வித்தியாசமான கதைக் களத்தில் ‘ அண்டாவ காணோம் ‘

anda 7
ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’.
ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப்  படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார்.

படத்தில் வரும் ஓரு  பேசும் அண்டாவுக்கு (பாத்திரம்) விஜய் சேதுபதி குரல் கொடுத்து இருக்கிறார் . அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார்.

andu 4 

படத்தின் இசை வெளியீட்டு விழாவும்  ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவும் ஒன்றாக நடந்தது

திரையிடப்பட்ட முன்னோட்டத்தில் ஸ்ரியா ரெட்டி , திமிரு படத்தில் வந்தது போன்ற ஒரு கோபக்காரக்  கதாபாத்திரத்தில் ‘ய்ய்ய்ய்ய்யாஆஆஆய்ய்ய்ய்ய்…” என்று கத்துகிறார் . அதே ஆங்காரம் மிக்க நடிப்பு .

பாடல்கள் மண் மணம் , காதல் , கிராமத்து வாழ்க்கை எல்லாம் கலந்து இருந்தன
நிகழ்சசியில் பேசிய ஸ்டுடியோ 9 தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் “என் சினிமா கேரியரில் தெரிந்தோ, தெரியாமலோ ஆரம்பத்தில் இருந்தே சதீஷ்குமாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன்.
anda 2
அவர் மாதிரி ஒரு படத்தை கொண்டு சேர்ப்பது என்பது யாராலும் முடியாது. தேசிய விருதுக்கு படங்களை அனுப்பி, அவற்றிற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருவது என்பது அவரால் மட்டும் தான் முடியும்.
அவரைப் பின்பற்றிதான் தர்மதுரை படத்துக்கு தேசிய விருது பெற்றோம்.  என் நலனுக்காக என்றும் யோசிப்பவர் சதீஷ்குமார்” என்றார்

இயக்குனர் யுரேகா தனது பேச்சில் “சென்னைக்கு சிவப்பு விளக்குப்  பகுதி வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தை எடுத்தேன். அதை தணிக்கைக்  குழுவில் கூட வரவேற்கவில்லை.

andu 7
அந்த நேரத்தில் மிகவும் தைரியமாக அந்த படத்தை வாங்கி வெளியிட்டார்  சதீஷ் குமார் . பணத்துக்காக அந்த படத்தை அவர் வெளியிடவில்லை, நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்றுதான் வெளியிட்டார்.
நல்ல சினிமா கொடுக்க தமிழ் சினிமாவில் அவர் போல சிலர்தான் இருக்கிறார்கள், அவர் தொடர்ந்து படம் தயாரித்துக்  கொண்டே இருக்க வேண்டும்” என்றார் 

“ஸ்ரியா ரெட்டியை தமிழ் சினிமாவின் ஸ்மிதா படேல், ஷபனா ஆஸ்மி என சொல்லலாம். இந்த மாதிரி படங்களை தைரியத்தோடு  எடுக்க  சதீஷ்குமாரால்தான் முடியும்.

andu 5
யார் அதிக இயக்குனர்களை அறிமுகப்படுத்துவது என்ற போட்டி அவருக்கும் எனக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது.
ஆனாலும் அதில் எனக்கு முன்னால் சென்று கொண்டேயிருக்கிறார் சதிஷ்” என்றார் மனோபாலா.

இயக்குனர் பாலகிருஷ்ணன்.பேசும்போது “ஜேஎஸ்கே சாரின் கணிப்பு எப்போதும் தவறியதேயில்லை. ‘கூட மேல கூட வச்சி…’ பாடல் சென்சேஷனல் ஹிட் ஆகும் என அப்போதே சொன்னார்.

andu 8
அது நடந்தது. சினிமா தெரிந்த ஒரு தயாரிப்பாளர்” என்றார்

நெகிழ்வாகப் பேசிய இயக்குனர் பாலாஜி தரணிதரன்.”நடுவுல கொஞ்சம் பக்கத்தக்  காணோம் படத்தை நிறைய பேர் பார்த்தார்கள், நிறைய காட்சிகளை கட் செய்யச்  சொன்னார்கள். யாரும் படத்தை வாங்கவில்லை.

