பிரபல திரைப்படச் சண்டை இயக்குனரும் தமிழார்வலருமான சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் உள்குத்து உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகராகவும் சிறப்பாக இயங்குபவர் .
இது போதாதென்று ஃபார்மர் புரடக்ஷன்ஸ் (farmer productions – விவசாயிகள் தயாரிப்பு நிறுவனம் .) என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி,
விமல் ,பசுபதி, நந்திதா , இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் நடிக்க தங்கம் சரவணன் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் அஞ்சல என்ற படத்தை தயாரித்து இருக்கிறார் திலீப் .
படத்தை அவ்ரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ் வாங்கி வெளியிடுகிறார் .
படத்துக்கான டீ போடு என்ற பாடல் நம்ம ஊரில் டீ எப்படி தவிர்க்க முடியாத ஒரு பானமாக விளங்குகிறது என்பதை விளக்குகிறது .
விஜய் சேதுபதி, ஜீவா , சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து இருக்கும் இந்தப் பாடல் அஞ்சல படத்துக்கான நல்ல அறிமுகமாக விளங்குகிறது .
பாடலைப் பார்ப்பதற்கான இணைப்பு கீழே