திருச்சித்ரம் பட நிறுவனம் சார்பில் டாக்டர் எம் திருநாவுக்கரசு உருவாக்கித் தயாரிக்க, விதார்த் , வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், தன்யா , விஜய் டிவி ராமர் நடிப்பில் எஸ் பி சுப்புராமன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் , கலாச்சார மேன்மைக்கும் வரலாற்றுப் பெருமைக்கும் ஆகப் பெரும் பங்களிப்பை செய்து இருக்கும் தமிழ் இனத்தின் இந்தத் தமிழ் மாநிலம், மருத்துவத்திலும் முன்னோடி மாநிலமாக இருப்பது கண்டு பொருமி வஞ்சம் வளர்ந்து அயோக்கியத்தனமாக துரோகம் செய்து ,
தமிழ் மாணவர்களை மருத்துவம் படிக்க விடாமல் கெடுப்பதற்காகவே வட இந்திய சங்கிய மேட்டுக்குடிக் கூட்டத்தால் உருவாக்கப்பட்ட நீட் படிப்பால் எத்தனை தகுதி வாய்ந்த தமிழ்நாட்டு , பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ லட்சியக் கனவு கருக்கப்பட்டது ; மகள் அனிதா போல எத்தனை வருங்கால மருத்துவ மேதைகள் அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை நினைவுபடுத்துவதோடு
நீட் தேர்வை எழுதியவர்கள் பட்ட கஷ்டங்கள் இழப்புகள் மாறா வடுக்கள் ஆகியவற்றைச் சொல்லி … அதன் பின்னால் உள்ள உள்ளூர் உள்நாட்டு வஞ்சகர்கள் , ஊழல் பேர்வழிகள் அனைவரையும் அம்பலபடுத்தும் படமாக வந்திருகிறது அஞ்சாமை . சர்க்கார் என்ற பட்டம் பெற்ற நாடகக் கலைஞனைப் ( விதார்த்) பார்த்து அவன் மகனுக்கும் நாடகத்தின் மீது ஆசை வர, அவன் மனைவி ( வாணி போஜன்) அதற்காகக் கோபப்பட்டு மகனை நன்றாகப் படிக்க வைக்கச் சொல்ல,
தானும் நாடகக் கலையை விட்டு விலகி, அதே நேரம் மகன் தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்பதற்காக வாத்தியர்களுக்கு வேலை எல்லாம் செய்து மகனைப் படிக்க வைக்கிறான் அந்த அன்பு அப்பன் மற்றும் கணவன்.
மகன் மருத்துவர ஆக வேண்டும் என்று அம்மாவுக்கு ஆசை .
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மகனை (கிருத்திக் மோகன்) தனியார் பள்ளியில் சேர்க்கச் சொல்லி ஒரு பள்ளித் தாளாளர் சிபாரிசோடு வந்து மிரட்ட , அதையும் மீறி அரசுப் பள்ளிக்கே அனுப்ப , அவர்கள் பகைக்க, அந்த சமயத்தில் வருகிறது நீட். எமன்.
கோச்சிங் கிளாஸ் போனால்தான் நீட் தேர்வில் தேர்வாக முடியும் ஏனென்றால் நீட் எக்ஸாம் மாணவர்கள் அதுவரை படித்த பாடத்திட்டத்தில் இல்லை
லட்சக்கணக்கில் கோச்சிங் கிளாசுக்கு பணம் கேட்க , பூர்வீக விவசாய நிலம், மாடு கண்ணு, மனைவியின் நகை அனைத்தையும் விற்று மகனை கோச்சிங் கிளாஸ் அனுப்புகிறான் சர்க்கார் .
நன்றாகப் படிக்கிறான் மகன் .
ஆனால் ஆனால் படிப்பறிவில்லாத பெற்றோர்களைக் கொண்ட பிற்படுத்தப்பட்ட ஏழை கிராமத்து மாணவர்களை மருத்துவம் படிக்க விடாமல் தடுக்க , நீட் அப்ளை செய்வதில் ஏற்படுத்தப்பட்ட சிரமங்கள், குழப்பங்கள், கஷ்டங்கள், டென்சன்கள் இவை போக ,
தமிழ் நாட்டு மாணவர்களுக்கு ஜெய்ப்பூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட, தேர்வுக்கு மூன்று நாட்களே இருக்கும் நிலையில் அப்பாவும் மகனும் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் போக ,
பையனைப் படிக்க வைக்க அப்பா மூவாயிரம் கிலோ மீட்டர் நெரிசலில் கஷ்டப்பட்டுப் பயணிக்க
ஜெய்ப்பூரில் மொழி தெரியாத நிலையில் தவறான இடத்துக்கு பொறுப்பற்ற ஆட்டோக்காரன் கொண்டு போய் விட,
அங்கிருந்து அவசர அவசரமாக சரியான தேர்வு மையத்துக்குப் போனால் அதற்குள் நேரம் முடிந்து கேட்டை மூடி விட , ஓடிப் போய் அவர்கள் காலில் விழுந்து பிள்ளையை தேர்வு எழுத அனுப்பும் தகப்பன்,
அடுத்த சில நிமிடங்களில் இதுவரை ஏற்பட்ட மன உளைச்சலால் ஜெய்ப்பூர் சாலையில் விழுந்து செத்தே போகிறான் .