படத்தை பார்த்த சதிஷ்குமார் சார் ‘கட் எதுவும் செய்யத்  தேவையில்லை, அப்படியே ரிலீஸ் செய்யலாம்’ என்று சொன்னார். என் வாழ்நாளில் நான் கேட்ட மிக நல்ல வார்த்தைகளில் அதுவும் ஒன்று .
andu 9
அதோடு பொய்யாக ’20 நிமிடம் கட் செய்து விட்டோம் ‘என சொல்லிதான் படத்தை ரிலீஸ் செய்தார். அது சரியான விதத்தில் மக்களை சென்றடைந்தது.
ஒரு படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பது ஒரு இயக்குனருக்கு எவ்வளவு பெரிய வலியாக இருக்கும் என்பது இயக்குனர்களுக்கு மட்டுமே தெரியும்” என உணர்வுப் பூர்வமாக பேசினார்

“9 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம், இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. திமிரு அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். 

andu 1
இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு திமிரு பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார். நீங்க ஒண்ணும் தயாராக வேண்டாம், நேரா ஷூட்டிங்க்கு வாங்கன்னார்.
மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார வழக்கை சொல்லி கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளிய வந்திருக்காது” என்றார் நாயகி ஸ்ரியா ரெட்டி

இயக்குனர் ராம் தன் பேச்சில் ”ஒரு படத்தை எடுத்து விட்டு ரிலீஸுக்கு காத்திருக்கும் இயக்குனர்களுக்கு அதன் தயாரிப்பாளரோடு முரண் நிச்சயம் இருக்கும்.

andu 6
அதுபோல முரண்  சதீஷ்குமாருடன் எல்லா இயக்குனர்களுக்கும் இருக்கும். ஆனால்  அவர் கோணத்தில் பார்த்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும் .
என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக சொல்லி நம்மை சமாதானப்படுத்தி விடுவார்

எந்த ஒரு முன்னணி நடிகரின் கால்ஷீட்டை வைத்து படம் எடுக்காமல், கோடிகள் கொட்டி கொடுத்து படம் எடுக்காமல் 10 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது பெரிய சாதனை.

அந்த வகையில் ஜேஎஸ்கே மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார். .

andu 999

தரமணி படத்துக்கு 14 கட் கொடுத்து யு/ஏ சான்றிதழ் கொடுக்க முன் வந்தனர் தணிக்கை குழுவினர். மற்ற  எந்த தயாரிப்பாளரும் அதற்குத்தான் ஆசைப்படுவார் .
ஆனால் அந்தப் படம் பதினெட்டு வயதுக்கு மேல் வந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படம் . கதை அப்படிப்பட்டது இல்லை எனினும் பேசும் விஷயங்கள் அப்படி இருக்கும் .
எனவே அதற்கு ஏ சான்றிதழ் வருவதுதான் நியாயம் என்ற எனது கருத்தை ஏற்று கட் வாங்காமல் ஏ சான்றிதழ் வாங்கிக் கொண்டு வந்தார் சதீஷ். அவரை போல ஒரு தயாரிப்பாளரை பார்க்க முடியாது.
andu
இந்தப் படத்தின் பெயர் அண்டாவைக் காணோம் அண்டாவுக்கு பல உள் அர்த்தங்கள் உண்டு . உள்ளே இருப்பது பிரியாணியாக இருக்கலாம் .
அது தடைகளை உடைக்கும் மாட்டுக்கறி பிரியாணியாகவும் இருக்கலாம் என நினைக்கிறேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்”: என்றார் 

“இயக்குனர் வேல்மதி ஒரு கிராமத்தில் இருக்கும் 300 பேரை நடிக்க வைத்து எடுக்கப் போகிறேன் என்று  சொன்னார். அந்த கிராமத்தில் இருந்த அத்தனை பேருக்கும் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார் .

andu 99
இந்த மாதிரி ஒரு கதை என்று சொன்னவுடன் முதலில் நாங்கள் நடிக்க கேட்டுப் போனது ஸ்ரியா ரெட்டியைதான். என் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு நிச்சயம் தேசிய விருதுப்  பட்டியலில்
இந்த அண்டாவ காணோம் இடம் பிடிக்கும். இயக்குனர் ராமின் தரமணி வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும். தலயோட நாங்களும் கெத்தா வரோம்” என்கிறார்  ஜே.சதிஷ்குமார்.

இயக்குனர்கள் செல்வபாரதி, கிருஷ்ணா, பிரம்மா, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், கார்த்திக் ரிஷி, ரஞ்சித் ஜெயக்கொடி, நடிகர் வெங்கட் சுபா, ஜாஸ் சினிமாஸ் கண்ணன், தயாரிப்பாளர் லியோ விஷன் ராஜ்குமார்,

 andu 2
நடிகர் இளையராஜா, வினோத், நடிகை நவீனா, இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, பாடலசிரியர் மதுரகவி, இயக்குனர் வேல்மதி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *