நடிகை ஜெய சித்ராவின் மகனும் சில படங்களில் நடித்தவருமான அம்ரேஷ், ராகவா லாரன்ஸ் நடித்த மொட்டை சிவா கெட்ட சிவா படத்துக்கு இசை அமைப்பாளராக ஆகி இருக்கிறார்
ஜப்பானில் கல்யாண ராமன் உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக பல வருடங்களுக்கு முன்பு நடித்தவர் டிங்கு இப்போது அயல்நாட்டில் இருக்கிறார்
சில வருடங்களுக்கு முன்பு அம்ரேஷ் இசையில் தான் இயக்க இருந்த ஒரு படத்துக்காக போட்ட பாடலை அம்ரேஷ் இப்போது மொட்டை சிவா கெட்ட சிவா படத்துக்கு போட்டு விட்டதாக ,
முகநூலில் கண்ணீரோடு ஒரு வீடியோ போட்டு இருந்தார் டிங்கு
இது பற்றி விளக்கம் அளிக்க, மொட்டை சிவா கெட்ட சிவா படத்தில் இயக்குனர் சாய் ரமணி, கவிஞர் சொற்கோ உடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அம்ரேஷ்.
”சில வருடங்களுக்கு தாத்தாவோட கார் என்ற படம் இயக்குவதாக வந்த டிங்குவுக்கு நான் ஒரு பாடல் போட்டுக் கொடுத்தேன் . அதற்கு முழுக்க முழுக்க என் செலவுதான் . படத்துக்காக எந்த ஒப்பந்தமும் போடப் படவில்லை
பாடல் முடிந்ததும் இந்த பாடலைக் காட்டி புரடியூசர் பிடிக்க வேண்டும் என்று என்னிடம் ஒன்றரை லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு பாங்காக் போனவர் சுகமாக அதை செலவழித்து விட்டு வந்தார் .
அப்புறம் வந்து அந்தப் பாடலை படம் பிடிக்க பணம் கேட்டார் நான் மேலும் நான்கு லட்சம் கொடுத்தேன் . இந்தப் பணம் கொடுத்ததை நான் சட்டப்படி ஒப்பந்தம் போட்டுள்ளேன்
அந்தப் பணத்தை வைத்து பாடலை படம் பிடிப்பதாக சொன்னவர், அங்கே போய் வேறொரு இசை அமைப்பாளரின் இசையில் ஒரு படம் ஆரம்பித்து
அந்தப் படத்துக்கு இந்த பாடலைப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக சொன்னார் . நான் அதை ஏற்கவில்லை .
எனவே அந்தப் பாடலை மொட்டை சிவா கெட்ட சிவா படத்துக்கு பயன்படுத்தினேன் . இதில் என்ன தப்பு ?
எந்த ஒப்பந்தமும் போடாமல் என் செலவில் உருவாகியதோடு , பல லட்சங்களையும் இழந்த நிலையில் என் பாடலை எந்தப் படத்தில் நான் பயன்படுத்திக் கொண்டால் என்ன ?
ஆனால் அவர் நான் என்னவோ அவரை ஏமாற்றியதாக நடிக்கிறார் .
நான் சொன்ன விசயத்துக்கு எல்லாம் என்னிடம் ஆதாரம் உண்டு . அவரிடம் அவர் சார்பாக ஆதாரம் இருந்தால் கொண்டு வரட்டும்” என்கிறார்