அமிகோ கேரேஜ் @விமர்சனம்

பீப்புள் புரடக்ஷன் ஹவுஸ் சார்பில் முரளி ஸ்ரீனிவாசன் தயாரிக்க, மாஸ்டர் மகேந்திரன்,  ஜி எம் சுந்தர், ஆதிரா, தீபா பாலு, தாசரதி  நடிப்பில் பிரசாந்த் நாகராஜன் இயக்கி இருக்கும் படம் . அமிகோ என்றால் ஸ்பானிய மொழியில் நண்பர்கள் என்று பொருள் .

ஸ்பானியப் பெண்ணின் காதலுக்கு ஆளாகி, அவள் பரிசாகக் கொடுத்து விட்டுப் போய்விட்ட கிராம போனில் ஸ்பானியப் பாடல்கள் கேட்டுக் கொண்டு , கார் கேரேஜ் நடத்திக் கொண்டு குட்டி தாதாவாக இருப்பவன் ஒருவன் ( ஜி எம் சுந்தர்)

அவனுடைய  கேரேஜ் இருக்கும் ஏரியாவுக்கே  தங்கள் பிள்ளைகள் போகக் கூடாது என்பது பல பெற்றோரின் ஏக்கம் . எனினும் எப்போதும் ஜாலியான ஆட்கள் இருக்கும் அந்த  கேரேஜின் மீது ஒரு பள்ளி மாணவனுக்கும் ( மாஸ்டர் மகேந்திரன்) அவனது நண்பர்களுக்கும் ஓர் ஈர்ப்பு . கண்டித்த வாத்தியாரை மாணவர்கள் கேரேஜ்காரனிடம் போட்டுக் கொடுக்க, அவன் வாத்தியாரை கண்டிக்க, கேரேஜ்காரனும் மாணவர்களும் நெருங்குகின்றனர் .  

டாஸ்மாக்கில் ஒரு பிரபல தாதாவின் தம்பி மாணவர்களிடம் வம்பிழுக்க, தாதா தம்பி பற்றி மாணவன் கேரேஜ்காரனிடம் சொல்ல, மாணவர்களுக்காக கேரேஜ்காரன் பிரபல தாதாவை சந்திக்க, 

தாதாவின் தம்பி விஷயத்தை தாதாவுககும் மாணவனுக்குமான தனிப்பட்ட பகையாக மாற்றி விட , மாணவனை சுற்றி கொலை குத்து, வெட்டு, ரத்தம் எல்லாம் சூழ , 

அதனால் அவனது பெற்றோர் மற்றும் காதலி பாதிக்கப்பட,  நடந்தது என்ன என்பதே படம் .

அமிகோ கேரேஜ் பெயருக்கான காரணமும் அந்தப் பின்னணி கதையும் அருமை. அதை காட்சிப்படுத்தி  இருந்தால் அசத்தி இருக்கும் . பேச்சுவாக்கில் விட்டு விட்டார்கள் . ஆனால் அப்படியே காட்சிப்படுத்தி இருந்தால் கூட அந்த கேரேஜ்காரனின் கேரக்டருக்கு அது பொருத்தம் இல்லாமல்தான் போயிருக்கும். 

கடல் போன்ற கண்களுடன் அழகாக இருக்கும் நாயகி ஆதிரா நன்றாக நடிக்கவும் செய்கிறார் . சில காட்சிகளில் வரும் தீபா பாலுவும் அழகு . 

பால முரளி பாலுவின் பின்னணி இசை  படத்தின் கொத்து பரோட்டா காட்சிகளைக் கூட  அழகாக இணைத்துக் கொடுக்கிறது . சபாஷ் 

டான் அசோக்கின் சண்டை இயக்கம் சும்மா பட்டையைக் கிளப்புகிறது . 

விஜயகுமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவும் சிறப்பு 

வழக்கமான கதை , லாஜிக் இல்லாத திரைக்கதை, குழந்தைத்தனமான வசனம் , போதாமை கொண்ட இயக்கம், சினிமாத்தனமான நாயகன் மற்றும் வில்லன்கள் எல்லா(ரு)ம் சேர்ந்து… படத்தை ட்ரைடோர் கேரேஜ் ஆக்கி விட்டன(ர்).

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *