
படத்துக்கான விளம்பரமாக talking eli என்ற பெயரில் ஒரு மொபைல் அப்ளிகேஷன் வெளியிட்டுவிட்டு அதன் தொடர்சியாக படம் பற்றிப் பேசினார் இயக்குனர் , ஹீரோ மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோர்
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் யுவராஜ் தயாளன் “பொதுவாக ஒரு நல்ல கூட்டத்தில் தப்பான ஒருவன் இருந்தால் அவனை கருப்பு ஆடு என்று சொல்வார்கள். அதே போல ஒரு மோசமான கூட்டத்தில் ஒரு நல்லவன் சிக்கிக் கொண்டால் அவனை எலி சிக்கிருச்சி என்பார்கள் . அந்த எலிதான் இந்த படத்தில் வடிவேலு சாரின் கேரக்டர் .
ஒரு தவறான கூட்டத்தில் புகுந்து ஒருவரை ஒருவருக்கு போட்டுக் கொடுத்து அவர்களை குழப்புவதற்காக செல்லும் வடிவேலு நினைத்தது போல, விஷயம் அவ்வளவு சுலபமாக இல்லை . நூறு பூனைக்கு நடுவில் ஒரு எலி மாட்டியது போல ஆகிறது நிலைமை. அப்புறம் என்ன நடந்தது என்பதை காமெடியாக சொல்வதே இந்தப் படம் .
இந்தக் கேரக்டருக்காக எலியின் உடல் மொழிகளை அப்படியே பின்பற்றி நடிக்கிறார் வடிவேலு . இருட்டறைக்குள் நீங்கள் திடீரென விளக்கை போட்டால் , அதுவரை சுற்றிக் கொண்டிருந்த எலி சட்டென்று அதிர்ந்து நிற்கும் . அப்புறம் நாம் நகரும்போதுதன் அதுவும் ஓடும் . ஒரு திசையில் ஓடும் எலி எதிரே முட்டு சுவர் வந்தாலும் அஹே வேகத்தில் சட்டென்று பின்னோக்கி திரும்பி அதே வேகத்தில் ஓடும். வேறு எந்த பிராணியாலும் அப்படி செய்ய முடியாது . படத்தில் வடிவேலுவின் நடவடிக்கைகள் எல்லாம் அப்படியே இருக்கும்
அதே போல வீட்டுக்குள் எலி அடிக்க வேண்டும் என்று கிளம்பினால், எலி அடிக்கப்பட்டாலும் சரி தப்பித்தாலும் சரி அதற்குள் வீடே கந்தர கோலம் ஆகிவிடும் . படத்தின் காட்சிகளிலும் அந்த தன்மை காமடியாக இருக்கும் .
படத்தை 1960களில் வந்த தமிழ் படங்களின் பாணியில் எடுத்துள்ளோம். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் வந்த பாணியில் திரில் இசையை வித்யாசாகர் அமைக்கிறார் . அதே நேரம் பழைய தமிழ் சினிமாவை கிண்டல் செய்கிற படமும் இல்லை .
படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக சதா நடிக்கிறார் . கொள்ளைக் கூட்டத்தில் நடனமாடும் பெண்ணாக அவர் வருகிறார் .
சதா கிளாமரை முன்னிறுத்த வடிவேலு காமெடியை முன்னிறுத்தும்படி எல்லா காட்சிகளும் இருக்கும் . ” என்கிறார் யுவராஜ் தயாளன்.
காலத்தை வென்ற இந்திப் படமான ஆராதனாவில் இடம் பெற்ற சப் நோக்கி ரானி …” பாடல் இன்றும் இந்தியா முழுதும் ரசிக்கப்படும் ஒரு பாடல் .
ஆராதனா படம் தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ நடிக்க சிவகாமியின் செல்வன் என்ற பெயரில் எடுக்கப்பட்டபோது இந்த சப் நோக்கி ‘ பாட்டுக்கு இணையாக உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று .. என்ற பாடல் உருவானது .
ஆனால் இப்போது இந்த எலி படத்தில் சப் நோக்கி இந்திப் பாடலை அப்படியே பயன்படுத்தி வடிவேலு சதா நடிக்கும் பாடலாக படம் பிடித்து இருக்கிறார்கள் . பாடலுக்கு எம் ஜிஆர் ஸ்டைலில் வடிவேலு ஆட , இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் கெட்டப்பில் நடித்து இருக்கிறார் சதா .
இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது படம் .
” இந்தப் படத்துக்கு பிறகு ஹீரோவாக மட்டும் இல்லாம முன்ன மாதிரி மற்ற ஹீரோக்கள் படத்துல காமெடியனாகவும் நடிக்கப் போறேன் ” என்றதோடு வடிவேலு விட்டு விடவில்லை “மறுபடியும் அரசியலுக்கு வரணும்னு சூழல் வந்தா கண்டிப்பா வருவேன் “
எலி மாதிரி ஒரு புலியா? இல்லை புலி மாதிரி ஒரு எலியா?