இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.
இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. Action Reaction நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறது.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியபோது, “இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான், இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு நல்ல படமாக உருவாக்கியிருக்கிறோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது. இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்துதான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.


Action Reaction நிறுவனம் சார்பில் ஜெனிஷ் பேசியபோது, “அமீகோ பெயரே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷுவல்களும் சூப்பராக வந்துள்ளது. வியாபாரத்திற்காக பேசும்போது எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. திரை வட்டாரத்தில் நல்ல பெயரை இந்தப் படம் பெற்றுள்ளது. ஆக்சன் ரியாக்சன் சார்பில், இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். “என்றார்.
நடிகர் முரளி பேசியபோது, “மகேந்திரன் ஃபிரண்டாக தான் இங்கு வந்தேன். இந்தப் படத்தின் கனெக்டிங் பீப்பிளாக அவன் தான் இருந்திருக்கிறான். எல்லா நண்பர்களுக்கு வாய்ப்பு வாங்கி தந்துள்ளான், அவனுக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இல்லை அப்பா என்று தான் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் இப்படி ஒரு அப்பா கிடைக்க மாட்டார்கள், எனக்கு இயக்குநரைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. இயக்குநர் பிரசாந்தும் நானும் நிறையப் பேசியிருக்கிறோம், நல்ல படம் எடுத்துள்ளார். கண்டிப்பாக இந்தப்படம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும் “என்றார்.
இசையமைப்பாளர் பாலமுரளி பாலு பேசியபோது, “மகேந்திரன் என் தம்பி மாதிரி. அவன் தான் எனக்கு போன் செய்து, ஒரு நல்ல கதை நீங்கள் இசையமைக்க வேண்டும் எனக் கேட்டான். அவனுக்குப் பண்ணாமல் எப்படி ? அப்படிதான் நான் இப் படத்திற்குள் வந்தேன். அதன் மூலம் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எனும் இன்னொரு தம்பி கிடைத்தார். தயாரிப்பாளர் முரளி மிகப்பெரிய ஆதரவு தந்தார். அவரோடு சென்னையில் எல்லா ஹோட்டல்களிலும் சாப்பிட்டிருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. கு கார்த்திக் எல்லாப்பாடல்களையும் அழகாக எழுதித் தந்தார். எப்போதும் ஒரு பாடலுக்கு 5 சரணங்கள் எழுதித் தந்து விடுவார். “என்றார்.
ஸ்டன்ட் இயக்குநர் டான் அசோக் பேசியபோது, “அமீகோ கேரேஜ் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. விஷுவல், பாடல்கள் எல்லாம் அருமையாக வந்துள்ளது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் சூப்பராக வந்துள்ளது. மகேந்திரன் எந்த ஷாட்டாக இருந்தாலும், ரெடியாக இருப்பார். நிறைய ஒத்துழைப்புத் தந்தார் ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார். இயக்குநர் பழகப் பழக ஒரு குடும்பமாகவே ஆகிவிட்டார். இப்போது அவர் வீட்டில் நாங்கள் சமைத்து சாப்பிடும் அளவு நெருக்கமாகி விட்டார். படம் மிக நன்றாக வந்துள்ளது “என்றார்.
பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியபோது, “அமீகோ கேரேஜ் மிக ஜாலியாக வேலை பார்த்த படம். இதுவரை இசையமைப்பாளர் பால முரளி உடன் காமெடி கமர்ஷியல் என செம்ம ஜாலியான படமாகத்தான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் இது ஆக்சன் டிராமா படம், பால முரளியிடம் நமக்கு நல்ல வாய்ப்பு என்றேன். இப்படி ஒரு படத்தில் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம், பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. “என்றார்
நடிகர் முரளிதரன் சந்திரன் பேசியபோது, “இயக்குநர் பிரசாந்த் இந்த கேரக்டர் பற்றிச் சொன்னபோது, எனக்கு நடிக்கத் தெரியாது என்றேன். வாங்கப் பார்த்துக் கொள்ளலாம் என்றார். என்னை நடிகனாக்கி விட்டார். இப்போது எல்லோருமே நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டார்கள்,”என்றார்
ஶ்ரீக்கோ உதயா பேசியபோது, “. கொரோனா டைமில் மகேந்திரன் போன் செய்து 2 நாள் வேலை இருக்கிறது வாருங்கள் என்றார். என்னை மிக நன்றாகக் கவனித்தனர். கொரோனா சமயம் ஆனால் எல்லோரையும் அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அமீகோ கேரேஜில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் பாடலாசிரியர் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். இயக்குநர் இசை ஞானம் கொண்டவர், படத்தையும் அருமையாக எடுத்துள்ளார்.”என்றார்.