குன்றம் புரடக்ஷன்ஸ் கே கே டி தயாரிக்க, எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வநாத், நமோ நாராயணன், வெண்பா, ஆகாஷ் , பிரியதர்ஷினி நடிப்பில் அருண் பிரசாத் இயக்கி இருக்கும் படம்.
அரசியல்வாதி ஒருவனின் (நமோ நாராயணன்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்விக் கூடத்தில் பொறுப்பில் இருக்கும் அவனது மனைவியின் மைத்துனன், மாணவர்களுக்கு சீட்டு தரவும் முறையற்று பாஸ் போடவும் அதிகப் பணம் கேட்க, அதை வீடியோ எடுக்கும் பெண்ணால் அவர்களுக்குப் பிரச்னை வருகிறது
அந்தப் பெண் (பிரியதர்ஷினி) கொல்லப்படுகிறாள்.
கொன்றவனைத் தேடி அந்தப் பெண்ணின் தந்தை ( எம் எஸ் பாஸ்கர்) போகிறார் . அவருக்கு இன்னொரு மகள் ( வெண்பா) ; அவளது கணவன் ( கபாலி விஸ்வநாத்)
கட்சி ஆள் ஒருவருக்குப் போக வேண்டிய தேர்தல் சீட்டை மேற்படி அரசியல்வாதி தனது மைத்துனனுக்குத் தர , கட்சி ஆள் கடுப்பாகிறான் .
இருவரையும் கடத்தி வைத்து உண்மை அறிய முயலும், இறந்த பெண்ணின் அப்பாவிடம் இருவருமே தான் கொல்லவில்லை என்று அடுத்தவர் மேல் பழியைப் போட , உண்மையில் கொன்றவர் யார் என்பதும் அஹற்கு அப்புறம் வரும் ஒரு திருப்பமுமே அக்கரன்
மேலே சொன்ன கதையை அப்படியே ஏனோதானோ என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள். பாம்பும் இல்லை கயிறும் இல்லை என்ற நிலையில் படம் போகிறது .
கசாப்புக் கடையில் கூட இவ்வளவு ரத்தம் பார்க்க முடியாது . அப்படி வெட்டி , குத்தி, குதறி , உருவி, கிழித்து ரத்தப் பீய்ச்சலைக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள் .
கொலை குறித்து குற்றவாளிகள் இருவரும் கூறும் வெவ்வேறு வெர்ஷன்கள் இன்ட்ரஸ்டிங். ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டார்கள் .
கடைசி ட்விஸ்ட் டை 1965 டிசம்பர் 10 அன்று வந்த ஆசை முகம் படத்தில் இன்னும் சிறப்பாகக் காட்டி இருப்பார்கள். ஆனால் எம் ஜி ஆர் இருந்தும் அதையே அப்பவே மக்கள் அவ்வளவா ஒத்துக்கல.
அக்கரன்…… அக்ரமன் .