சிகரம் விஷுவல் மீடியா சார்பில் புதுமுகம் சரவணன் தயாரித்து ஹீரோவாக நடிக்க , முருகானந்தத்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் முருகாற்றுப்படை .
பிரபல தொழிலதிபர் சிவராமன் … என்ஜினீயரிங் கல்லூரி படிக்கும் அவரது மகன் முருகன் , முருகனுக்கு கலைக் கல்லூரி மாணவன் ‘கருப்பு’வோடு ஏற்படும் மோதலும் நட்பும்… சிவராமனுக்கு தொழில் எதிரிகளால் வரும் பிரச்னை … கருப்புவோடு கலைக் கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து அந்த பிரச்னையை தீர்ப்பது…. என்று கதை போகும் இந்தப் படம்,
தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கும் கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை அழித்து அவர்களுக்குள் நட்பு வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கிறதாம் .
படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நவிகா கொட்டியா, இந்தியில் ஸ்ரீதேவி அசத்திய இங்க்லீஷ் விங்க்லிஷ் படத்தில் ஸ்ரீதேவிக்கு மகளாக நடித்தவர் .. அதே போல படையப்பா சந்திரமுகி உட்பட பல படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்த தருண் இந்தப் படத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கிறார் . ஹீரோயினுக்கு தாத்தாவாக நடிக்கிறார் பழம்பெரும் நடிகர் வி எஸ் ராகவன்
கணேஷ் ராகவேந்திரா என்பவரின் இசையில் மெலடி, கானா, நாட்டுப்புற பாட்டு , புரட்சிப் பாட்டு என்று மொத்தம் வகைவகையாய் மொத்தம் ஐந்து பாடல்கள் .
ஐந்து பாடல்களையும் எழுதி இருப்பவர் , சிவன் படத்தில் ஜில்லா விட்டு ஜில்லா வந்து பாடலை எழுதிய மோகன்ராஜ் . “எல்லா பாடலையும் நான்தான் எழுதப் போறேன்னு டைரக்டர் முருகானாந்தம் என்கிட்டே சொல்லவே இல்ல. ஒரு பாடலை கொடுக்கும்போது ‘எனக்கு திருப்தியா எழுதிக் கொடுத்தா அடுத்த பாட்டு தருவேன்’னு சொல்வார் . இப்படி ஒவ்வொன்னா எழுதி அஞ்சாவது பாட்டு வரை நானே முன்னேறினேன் ” என்கிறார் .
பாடல் வரிகளில் “தலைவா வா தலையே வா” என்று எல்லாம் வரிகளைப் போட்டு அஜித் ரசிகர்களுக்கும் குறி வைத்து இருக்கிறார்கள் .
ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கே ஆர் ” பெரிய ஆட்களை போட்டு படம் எடுத்தா துட்டு வருதான்னு பாக்குறதுலயே குறியா இருப்பாங்க . ஆனா புதியவர்கள் ஜெயிக்கறதுலையே குறியா இருப்பாங்க ” என்றார் .
“மாணவர்களுக்கு ஏழை பணக்காரன் பெரிய படிப்புக்காரன் சின்ன படிப்புக்காரன் என்ற பேதமே கூடாது என்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம் “என்றார் சரவணன்.
“ஹீரோ மற்றும் புரடியூசரா வந்து தம்பியா மாறிட்டான் சரவணன் ” என்று ஆரம்பித்த இயக்குனர் முருகானந்தம் “எத்தன தடவ நடிக்க சொன்னாலும் தயங்காம நடிப்பான் . படத்துக்கு அஞ்சு கோடி செலவாச்சு . இந்த அஞ்சு கோடியையும் ரிலீசுக்கு அப்புறம் எடுத்துக் கொடுப்பேன் அப்படீன்னு சரவணனோட அப்பாகிட்ட எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கேன் ” என்றார் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462