் காட்சிகளில் சிறப்பா நடிக்கக் கூடிய நடிகர் யாருமே இல்லன்னு நான் சொல்வேன் . படம் சூப்பரா வந்திருக்கு ” என்றார்
சத்யராஜுடனான பழைய சினிமா அனுபவங்களைப் பேசி கலகலக்க வைத்தார் சுந்தர்ராஜன் . ஒரு உதாரணம்…! ” நான் டைரக்ட் பண்ண திருமதி பழனிச்சாமி படத்துல சத்யராஜ்தான் ஹீரோ . ஒவ்வொரு நாள் ஷூட்டிங்குக்கு வந்த உடனேயும் ‘ என்ன தவறு செய்தேன் . அதுதான் எனக்கும் புரியவில்லை’ன்னு அவர் பாடுவார். பதிலுக்கு ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?’ ன்னு நான் பாடுவேன் ”
அடுத்துப் பேசிய சத்யராஜ் ” படம் பார்த்துட்டேன் . ரொம்ப நல்லா வந்திருக்கு. ஜெட்லாக் பிரச்னையை வைத்து இதுவரை படம் வந்ததில்லை . உண்மையிலேயே அது ஆபத்தான விசயம்தான் .
ஒரு முறை அமெரிக்காவில் உள்ள என் தங்கையை பார்த்துட்டு சென்னை வந்த நான், தி,நகர்ல கார் ஓட்டிட்டு இருந்தப்பவே, திடீர்னு அப்படியே மூணு செகண்ட் தூங்கிட்டேன் . அப்புறம் சுதாரிச்சு காரை ஓரமா நிறுத்தி த்முகம் கழுவி …. ! கொஞ்சம் அசந்திருந்தாலும் பெரிய விபத்தாகி இருக்கும் .
அந்த ஜெட்லாக் விஷயத்தை வச்சு கதை பண்ணி இருக்கறது பாராட்ட வேண்டிய விஷயம் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462