தேர்வு எழுதி வந்த பையன் அப்பாவைப் பிணமாகப் பார்க்க, ஊரில் குடும்பம் அலறித் துடிக்க,
”நீட் தேர்வு முறைக்குக் காரணமானதன் மூலம் என் அப்பாவைக் கொன்ற அத்தனை அதிகாரிகள் அரசியல்வாதிகள் மீதும் எப் ஐ ஆர் போட வேண்டும்” என்று மாணவன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக ,
அங்கே ஒரு நல்ல போலீஸ் அதிகாரி (ரகுமான்) இருக்க, நடந்தது என்ன என்பதே இந்த அஞ்சாமை .
கலை என்பதன் அடிப்படை பொழுதுபோக்காக இருக்கலாம். தப்பில்லை . ஆனால் கலையின் நோக்கம் பொழுதுபோக்கு மட்டும் அல்ல . சமூக அக்கறைதான் என்ற உயர்ந்த தத்துவத்துக்கு மகுடம் சூட்டும் படம் இது.
அப்படி ஒரு அற்புதமான சித்திரமாக படத்தைக் கொடுத்து இருக்கும் திருச்சித்ரம் திருநாவுக்கரசு போற்றுதலுக்கு உரியவர்.
சாதிய, பண, வடக்கத்தி ஆதரவுத் திமிரில் நீட்டுக்கு ஆதரவாக குலைக்கும் நாய்கள் கூட வாயை மூடிக் கொள்ளும் அளவுக்கு சரியான தரவுகளோடு காட்சிகளை அமைத்து படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் எஸ் பி சுப்புராமன்.
படிப்பு ஏன் கஷ்டப்பட்டு படிக்கும்படி இருக்க வேண்டும் .
ஒரு படிப்பு மாணவனுக்கு மன உளைச்சலைத் தரும்படி இருந்தால் அது யாருடைய குற்றம்?
இந்தியாவின் மருத்துவத் தலைநகர் சென்னை என்று பெயர் பெற்ற அளவுக்கு தலைசிறந்த மருத்துவர்களை தமிழகம் நீட் தேர்வு இல்லாமலேயே உருவாக்கியதே . அப்புறம் எதுக்கு இந்த நீட்?
சில லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கும் ஒரு பாடத்திட்டத்தில் இருந்து ஒரு தேர்வை , அந்த பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு அரசுகளே தந்த வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் மேல் ஏன் திணிக்க வேண்டும் .
மருத்துவ படிப்புக்கு எல்லா மாணவர்களுக்கும் ஒரே தேர்வு என்றால் ஏன் இத்தனை விதம்விதமான பாடத் திட்டங்கள் ? ஏன் எல்லோருக்கும் ஆசிரியர்கள் ஒரே மாதிரி நியமிக்கப்படுவது இல்லை?
பனிரெண்டாம் வகுப்பு படித்த ஒரு மாணவன் எழுதும் தேர்வுக்கு ஏன் கசகச என்று இவ்வளவு ஃபார்மாலிட்டிகள்?
விளையாட்டுக்கு என்று ஒரு ரயில் விட முடிந்த அரசால் ஏன் மருத்துவப் படிப்புக்கான முக்கியத் தேர்வுக்கு என்று ஒரு ரயில் விட முடியவில்லை?
தீவிரவாதிகளை ஒழுங்காக கண்டு பிடிக்க முடியாமல் கோட்டை விடும் பொட்டை அரசுகள் நீட் தேர்வு எழுதிய தமிழ் நாட்டு மாணவ மாணவியரை மட்டும் ஏன் முடியை அவிழ்க்கச் சொல்லி, உள்ளாடையை அவிழ்க்கச் சொல்லி , முழுக்கைச் சட்டையைக் கிழித்து தேர்வு எழுதும் தமிழ் நாட்டு மாணவர்களின் மன நிலையைச் சிதைக்க வேண்டும் ? இந்த நடைமுறைகளைக் கொண்டு வந்தவன்/ ள் எல்லாம் ஒரு அப்பனுக்கு பிறந்தவன்/ள் என்றால் இந்திய நிலத்தை ஆக்கிரமிக்கும் சீனப் படைகளிடம் இவற்றைக் காட்ட வேண்டியதுதானே?
