அவ்னிமேக்ஸ், பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர் சி .,ஆர்யா , ராசி கண்ணா, ஆன்ட்ரியா, விவேக், யோகி பாபு, சம்பத் நடிப்பில் சுந்தர் சி இயக்கி இருக்கும் படம் அரண்மனை 3.
கோவில் பூசாரி (வேல. ராம மூர்த்தி) ஒருவரின் மகள் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்கப் போகும் ஜமீன்தார் (சம்பத்) ஒருவர் , மணப்பெண்ணின்(ஆன்ட்ரியா) அழகில் மயங்கி . எதிர்பாராத விதமாக தாலி கட்டி விடுகிறார் .

மனைவிக்கு குழந்தை பிறந்த பிறகுதான் தெரிகிறது , அது பழைய மணமகனின் குழந்தை என்று . குழந்தையோடு போய் விடுகிறேன் என்று மனைவி கெஞ்சியும் அவளையும் குழந்தையையும் கொன்று விடும் ஜமீன்தார் , வேலைக்காரன் ஒருவனின் குழந்தையை தனது குழந்தையாக வளர்க்கிறார்,
ஹாஸ்டலில் வளரும் அந்தப் பெண்ணை( ராஷி) கொன்று விட்டு , ஜமீந்தாரையும் கொல்ல முயல்கிறது மனைவியின் ஆவி . அதற்காக இளம்பெண்ணின் சிறுவயதுத் தோழனும் இப்போதைய அரண்மனை எலக்ட்ரீஷியனுமான இளைஞன் மேல் (ஆர்யா) ஏறுகிறது .

ஜமீன்தாரின் அக்காவின் ( நளினி) மருமகன்( சுந்தர் சி ) அரண்மனைக்கு வந்து விஷயங்களை அறிய, என்ன நடந்தது என்பதே அரண்மனை 3.
தாய்மை, பேய்மை, பக்தி , கிளாமர் , கலந்த கரம் மசாலா படம் .
அந்த அரண்மனை பிரம்மாண்டமாக இருக்கிறது. காடுகள் லொக்கேஷனும் சிறப்பு

சிஜி காட்சிகள் அசத்தி இருக்கிறார்கள் .
இதுவரை தமிழில் காட்டாத கவர்ச்சியோடு ராஷி நீச்சல் குளத்தில் குளிக்கிறார் .
விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி ஆகியோர் காமெடிக்கு காமெடிக்கு என்று இருக்கிறார்கள் .

யு கே செந்தில் குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.
சத்யாவின் பின்னணி இசையும் அந்த தாய்ப்பாச பாடலும் சிறப்பு.
பிரம்மாண்டமாக படமாக்கி இருக்கிறார் சுந்தர் சி .