
இதற்காக நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் “கோச்சடையான் படத்துக்கான வீடியோ கேமை 1.2. மில்லியன் மக்கள் பார்த்தார்கள் . ஆனால் அஞ்சான் படத்துக்கான இந்த மொபைல் கேமை 12 மில்லியன் மக்கள் பார்ப்பார்கள்” என்று படக் குழுவினர் பெருமிதப்பட்டு பேசியது ஒரு பக்கம் இருக்கட்டும் .
ஆனால் அஞ்சான் படத்துக்காக வெளியிடப்பட்டுள்ள மொபைல் கேம் குழந்தைகள் மனதில் வன்முறையை தூண்டும் படியாக இருப்பதுதான் வருத்தமான விஷயம்.
சூர்யா காரில் பலரையும் துரத்தி செல்வதுதான் இந்த மொபைல் கேமின் அடிப்படை .. விளையாட்டு முழுக்க துப்பாக்கி , ஷாட் கன் உட்பட பலவித ஆயுதங்கள், குண்டு வெடிப்பு, கார் மீது காரை மோதுவது, கார் சிதறுவது என்று இதில் வன்முறை மிகுந்து காணப்படுகிறது. எப்படி குழந்தைகள் WWF பார்ப்பது அவர்களின் மன நலன் குண நலத்தை பாதிக்குமோ அப்படியேதான் இதுவும் பாதிக்கும் என்பதே மனநல மருத்துவரின் கருத்தாக உள்ளது
ஒரு பிரபல சினிமா பெயரில் வரும் விளையாட்டில் , சிறுவர் சிறுமியரை அதிக ரசிகர்களாக கொண்ட ஒரு நடிகரின் படம் தொடர்பாக வரும் மொபைல் கேம் விளையாட்டில் இவ்வளவு வன்முறையை வைக்க வேண்டுமா ? அதற்கு பதிலாக வீரம் , நல்ல குணங்கள் இவற்றை அடிப்படையாக வைத்தோ அல்லது புதுமையான கார் பந்தய அடிப்படையிலோ வெகு சுவாரஸ்யமாக இந்த கேமை வடிவமைத்து இருக்கக் கூடாதா என்பதுதான் சமூக அக்கறையாளர்களின் அஞ்சாத கேள்வி .
யாராவது பதில் சொல்வார்களா ?