என்ற ரீதியில் படம் கேட்கும் கேள்விகள் அபாரமானவை.
விதார்த்துக்கு சர்க்கார் என்று பெயர் வைத்து அவரது மரணக் காட்சியில் சர்க்கார் மரணம் என்று போஸ்டர் அடித்து ஒட்டி இருப்பது அட்டகாசமான . டைரக்டோரியல் டச்.
தமிழ்நாடு அமைச்சராக தெலுங்கு வாசனையோடு தமிழ் பேசும் விஜய்பாபுவை நடிக்க வைத்து இருப்பதன் பின்னால் உள்ள நுட்பம் அபாரம் .
மனைவியின் கோபத்தை மதித்து ஏற்று தன் லட்சியத்தைக் கை விட்டு , மனைவியின் ஆசைப்படி மகனைப் படிக்க வைக்க , நிலம், நகை , மரியாதை ஆரோக்கியம் அனைத்தும் இழந்து செத்தே போகும் கதாபாத்திரத்தில் வாழ்ந்து சிகரம் தொட்டு இருக்கிறார் விதார்த்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, பாடுபட்டு, ஒரு நிலையில் கணவன் இறந்த நிலையில் உடைந்து நொறுங்கும்போது கலங்க வைக்கிறார் வாணி போஜன்
மாணவன் கிருத்திக் நடிப்பும் சிறப்பு.
போலீஸ் கம் வழக்கறிஞராக கவனிக்க வைக்கிறார் ரகுமான்
தொழில் நுட்ப ரீதியாக இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .
விதார்த் மரணத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடும் பாடலை இன்னும் சிறப்பாக உருவாக்கி , அதில் கல்வி கடைச் சரக்கான கொடுமையை பாட்டாக சவ ஊர்வலத்தில் ஒப்பாரிப் பாட்டாக வைத்து தெறிக்க விட்டு இருக்க வேண்டாமா? சும்மா பூச்சி புடிச்சுக்கிட்டு …
போலீசே வக்கீலாக வருவது போன்ற சினிமாத்தனங்களை தவிர்த்து இருக்கலாம் .
இரண்டாம் பகுதி செய்தியாக இருக்கிறது .பல காட்சிகள் பாமர மக்களையும் ஈர்க்கும்படி சரியான உணர்வுக் குவியல் உருவாகும்படி எழுதப்படவோ எடுக்கப்படவோ இல்லை .
தேர்வில் மகன் வாங்கிய மதிப்பெண் என்ன என்பதை வைத்து சில நல்ல காட்சிகளை அமைத்து இருக்கலாம். விட்டு விட்டார்கள்.
ஆரம்பம் முழுக்க படம் இப்படிப்பட்ட ஒரு முடிவை நோக்கியே போகிறது என்பது புரிந்து விட்டதால், அதிர்ச்சியின் அளவு குறைந்து விடுகிறது . ட்ரீட்மென்ட்டை மேம்படுத்தி இருக்க வேண்டும்.
இனியும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், அதற்காக அநியாயமாக் லட்சங்களை கோச்சிங் சென்டர் மாபியாக்களுக்கு கொட்டிக் கொடுக்கும் அநியாயம் நீடித்தாலும், நீட் தேர்வு மைய அராஜகங்கள் இப்போது கொஞ்சம் குறைந்து உள்ள நிலையில், நம்ம தமிழ்ப் பிள்ளைகள் இப்போது நீட் தேர்வையும் பந்தாட ஆரம்பித்து விட்ட நிலையில், சில காட்சிகள் இப்போ தேவையா என்ற கேள்வி வரலாம் ( இது அந்தக் காலக் கட்ட படமாகத்தான் சொல்லப்படுகிறது . தவிர நீட் தேர்வு முறையால் என்ன இழந்தோம் என்பது தெரிய வேண்டும் இல்லையா? எனவே என்னைப் பொறுத்தவரை இந்த விசயம் குறை இல்லை)
இப்படி சில குறைகள் இருந்தாலும் …
தங்கத்திலே சில குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ — இந்தப்
படத்தினிலே சில குறை இருந்தாலும் இதன் தேவை குறைவதுண்டோ ?
ஒருமுறை அஞ்சாமை பாருங்கள்…
உங்கள் கண்ணில் ஒரு துளி நீரோ , உங்கள் மனதில் ஒரு துளி இரக்கமோ சுரந்தால் நீங்கள் மனிதன் .