‘டங்கா மாரி’க்கு அர்த்தம் சொல்லும் அனேகன்

தனுஷ்-கே வி ஆனந்த்-கார்த்திக்
தனுஷ்-கே வி ஆனந்த்-கார்த்திக்
ஏ  ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க கே வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அநேகன் படத்தின்  அடிஷனல் ஸ்பெஷல் நியூஸ்….. நீண்ட இடைவெளிக்கு பிறகு நவரச நாயகன் கார்த்திக் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதுதான். 

மும்பையைச் சேர்ந்த அமைரா  தஸ்தூர் முதல் கதாநாயகியாகவும் ஐஸ்வர்யா தேவன் என்ற மலையாள வரவு இரண்டாவது கதாநாயகியாகவும் (இப்ப இப்படி மாத்திட்டாங்க) நடிக்கும் இந்தப் படத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் நான்கு காதல் நிகழ்வுகளில் தனுஷ் காதலனாக நடிக்கிறார் .

இரட்டை எழுத்தாளர்கள் சுபா இந்தப் படத்தின் கதை திரைக்கதையில் கே வி ஆனந்தோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள் . இந்தக் கூட்டணி ஒன்றும் புதுசு அல்ல

Anegan Press Meet Stills (7)

படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய எல்லோரும் கார்த்திக்கை பற்றியே பேசினார்கள் . தனுஷ் கூட தனது பேச்சில் “ஷூட்டிங் ஸ்பாட்ல நான் கார்த்திக்கை பார்த்துகிட்டே இருப்பேன் . ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பளைய அப்படி பாக்கறேன்னு சொன்னா .. அதா சொல்லவே ஒரு மாதிரிதான் இருக்கு . ஆனா அந்த அளவு ஒரு கரிஷ்மா அவர்கிட்ட இருக்கு ” என்றார் .

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் உட்பட, விழாவில் கலந்து கொண்ட எல்லோரும் தனுஷின் நடிப்புத் திறமையை வெகுவாக புகழ்ந்து தள்ளினார்கள் . “ரஜினியை விட கமலை விட மிகப்பெரிய நடிகர் தனுஷ் ” என்ற ரீதியில் ஆர்.வி.உதயகுமார் பேச, மேடையில் இருந்து நடையைக் கட்டுவது போல பாவ்லா காட்டி கலகலக்க வைத்தார் தனுஷ் .

இரட்டை எழுத்தாளர்கள் சுபா
இரட்டை எழுத்தாளர்கள் சுபா
“பொதுவா என் படங்களில் எனக்கு ஒரு லுங்கி மற்றும் ஹவாய் செருப்புதான் காஸ்டியூமாக  இருக்கும் . ஆனால்  இந்தப் படத்தில் எனக்கு விதம் விதமான டிரஸ் . அதுமட்டுமல்ல இதுவரை நான் நடித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் இதுதான் . அதற்காக தயாரிப்பாளர் அகோரம் மற்றும் இயக்குனர் கே  வி ஆனந்துக்கு நன்றி ” என்றார் தனுஷ்.

“இப்ப உள்ள நடிகர்களிலேயே அதிகமாக காதல் அனுபவம் .. அதில் தோல்வி வெற்றி எல்லாம் பார்த்த நடிகர் தனுஷ்தான் .. அதாவது நடிச்ச கதாபாத்திரங்கள் மூலமா ..” என்று கலகலக்க வைத்து ஆரம்பித்த கே வி ஆனந்த் ” பொதுவா என் படங்களில் ஏதாவது சமூக பிரச்னை முக்கியமாவும் காதல் செகண்டரி விஷயமாகவும் இருக்கும் . ஆனா இது முழுக்க முழுக்க காதலை சொல்லும் படம் .அதுக்கு தனுஷ் ரொம்ப பொருத்தமா இருப்பாருன்னு முடிவு செஞ்சு அவரை நடிக்க அழைச்சேன் .

அமைரா  தஸ்தூர்
அமைரா தஸ்தூர்

அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட கேரக்டரை கார்த்திக் பண்ணினா நல்லா இருக்கும்னு நினைச்சப்ப அவரு எல்லாம் நடிக்க மாட்டாருன்னுதான் நினைச்சேன். ஆனா ஒத்துக்கிட்டு நடிச்சதோட பிரம்மாதமா நடிச்சு இருக்காரு . அவர் கூட ஒர்க் பண்ண வாய்ப்பு கிடைச்சது எனக்கு பெரிய கொடுப்பினை .

ஆனா கதாநாயகியா அறிமுகம் ஆகும் அமைரா  நடிப்பில் தனுஷ் , கார்த்திக் இவங்க ரெண்டு பேருக்கும் ஈக்குவலா நடிச்சு இருக்காங்க .

ஹாரீஸ் ஜெயராஜ் முதன் முதலா ஒரு கானா பாட்டுக்கு இசை அமைச்சு இருக்காரு . டங்கா  மாரின்னு ஆரம்பிக்கும் அந்தப் பாட்டை ரோகேஷ்னு ஒரு கானா கவிஞர் எழுதி இருக்கார். வைரமுத்து சார் மூணு பாடல்களை அற்புதமா எழுதி இருக்காரு . கபிலன் வைரமுத்து ஒரு பாட்டுல மணிச்சிகைன்னு  ஒரு சங்ககாலப் பூவின் பெயரை பயன்படுத்தி இருக்காரு .

 டங்கா  மாரியில  நாங்க பண்ணி இருக்கிற பாவத்துக்கு பரிகாரமா இந்த நாலு  பாட்டுகள் இருக்கும் .இவ்வளவு விதம் விதமான பாடல்கள் ஹாரீஸ் ஜெயராஜ் போட்டு இருக்கறது இதுதான் முதல் தடவை ” என்றார் .

ஐஸ்வர்யா தேவன்
ஐஸ்வர்யா தேவன்

அது சரி டங்கா  மாரி  என்றால் என்ன? மாத்தி மாத்தி பேசுற பொண்ணு என்று அர்த்தமாம் . சர்தான் பா !

சரி .. படத்தின் டிரைலரும் பாடல்களும் எப்படி இருக்கு .

படத்தின் வண்ணம் , காட்சி அமைப்பு,  ஷாட்கள், கேமரா கோணங்கள் ,பின்புலங்களை பயன்படுத்தும் விதம் , அழகழகான லொக்கேஷன்களில் அழகோ அழகான பெண்கள் …. அவர்களை கேமராவில் விழுங்கும் விதம் , உடைகள், ஆர்ட் டைரக்ஷனை பயன்படுத்தும் விதம்…. ஒரு நொடி கண் இமைக்கக்  கூட மனசு வரவில்லை

சும்மா சொல்லக் கூடாது… கே வி ஆனந்த் நிஜமாவே ரசனைக்கார மனுஷன்யா !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →