பெயர் வைக்காமல் சூட்டிங்முடிப்பதையே மனுஷன் ஃபேஷனாக்கிக் கொண்டாரோ என்று எண்ணும்அளவுக்கு அஜித்தின் எல்லாம் படங்களும் உருவாவது வழக்கமாகி, கடைசியில் பெயர் வைக்கும் நிகழ்ச்சியே ஒரு பேரின்பப் பெருவிழா ரேஞ்சுக்கு நடக்கிறது அவர் படங்களில்
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படமும் அப்படியே தான் நடந்து இருக்கிறது.
ஏறக்குறைய 75 சதகிவித படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட இந்தப் படத்திற்கு இன்னும் அதிகாரப் பூர்வமாக டைட்டில் வைக்க வில்லை.
படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் விளம்பர வேலைகளை விரைவில் துவங்க இருக்கிறார்கள்.
இனியும் பெயர் வைக்காமல் இருப்பது என்பது ,
உப்பு இல்லாத உணவை தூத்துக்குடியில் விற்கிற மாதிரிதான்.
எனவே படத்துக்கு விநாயகர் சதுர்த்தி அன்று பெயர் வைக்க முடிவு செய்து இருக்கிறார்கள்
(நாலைந்து பேரை எழுதி பிள்ளையார் முன்பு போட்டு சீட்டுக் குலுக்கி எடுப்பார்களோ ?)
வீரம் படத்துக்கு ஆரம்பத்தில் விநாயகம் பிரதர்ஸ் என்று பெயர் வைத்து இருந்தது இப்போது ஞாபகம் வருகிறது.
ஒரு வேளை அதே பெயரை படத்துக்கு வைப்பார்களா ? என்பது தெரியவில்லை .
எப்படியோ பிள்ளையார் சதுர்த்தி அன்னைக்கு வைக்கிற பேரு பிள்ளையாரே வச்ச பேரு மாதிரி !