ஒரு திரைப்படம் உருவாகும்போது , “இதே படக் குழுவினரை வைத்து மேலும் ஒரு படத்தை தயாரிப்பேன்” என்று பல தயாரிப்பாளர்கள் சொல்வதுண்டு. ஆனால் அது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை .
சில சமயம் பட வெளியீட்டுக்குப் பிறகு சம்மந்தப்பட்ட தயாரிப்பாளரோ, இயக்குநரோ முகம் கொடுத்துக்கூட பேசிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், சேது பூமி படத்தின் தயாரிப்பாளர் எம்.ஏ.ஹபீப், அப்படி இல்லாமல்,
தான் சொன்னது போலவே, தனது முதல் படக்குழுவினரை வைத்து இரண்டாவதாக ஒரு படத்தைத் தயாரிக்க தொடங்கி விட்டார்.
ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீல் தயாரித்த முதல் படம் ‘சேதுபூமி’.
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்க்கையையும், அங்கு இஸ்லாமியர்களும் இந்துக்களும் எப்படி ஒற்றுமையாகவும், உறவுக்காரர்களாகவும் வாழ்கிறார்கள் என்பதையும் சொல்லிய படம் அது .
’சேதுபூமி’ படத்தைத் தொடர்ந்து இப் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, இயக்கத்தில் ‘அக்பர்’ என்ற படத்தை தயாரிக்கிறார் எம்.ஏ.ஹபீப்.
இதில் ‘சேதுபூமி’ பட நாயகன் தமன் தான் ஹீரோவாக நடிக்கிறார். எஸ்.முத்துராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, பாரதி – மோனிஷ் இசையமைக்கிறார்கள். இவர்கள் மட்டும் இன்றி,
இப்படத்தில் இடம்பெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும், ‘சேதுபூமி’ படத்தில் பணியாற்றியவர்களே.
தற்போது படத்திற்கான நாயகி தேர்வில் ஈடுபட்டுள்ள இயக்குநர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமியிடம் படம் குறித்து கேட்டதற்கு,
“அன்பையும், அறனையும் நிலை நிறுத்துபவன் அக்பர்”, என்று ஒரே வரியில் சொல்லி முடித்தவர், “இப்படத்தில் நகைச்சுவை உள்ளிட்ட அனைத்து கமர்ஷியல் விஷயங்களும் இருக்கும்.
’சேதுபூமி’ படத்தில் எப்படி உறவுகளைப் பற்றி சொல்லி, குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக கொடுத்தேனோ, அதேபோல், ‘அக்பர்’ படமும் குடும்பத்தோடு பார்க்ககூடிய கமர்ஷியல் படமாகவே இருக்கும்” என்கிறார்.
வாழ்த்துகள் !